குழந்தை செல்வம்
குழந்தைகள் ஒரு வீட்டில் இருந்தால் அந்த வீடு எப்படி மாறுதலும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும் என்பது அதை உணர்ந்தவர்களுக்கு தெரியும்.
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர் -திருக்குறள்-
குழந்தை செல்வம் இல்லை என்றால், அவர்களின் பிறவிப்பயன் கிட்டுவதில்லை என்பார்கள். திருமணமான தம்பதியர் தங்களுக்கு நெருக்கம் தொடங்கியதும் ஒரு வாரிசை, பிள்ளை கனி அமுதிற்காக எதிர்பார்த்து கனவு காண்பது இயற்கையானதே. அந்த
கனவு
நினைவாகி
பிள்ளையை
தங்களின்
கையில்
அள்ளி
எடுக்கும்
போது
தாய்,
தந்தையர்
அடையும்
ஆனந்தத்திற்கு
எல்லையே
இல்லை.
வேத சாஸ்திரங்களின் புத்திர பாக்கியத்தின் பெருமையை எடுத்துக் காட்டுகிறது. ஒருவர் அவரின் கர்ம வினைகளின் காரணமாக தான் பிறக்கின்றான். அந்த கர்மா தீர ஒரு பிள்ளை வேண்டும் என்பதால் திருமணம் செய்து கொள்கின்றான்.
சாஸ்திரங்களில், “பும் நாம நரகாது த்ராயதே இதி புத்ரா:” என சொல்லப்படுகிறது. அதாவது, “தன் தகப்பனின் ஆத்மாவை புத் என்ற நரகத்திலிருந்து காப்பாற்றுகிறார்” என்பதால்தான் புத்திரன் என்று குறிப்பிடப்படுகிறது. பொதுவாக புத்திரன் என்றாலோ ஆண் பிள்ளை என்று குறிப்பிடப்பட்டாலும், பிருஹத் ஜாதகம் போன்ற நூல்களில் புத்திரன் என்பதற்கு ஆண், பெண் இருவரையும் குறிப்பதாக அமைந்துள்ளது.
5ஆம் பாவம்:
ஒரு
ஜாதகத்தின்
5ஆம்
பாவம்
பூர்வ
புண்ணிய
மற்றும்
பிள்ளை
செல்வம்
பெறக்
கூடிய
பாவம்.
நம்
ஜோதிட
அறிஞர்கள்
பூர்வ
புண்ணியத்தையும், புத்திர பாக்கியத்தையும் ஒரே ஸ்தானத்தில் வைத்தது தான் மகரிஷிகளின் மகிமை நமக்கு புரிகிறது. ராசி மண்டலத்தில் 5ஆம் பாவமாக அமைவது சிம்மம். அதன் அதிபதி சூரியன். இவரே தந்தைக்கான காரகனாக அமைகிறார்.
பூர்வ புண்ணியங்கள் சிறப்பாக இருந்தால் தான் புத்திர பாக்கியம் கிடைக்கும். அடுத்த பிறவியில் குழந்தை செல்வம் பெற இந்த பிறவியில் ஓரளவு நல்ல காரியங்களை செய்ய வேண்டும் என்பது விதி.
பாக்கிய ஸ்தானமாக 9ஆம் பாவம் குறிப்பிடப்படுகிறது. ஒன்பதாம் ஸ்தானமாக அமைவது தனுசு அதன் அதிபதி குரு புத்திர காரகன். 5ஆம் பாவமான சிம்மத்திலிருந்து 5ஆம் இடமாக இருப்பது 9ஆம் பாவம் என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தை பாக்கியத்திற்கான மந்திரம்:
குழந்தையின்மை என்பது ராமாயண காலத்திலேயே இருந்துள்ளது. தசரதர் தனக்கு குழந்தை இல்லை என்பதை, அந்த குழந்தை பாக்கியம் பெற குரு வசிஷ்டரின் ஆலோசனைப் படி ரிஷ்யசிருங்கரை அழைத்து ‘புத்திரகாமேஷ்டி’
யாகம்
செய்ததாக
ராமாயணத்தில்
குறிப்பிடபட்டுகிறது.
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ளெம்
தேவகி ஸுத கோவிந்தா: வாசுதேவ ஜகத்பதே
தேஹிமே தனயம் கிருஷ்ணா த்வாமஹம் சரணம் கத:
தேவ தேவ ஜகந்நாதா கோத்ர வ்ருத்திகர ப்ரபோ
தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ்பந்தம் யசஸ்விமம்
பொருள்:
இந்த மந்திரத்தில் தேவகி மைந்தனாக இருக்கக் கூடிய வாசுதேவனே, உலகத்துக்கெல்லாம் பதியாக இருக்கக் கூடியவனே, எனக்கு நல்ல குழந்தை கிடைக்க உன்னை நான் சரணடைகின்றேன். தேவர்களுக்கெல்லாம் தேவனே, ஜகன்நாதரே என் குலம் விருத்தி அடைய எனக்கு
சீக்கிரம் தீர்க்காயுளுடன் கூடிய நல்ல குணங்களுடன் கூடிய பிள்ளையைக் கொடுப்பாயா என
வேண்டுவதாக இந்த மந்திரங்கள் அமைந்துள்ளன.
குழந்தை செல்வம் பெற வேண்டுவோர் மேற்கண்ட ஸ்ரீ சந்தான கோபால மந்திரத்தை தினசரி காலையில் பக்தி சிரத்தையுடன் 16 முறை பாராயணம் செய்து வெண்ணெய் நெய்வேத்தியம் செய்து சந்தான கோபாலனை வழிபட்டு வெண்ணையை தம்பதிகள் வெறும் வயிற்றில் அருந்த விரைவில் குழந்தை செல்வம் பெறுவார்கள்.
யோகக் கலையில் குழந்தை பாக்கியம்:
அருகிலுள்ள மனவளக்கலை யோகா மன்றங்களில் காயகல்ப யோகப்பயிற்சி எனும் அற்புதமான கலை கற்றுக் கொடுக்கப்படுகிறது இதை கற்றுக்கொண்டு தம்பதிகள் இருவரும் செய்து வரும்பொழுது சிறப்பான, விரைவான, அறிவில் சிறந்த குழந்தை பிறக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக