சித்தர்கள் மனிதனின் கர்மாவை மாற்ற முடியும் என்று சொல்லப்படுகிறது. கர்மா பற்றிய சித்தர்களின் கருத்துகள் பற்றிய தகவல்கள் இங்கே
கர்மா பற்றிய சில தகவல்கள்:
- கர்மா என்பது இந்து மதத்தின் ஒரு கருத்தாகும்
- கர்மா என்பது கடந்த கால நன்மையான செயல்களிலிருந்து நன்மை பயக்கும் விளைவுகளையும், தீங்கு விளைவிக்கும் செயல்களிலிருந்து தீங்கு விளைவிக்கும் விளைவுகளையும் விவரிக்கிறது
- சஞ்சிதா கர்மா என்பது மூன்று வகையான கர்மங்களில் ஒன்றாகும்
- பல பிறவிகளின் தொடர்பாக வித்தில் பதிவாகித் தனக்கும், தன் மூலம் பிறக்கும் பிற்காலக் குழந்தைகளுக்கும் அறிவு ஒழுக்கத் தரங்களாக சூக்கும வித்துவில் பதிந்து தொடருகின்ற வினைப் பதிவே சஞ்சித கர்மம் ஆகும்
- சித்தர்கள் விதியைப் பற்றியும், கர்மவினை பற்றியும் அனைவராலும் நம்பப்பட்டு வருகிறார்கள்
- பல ஜென்ம கர்ம வினைகள் தீர சித்தர்கள் அபூர்வ பரிகாரங்களைச் சொல்லியுள்ளார்கள்
கடவுளும் பிரபஞ்சமும் கர்மவினையும்:
இங்கு நாம் அனைவரும் முதலில் கடவுள் தன்மையையும் பிரபஞ்ச இயக்கத்தையும், கிரகங்களின் சஞ்சாரத்தையும் முழுமையாக அறிந்துகொள்வது அவசியமாகிறது. இந்த பூவுலகத்தில் எத்தனை கோடி பிறப்புகள் உயிர்வாழ்கின்றன, அத்துனை கோடி ஜீவராசிகளுக்கும் இந்தந்த விநாடியில் இந்த பலன் தான் நிகழ வேண்டுமென்று படைத்த பிரம்மாவோ காக்கும் விஷ்ணுவோ உட்கார்ந்து தீர்மானித்துக் கொண்டிருக்க இயலுமா?
இயலாது என்பதே உணமை. சரி அப்படியென்றால்
நமக்கு உண்டாகும் இன்பமோ துன்பமோ எப்படி நம்மை வந்தடைகிறது. ஒன்று புரிந்து கொள்ள நம்
முன்னோர்களும், சித்தர் பெருமக்களும், ஞானிகளும் எல்லா விஷயத்தையும் சொல்லியுள்ளார்கள்
நாம் தான் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதே நிதர்சனம்.
"தீதும் நன்றும் பிறர்தர
வாரா"
நமக்கு உண்டாகும் நல்ல பலன்களும்,
தீய பலன்களும் பிறரால் நமக்கு வந்ததல்ல, இவை அனைத்துமே நாம் உண்டாக்கியது தான். புரியும்படி
சொன்னால் கடந்த பிறவிகளில் நாம் செய்த பாவ புண்ணியங்களின் வித்தே இப்பிறவியில் கர்மவினை
என்ற பெயரில் வினைப்பயன் எனும் விருட்சமாக வளர்ந்து நம்மை வந்தடைகிறது.
இன்னும் சற்றே விளக்கமாக பார்த்தோமேயானால்,
கடந்த பிறவிகளில் செய்த தொழிலில் நாம் செய்த பாவம் அல்லது புண்ணியம் இருக்குமானால்
இப்பிறவியில் தொழிலின் வாயிலாக அந்த பலனை திரும்ப பெறுவோம். அதாவது முற்பிறவியில் தொழில்
வஞ்சம் புரிந்திருந்தால் இப்பிறவியில் தொழில் அமையாமை, தொழிலில் விருப்பமில்லாமை, தொழிலில்
நஷ்டம், கடன், பழி மற்றும் அவமானங்களை சந்தித்தல் போன்ற அவதிகளை அடைய நேரிடும். இதே
முற்பிறவியில் நல்ல முறையில் தொழில் செய்திருந்தால் இப்பிறவியில் தொழில் இடையூறு இல்லாமல்
வாழலாம். கடந்த பிறவியில் தம்பதியருக்குள் பாவம் செய்திருந்தால் இப்பிறவியில் அவர்கள்
மூலமே துன்பம் துயரங்கள் மிகுந்திருக்கும். இவ்வாறே உடலில் உண்டாகும் தீராத வியாதிகளும்
கூட கர்ம வினையினால் உண்டான தொந்தரவே! இதன் மூலம் நம்முடைய சுகதுக்கங்கள் தீர்மானிக்கப்படுவது
கடந்த பிறவிகளில் நாம் செய்த பாவ புண்ணியங்களினால் எழுந்த கர்மவினையே என்பது உறுதியாகிறது.
நியூட்டனின் மூன்றாம் விதி:
நம் வேதங்களில் "கர்மா" என்ற சொல்லுக்கு நாம் செய்யும் "செயல்" என்பது பொதுவான பொருளாகும். ஒவ்வொரு செயலுக்கும் எதிர் செயல் உலகத்தில் உண்டு. இதனை நியூட்டனின் மூன்றாம் விதிப்படி ஆங்கிலத்தில் "To Every Action
There is an Equal and Opposite Reaction" என்று சொல்வார்கள். நம் நம்பிக்கைகளிலும் நாம் செய்த வினைகளைக் குறிக்க கர்மா என்ற சொல் பயன்படுத்தபடுகிறது. கர்மவினை என்றும் வினைப்பயன் என்றும் நாம் பழக்கத்தில் சொல்வது இந்த நியூட்டனின் மூன்றாம் விதியைத்தான்.
"ஒருவன் எப்படி செயல்படுகிறானோ அவனும் அதைப்போலவே ஆகின்றான்"
யஜூர்வேதம்: பிரகதாரண்ய உபநிஷத்
உருவெடுத்த பின்கொண்ட வினைபதிவு பிராப்தம்
இருவினையும் கூடி எழும் புகுவினையே ஆகாமியம்
ஒருவினையும் வீண்போக உள்ளடங்கி பின்விளைவாம்"
மேற்கண்ட பாடலின் படி மனிதன் தன் வாழ்நாளில் மூன்று வகையான கர்ம வினைகளை பெற்று அனுபவிக்கிறான். அவை
·
சஞ்சித கர்மம்,
·
பிராப்த கர்மம்,
· ஆகாமிய கர்மம்.
இதில் சஞ்சித கர்மம் என்பது:
பிராப்த கர்மா என்பது:
இப்பிறவியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும்
சஞ்சித கர்மாவின் ஒரு பகுதியாகும். அதாவது நாம் இப்பிறவியில் உடலெடுத்து வாழுங்காலத்தில்
நம் ஜீவிதத்திற்க்காக நாம் செய்யும் வினையின் காரணமாக பிறருக்கு ஏற்படும் நன்மை தீமைகளால்
உண்டாகப்போகின்ற கர்மவினை, இந்த கர்மாவால் விளையும் பலனையும் நாம் இப்பிறவியிலேயே அனுபவிக்க
வேண்டி வரும்.
மூன்றாவதாக ஆகாமிய கர்மா:
இப்பிறவியில் நாம் வாழுங்காலத்தில் நம் ஆசைகளால் (காம, குரோத, லோப, மத மற்றும் மாச்சர்யங்களால்) பிற உயிர்களுக்கு நேரடியாக செய்யும் அல்லது மறைமுகமாக செய்யும் நன்மை தீமைகளின் தொகுப்பாகும். இந்த வினைகளின் பலனை இப்பிறவியிலேயே அடையலாம் அல்லது நமது சஞ்சித கர்மத்தோடு சேர்க்கப்பட்டு எதிர்வரும் பிறவிகளிலும் அனுபவிக்க நேரிடலாம்.
இந்த கர்மவினைகளில் இருந்து யாரும் தப்பிவிட இயலாது, அனைவரும் கர்மவினையில் சிக்கி உழன்றாக வேண்டியதுதான். நாம் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், குழப்பங்கள், எதிர்ப்புகள், நஷ்டங்கள், விரயங்கள், கடன்கள், பிரிவினைகள், முடக்கங்கள், விபத்துகள், நோய்கள், துன்பங்கள், துயரங்கள் அனைத்தும் நான் மேலே குறிப்பிட்ட கர்ம வினைகளின் சாராம்சம் ஆகும்.
நம் வாழ்வில் சந்திக்கும் அத்தனையும் கர்மா விளக்கம்:
நாம் நம் வாழ்வில் எதிர்கொள்ளும்
பிரச்சினைகளான குழப்பங்கள், எதிர்ப்புகள், நஷ்டங்கள், விரயங்கள், கடன்கள், பிரிவினைகள்,
விபத்துகள், முடக்கங்கள், நோய்கள், கஷ்டங்கள், துன்ப துயரங்கள். அதேபோல சந்தோசங்களும்,
இன்பமும், செல்வமும், நல்தொழிலும், ஆரோக்கியமும், நல்வாழ்வும் என இவையனைத்துமே மேற்குறிப்பிட்ட
கர்மவினைகளின் பலன்களாகும். இந்த கர்மாவை களைய நம்மில் பலர் பல ஆலயங்களுக்கு சென்று
பலவிதமான பரிகார நிவர்த்திகளை செய்தும் வினைப்பலன் மாறவில்லை, நம் வேதனை தீரவில்லை,
கடன்களும் குறையவில்லை. அப்படியென்றால் நம் கர்மவினையை தீர்க்க வழியே இல்லையா?
உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் அவரவர்களின் கர்மவினையை இயக்கும் கர்மதெய்வம் ஒன்று உண்டு. அந்த கர்ம தெய்வத்தின் தாள் பற்றி தொழுது வந்தாலே கர்மவினையால் விளையும் கெடுபலன் குறைந்து நன்மைகள் நடக்கத் துவங்கும். நமக்கு வரும் கர்மவினை பலங்கள் நம்முடைய எந்த தவறினால் வந்தது யாருக்கு எந்த வகை தீமை செய்ததால் வந்தது என்றறிந்து அதற்கு இப்பிறவியில் எந்த வகையான பூஜைகள், தானங்கள், பரிகார நிவர்த்திகள் செய்ய முடியுமோ அவை அனைத்தும் செய்ய செய்ய கர்ம வினைகள் தீர்ந்து பிறவி தொடர் அற்றுவிடும்.
கர்மவினைகள் போக்க மற்றொரு வழி:
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களால் தொடங்கப்பட்ட மனவளக்கலை யோகாவில் எளிமையான உடற்பயிற்சி, தியானம், காயகல்பம், அகத்தவும் இது போன்ற பயிற்சிகளை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் நம்முடைய கர்ம வினைகள் தீர்ந்து பிறவி பிணியை நீக்கும்.
செந்தில்குமார்
செல்: 9655472931
நச்சாந்துபட்டி,
புதுக்கோட்டை மாவட்டம்.
"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக