பிராணன் என்பதன் விளக்கம்:
மனிதன், தான் இயங்குவதற்கு இப்பிரபஞ்சத்திலிருந்தே ‘சக்தியினை’மூச்சாக இழுத்துக்கொள்கிறான், அந்த ‘சக்தி’தான் பிராணண் எனக் கூறப்படுவதாகும். உயிரற்ற ஒருவனால் மூச்சை இழுத்து விட வெளிவிட முடியாது. எனவே, உயிர் என்பது வேறொன்றாகிறது. எனவே பிராணண் என்பதும் உயிர் என்பதும் ஒன்றல்ல, வேறு வேறு ஆகும். பிராண இயக்கத்திற்குப் பிராணவாயு தேவைப்படுகிறது.
உடல் இயக்கத்திற்குப் பிராணனும் அப்பிராணனுக்கு பிராணவாயுவும் என இம்மூன்றும் சேர்ந்து தொழிற்படுவதே மனித உடலியக்கமாகும். இது எல்லா உயிர்களுக்கும் பொதுவானதாகும்.
உடல் இயக்கத்திற்கு பிராணனின் பங்கு:
ஒரு‘சிசு’கற்பத்தில் தோன்றியது முதல் இயல்பான வளர்ச்சிக்குப்பின் வயிற்றினின்று வெளிவரும் வரை அச்சிசு வேறு ஒரு உயிரை சார்ந்தே வளர்கிறது. வெளிவந்த பின் சுவாசிக்கத்தொடங்கியது முதல் தன் உடல் வளர்ச்சிக்கு வித்திடுகிறது எனலாம். அதன் உடல் வளர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக நடைபெறுகிறது., அதற்கு வளர்சிதை மாற்றப்பண்புகளின் இயக்க இயல்பும் அடிப்படையாகிறது. இந்த மாற்றப்பண்புகளுக்கு உணவும்-காற்றும் தொடர்ந்து தேவைப்படுகிறது.
இவ்வுடல் வளர உயிரின் பங்கு என்ன? உயிருக்குப் பரிமாணம் உண்டா? விஞ்ஞானத்தில் இதற்கு சரியான பதிலில்லை. வளர்ச்சி ஒரு இயற்கை நியதி என்று மட்டும் கூறுகிறது.
உயிரைப் பற்றிய விஞ்ஞான பார்வை:
உயிர் என்பது பற்றி விஞ்ஞானம் இதுவரை ஒரு சரியான முடிவுக்கு வரவில்லை அல்லது வரமுடியவில்லை.
உடல் இயங்கும் வரை உயிர் இருப்பதாவும், இயக்க முற்று நின்று போனவுடன் உயிர் போய்விட்டதாகவும் கூறுகின்றனர். அதை மரணம் என்று கூறும் முன்பாக, அம்மரணத்தை நிகழாதிருக்கச் செய்ய முடியவில்லை. உயிரைத் தனியாக அடையாளம் கண்டுவிட்டால், உடலில் அது எங்கிருக்கிறது என முடிவு செய்துவிட்டால் அது வெளிப்போகாமல் தடுத்திடலாம் அல்லவா?
உடலுள்ளுறுப்புகள் செயல்திறமை குறைபாட்டில் அல்லது செயல்திறன் முற்றும் கோளாறுடையவர்கள் இறக்கும் நிலைக்குப்போய் பிழைத்து விடுவதும் மிகச்சிறிய கோளாறு காரணமாக இறப்பதும் ஏன்? மரணத்தை கிளினிக்கல் டெத், பிரைன்டென் என்று கூறுகிறது விஞ்ஞானம்.
பிராணண்:
காற்று (வாயு-ஆக்சிஜன்) என்ற ஒரு குதிரையின் மீது சவாரி செய்து கொண்டிருப்பதே பிராணனாகும். இப்பிரபஞ்ச உயிர்கள், அசையும் அணுப்பொருட்கள் என அனைத்து உயிரிகளுக்கும் இன்றியமையாத்தேவை காற்று -ஆக்சிஜன் ஆகும். இக்காற்று, உயிர்களுக்கு தக்கவாறு எடுத்துக்கொள்ளும் அளவு மாற்றம் இருக்கலாம், ஆனால் அது இன்றி பிராணண் செயல்பட முடியாது. உயிரை ஜீவன் என்று கூறப்புகுவோமெனில், பிராணண் ஜீவசக்தி என்று கூறுதல் சரியாகும்.
மனிதனில் பிராணண்:
புலன் உணர்வுகள் தூண்டப்படுவதற்கும், அதற்கேற்றபடி செயல்படவைப்பதும் பிராணனே. அறிவு, புத்தி, சித்தம், மனம், உடலனுபவம் அனைத்தும் பிராணண் இயங்குவதாலயே இயக்கம்பெறுகிறது.
கோள்களில் பிராணண்:
பிரபஞ்சத்தில் எண்ணற்ற கோள்களின் இயக்கத்திற்கும் காற்று, மழை, மின்னல், இடியோசை என அத்தனை இயற்கையின் இயக்க நிகழ்வுகளுக்குள்ளும் பிராணணின் செயல்பாடு அல்லது பிராணச்சலனமே காரணமாகும்.
பிரபஞ்சத்தோற்றத்தில் பிராணண்:
ஏதுமற்ற ஒன்றிலிருந்து எதுவும் தோன்ற முடியாது. எத்தோற்றத்திற்கும் ஒரு (முன்) “இருப்பு” இருந்ததாலயே தோற்றம் நிகழ்ந்தது. நாம் குறிப்பிடும் முக்கிய கோள்கள், மில்க்கிவேஸ், கேலக்ஸி அனைத்தும் உருவாகும் முன் காணமுடியாத அணுப்பிரமாணமாக இருந்தது என்கிறது வேதம். இறைவனின் சித்தத்தால் அணுக்கள் அத்தனையும் உயிர்பெற்று பிராணசக்தியினை வெளிப்படுத்தத் துவங்கியது.
அனு சலனமும், அனு கூட்டச் சேர்க்கையால், பிரபஞ்சத்தில் (வெட்டவெளியில்) திடப்பொருட்களும், அத்திடப்பொருட்களின் திரட்சியின் காரணமாக வெடிப்புகளும், அவ்வெடிப்பின் பிரிவுகளே கோள்கள் எனவும், அவ்வெடிப்பின்போது ஏற்பட்ட ஒளி, வெப்பம், தொடர் சலனம், ஈர்ப்பு போன்ற பல நிகழ்வுகளை அதனுள்ளிருந்து, நிகழ்வுறச்செய்ததும், என அனைத்துமாய் இருப்பது பிராணணே.
பிராணாயாமம்:
பிராணண் செயல்படப் பிராணவாயு துணை செய்கிறதென முன்பார்த்தோம்.
மனிதன் குண இயல்புகளும் கூட மூச்சை நெறிப்படுத்துதல் மூலம் கட்டுப்படுத்துகிறது என்பதை யோகிகள் கண்டறிந்து சொன்னவைகளை யோக மதம் அல்லது யோக வேதம் என்று கூறுவர். கோபம், துக்கம், மகிழ்வு போன்ற எண்ண வேறுபாடுகளின்போது மூச்சு மாறுகிறது. இயல்பான மூச்சினின்றும் வித்தியாசப்படுகிறது என்பதைக் கண்டு. அதே முறையில் மூச்சை (சுவாசத்தை) மாற்றி எண்ணங்களைச் சமனப்படுத்தவும் கூடும்.
மனமகிழ்வு, நிம்மதி போன்ற மன ஆரோக்கியத்தை மன ஆற்றலை பெருக்கிக்கொள்ளும் பல்வகையான பிராணாயாம முறைகளை யோகம் கூறுகிறது, யோக மார்க்கம் என்ற யோக வழியின் தந்தை ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியின் அட்டாங்க யோகமே உலகிற் சிறந்த யோக சாஸ்திரமாக விளங்குகிறது.
மனிதச்செயல்பாடுகளால்
மாண்பு பெறும் வழிகளை நான்கு நிலைகளில் எய்தலாம் என பெரியோர் கூறுவர்.
1)சரியை 2)கிரியை 3)யோகம் 4)ஞானம் இவ்வழிகளில் மிகச்சிறந்ததாக “யோகமே“ குறிப்பிடப்படுகிறது
1)சரியை - வயது வரும்போது ஒவ்வொரு மனிதனும் வினையாற்றத் தகுதி பெறுகிறறான். அவ்விதமே அவன் தனக்காகச்செய்யும் காரியங்கள் “சரியை”எனப்படுகிறது.
2)கிரியை - தனக்காக மட்டுமல்லாது பிறருக்காகவும், இவ்வுலகத்திற்காகவும் பயன்படத்தக்க வகையில் வினையாற்றுவதே “கிரியை”யாகிறது.
3)யோகம் - இதற்கும் மேலாகத் தன்னையும் தன் பிறவியையும் நன்குணர்ந்திடவும் இறைவனோடு தன்மை இணைத்துக் கொள்ளும் மேன்மைப்படுத்திய உணர்வு ஆற்றலை, மன ஆற்றலை வளர்த்து வினையாற்றுவது “யோகம்” மாகிறது, இந்த யோக நெறியின் முதல்படியே பிராணாயாம (பிராண வேள்வி) மாகும்
4)ஞானம் - நற்கிரியைகளைச் செய்து நற்பேறு பெற்றிடும் நடுநிலையாள்கிறவர்கள் “ஞானம்”எய்துகின்றார்கள்.
செந்தில்குமார்
செல்: 9655472931
நச்சாந்துபட்டி,
புதுக்கோட்டை மாவட்டம்.
"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக