குண்டலினி யோக சூட்சும ரகசியம் - ஆறு ஆதாரத் தலங்களின் தோற்றம், இயக்கம், சுவாசம், பீஜ மந்திரம்,
நிறம் மற்றும் அதிதேவதைகள் முழு விளக்கங்கள்:
மனித வாழ்வை செம்மை படுத்த சித்தர்கள் அருளிய குண்டலினி யோகம் சூட்சுமம் ரகசியம் புரிந்து செயல்படுத்தி நலம் பெற தொடர்பு கொள்க:
- செந்தில்குமார் தொலைபேசி எண்: 9655472931
- நச்சாந்துபட்டி, புதுக்கோட்டை மாவட்டம்.
ஆறு ஆதாரத் தலங்களின் தோற்றம், சுவாசம்:
ஆதாரத் தலங்கள் எப்படி உருவாகின? சுவாசம் எப்படி ஏற்படுகிறது? ஆதாரத் தலத்தில் நடைபெறும் சுவாசம் எத்தனை? அதன் விரயம் எவ்வளவு என்று தெரிந்தால், ஒவ்வொரு ஆதார சக்கரத்திலும் எவ்வாறு தியானம் செய்வது என்பது புரியும்.
மனிதர்களின் சுவாசம், உதரவிதானம் சுருங்கி விரிவதாலும், மார்புக் கூடு கீழே இறங்கி மேலே ஏறுவதாலும், மார்பு மேலே உயர்ந்து, கீழே தாழ்வதாலும், சுவாசம் ஏற்படுகிறது. இந்த இயக்கத்தின்போது நுரையீரலின் உட்பகுதியில் இருக்கும் அழுத்தம், வெளிக்காற்றின் அழுத்தத்தைவிட குறைந்தும், அதிகரித்தும் இருப்பதால், காற்று உள்ளேயும், வெளியேயும் சென்று வருகிறது. மூச்சுக்காற்று அதன் இயக்கம்போல் மனிதனை இயக்குகிறது. இந்தச் செயல்களை 28 காரணிகள் வழியே GOYTEN MEDICAL PHISIOLOGY விவரிக்கிறது. ஆனால் இந்த இயக்கங்கள் எப்படி உருவாகின்றன என்பது குறித்து தெளிவான விளக்கங்கள் இல்லை.
தவயோகி உடல் அசையாமல், தனது விருப்பம் போல் மூச்சுக் காற்றை இயக்கி மனதை ஒருநிலைப்படுத்துகிறார். "சித்திரம் போலே இருந்து வாசி பாரு" என்கிறார் காகபுசுண்டர் (பெருநூல் காவியம் பாடல் 73). இது எப்படிச் சாத்தியம்? இதைச் சித்தர்கள் தெளிவாகச் சொல்லியுள்ளார்கள்.
ஆதாரங்கள்:
- மூலாதாரம்
- சுவாதிஷ்டானம்
- மனிப்பூரகம்
- அனாகதம்
- விசுத்தி
- ஆக்கினை
ஆணின் விந்துவும், பெண்ணின் கருமுட்டையும் இணைந்து, எம்பிரியானிக் ஸ்டெம் செல்லை உருவாக்குகின்றன. இதைக் காகபுசுண்டர் "சிசுவின் குஞ்சு" என்கிறார். இதன்பின் தாயின் கருப்பையில் நஞ்சு உருவானது. அதன் மூலம் சிசுக் குஞ்சு வளர்ந்து, மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞா ஆகிய ஆறு தலங்களும், வீணாதண்டு என்ற முதுகுத் தண்டும் உருவாகின. ஆறு ஆதாரத் தலங்களில் ஆறு சக்கரங்கள் உருவாகின.
இந்த ஆறு சக்கரங்களும் நஞ்சு மூலமும், பனிக்குடநீர் மூலமும், பிரபஞ்சச் சக்தியையும், உடல் சக்தியையும் பெற்று, அனைத்து உறுப்புகளையும் உருவாக்கின. குழந்தை முழு வளர்ச்சி பெற்றது. கருப்பையில் முழு வளர்ச்சி பெற்ற குழந்தையை, தாயின் வாயுக்கள் இயக்கம் வெளியே தள்ளியது. மேலும் குழந்தைக்குக் கொடுத்தப் பிரபஞ்சச் சக்தியையும், உடல் சக்தியையும் நிறுத்தியது. தாயின் கருவில் இருந்த குழந்தையின் நுரையீரல் காலியாக, காற்று நிரப்பப்படாமல் இருந்தது. தலை வெளியே வந்தவுடன், பிரபஞ்சச் சக்தி குழந்தையின் நுரையீரலில் அழுத்த வேறுபாடு காரணமாக உள்ளே புகுந்தது. இந்த பிரபஞ்சச் சக்தி ஆறு ஆதாரங்களால் கிரகிக்கப்பட்டு, உடல் சக்தி உருவானது. இதன்பின் சக்கரங்கள் சுவாசத்தை இயக்கத் தொடங்கின. குழந்தை வெளிக்காற்றைச் சுவாசித்து, உணவு உண்டு, ஆதாரச் சக்கரங்களின் இயக்கத்தால், தாயின் உதவியோடு தானே வளர ஆரம்பித்தது. வளர்ந்த பின்னர், தானே செயல்படுகிறது.
இதை அகத்தியர், "அந்தரங்க தீட்சா விதி" பாடல்களில் சொல்லியுள்ளார்.
தானென்ற சூக்ஷமடா விந்து நாதம்
கோனென்ற குருஅருளால் அங்குதித்தும்
ஊனென்ற மடபதிக்கு உறுதியான
தேனென்ற ஜீவாத்மா பரமாத்மாவாய்
அனுக்கிரகத்தால் உதித்த கணபதி வல்லபையும் மைந்தா
அகத்தியர், அந்தரங்க தீட்சா விதி.
ஆளப்பா பிரம்மாவும் சரஸ்வதியும் ஆனார்
மேலப்பா ருத்திரனும் ருத்திரியும் ஆனார்
காரப்பா சதாசிவனும் மனோன்மணியும் ஆனார்
நேரப்பா அக்னிதான் ஜீவாத்மாவை
பரமாத்மாவாய் பேரப்பாபெருகி நின்ற சடத்துக்குள்ளே
ஆகவே, ஆறு ஆதாரங்களும் அதில் உள்ள சக்கர இயக்கமும் மூச்சுக் காற்றை இயக்குகின்றன. இச்சக்கரங்களில் வாயு எனும் பிரபஞ்சச் சக்தி பரமாத்மாவாக உள்ளது. (32 கலை = 32 நொடிகள் உள்ளே இழுக்கும் காற்று). இந்த பிரபஞ்ச சக்தியால் உடலில் வெப்பம் உருவாக்கப்படுகிறது. இது அக்னி (கும்பகம் 64 நொடிகள் = அக்னிகலை 64) ஆகும். இந்த அக்னி ஜீவாத்மாவாக இயங்குகிறது. எனவே, உடல் இயக்கங்கள் அனைத்தும் (மூச்சு இயக்கம் உட்பட) ஆறு ஆதாரத்தலங்களும் அதில் உள்ள சக்கரங்களும் இயங்குகின்றன. இதுவே அனைத்து இயக்கங்களுக்கும் காரணம்.
ஆதாரத்தலங்களில் சுவாசம் மற்றும் விரயக் கணக்கு
ஆதாரத்தலம் |
சுவாசம் |
விரயம் |
மூலாதாரம் |
3600 |
1200 |
சுவாதிஷ்டானம் |
3000 |
1000 |
மணிபூரகம் |
3000 |
1000 |
அனாகதம் |
3000 |
1000 |
விசுக்தி |
3000 |
1000 |
ஆக்ஞா |
3000 |
1000 |
பிரம்மரந்தரம் (சகஸ்ராரம்) |
3000 |
1000 |
அகத்தியர் சொன்ன சுவாசக் கணக்கு
கணிதமுடன் தானிருக்கும் இருஅறுநூறப்பா வாளப்பா பிரிதிவியில் ஆயிரமாம் பாரு
அகத்தியர், சௌமிய சாகரம்
அகத்தியர், சௌமிய சாகரம்
இவ்விதம் ஒருநாளில் 21,600 சுவாசம் நடைபெறும். பயன்பட்டது 14,400, விரயம் 7,200. இவ்விதம் விரயமாகும் சுவாசத்தில் உள்ள பிராண சக்தியை அல்லது உயிர் சக்தியானது விரயம் ஆகாமல் இருக்க, வாசியை உருவாக்கி, (குண்டலினி சக்தி) ஆதாரத் தலங்களில் மனம் ஒன்றி (வாசியோகம்) செய்ய வேண்டும். அப்பொழுது அமிர்தம் சுரக்கும். இந்த அமிர்தம் உடல் நோயைப் போக்கி இளமை தந்து வாழ்விக்கும். ஆறு ஆதாரத் தலங்களைப் பற்றி, அடுத்தடுத்த பாடங்களில் விரிவாகக் காண்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக