17 மார்., 2026

பஞ்ச பூத நவகிரக தவம் மற்றும் நன்மை:



"சுவாமிஜி, பஞ்சபூத நவக்கிரகத் தவங்களை யார் வேண்டுமானாலும் இயற்றலாம் என்று சொல்கிறீர்கள். அதுவும் துரியாதீதம் போன்றதுதானே? அதை எப்படி எல்லோரும் இயற்ற முடியும்?

 மகரிஷியின் பதில்:

"துரியாதீதத் தவம் என்பது மனதை உயிரில் ஒடுக்கி பிறகு உயிரை பரத்தில் ஒடுக்க வேண்டும். இங்கு மனத்தின் அலை வேகம் குறைந்து இயற்கையினுடைய அலை வேகத்திற்கு (NATURAL FREQUENCY) இறைநிலையாகிய இருப்பு நிலைக்கு வந்து விடும்.

பஞ்சபூத நவக்கிரகத் தவம் என்பது நவக்கிரக வழிபாடு போன்றது. மனதை கோள்கள் மீது வைத்திருந்தால் போதும். மனம் அதில் ஈடுபடும்பொழுது அதனுடைய தன்மையில் உயிர்க்கலப்பு பெறும். அதனால் அதிலிருந்து வரும் தீமைகள் தவிர்க்கப்படும். நன்மைகள் அதிகமாகும். இது இயல்பூக்க நியதி என்ற முறையில் எதைப் பற்றி மனம் எண்ணிக் கொண்டிருக்கிறதோ அதற்குத் தகுந்தாற்போல் அதனுடைய தன்மையும் மனத்தினுடைய தன்மையாக மாற்றம் பெறும்.

உங்கள் வாழ்வை மாற்றும் அற்புத ரகசியம் - பஞ்சபூத நவக்கிரக தவம்:

நீங்கள் ஏன் சில நாட்களில் மிகவும் ஆற்றலுடன் இருக்கிறீர்கள், சில நாட்களில் மந்தமாக உணர்கிறீர்கள் என்று யோசித்திருக்கிறீர்களா?

விஞ்ஞான உண்மை:

இந்த பிரபஞ்சம் முழுவதும் சுத்த வழியாகிய இறைநிலையும், அதிலிருந்து தோன்றிய சுழல் அலையான விண் (பரமாணு) ஆகிய இரண்டின் கூட்டுதான் என்று வேதாத்திரி மகரிஷி விளக்குகிறார்.

விண் துகள்கள் ஒன்றுசேரும் அடர்த்தியைப் பொறுத்தே:

  1. நிலம்
  2. நீர்
  3. நெருப்பு
  4. காற்று
  5. ஆகாயம்

ஆகிய ஐந்து பூதங்கள் உருவாகின்றன.

கோள்களின் தாக்கம்:

சூரியன், சந்திரன் உள்ளிட்ட அனைத்துக் கோள்களும் இந்தப் பஞ்சபூதங்களின் கூட்டமைப்பே. ஒவ்வொரு கோளும் காந்த அலைகளை (Bio-magnetism) இடைவிடாது வீசிக்கொண்டே இருக்கின்றன.

நாம் பிறந்தபோது இருந்த கோள்களின் நிலைக்கும், தற்போது அவை இருக்கும் இடத்திற்கும் இடையிலான தூர மாற்றங்களால், நம் உடலில் நாள்தோறும் ரசாயன மற்றும் காந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன.

உங்கள் வாழ்வை தீர்மானிக்கும் 6 காரணிகள்:

  1. மரபணு
  2. உணவு
  3. எண்ணம்
  4. செயல்
  5. கோள்களின் இயக்கம்
  6. சந்தர்ப்ப மோதல்

தீர்வு என்ன?

சாதாரணப் பூசைகளைத் தவிர்த்து, நேரடியாகக் கோள்கள் மீது மனதைச் செலுத்தி "பஞ்சபூத நவக்கிரக தவம்" செய்வதன் மூலம், அங்கிருந்து வரும் அலைகளை நமக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ள முடியும்.

எப்படி இது சாத்தியம்?

  • மனம்அறிவின் வெளிப்பாடு
  • அறிவு → இறைநிலையின் அம்சம்

தவத்தின் மூலம் நாம் எடுக்கும் சங்கல்பம் பிரபஞ்ச சக்திகளை ஒழுங்குபடுத்தும் வல்லமை கொண்டது!

பலன்கள்:

  • தீய விளைவுகள் குறையும்
  • நன்மைகள் பெருகும்
  • வாழ்வில் அமைதி உண்டாகும்.

இந்தத் தவ முறையைப் பற்றி மேலும் அறியவும் விஞ்ஞான ரீதியாக உங்களது பிறந்த தேதி மற்றும் நேரத்தின் அடிப்படையில் கிரகங்களின் தன்மைகளை அறிந்து கொள்ளவும், ஜாதக பலன்களை தெரிந்து கொள்ளவும் தொடர்பு கொள்க.

        ஸ்ரீ செவ்வேல் ஜோதிட நிலையம்

        ஸ்டேட் பேங்க் அருகில்,
          R M K காம்ப்லக்ஸ்,
        திருமயம்
        புதுக்கோட்டை மாவட்டம்.
        செல்: 96554 72931

29 நவ., 2025

உடலைப் பேனி பாதுகாப்பதின் அவசியம் என்ன? உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் மனிதன் தன் கடமையை செய்ய முடியும் மனிதனின் தலையாய கடமை எது?

 

மனிதனின் தலையாய கடமை எது?

நாம் சமுதாயத்தில் ஓர் அங்கம். இந்த உடல் சமுதாயத்தின் சொத்து. அதனைக் கெடுப்பதற்கு நமக்கு அதிகாரம் இல்லை. இந்த உடலுக்காக நாம் சமுதாயத்தில் கடன்பட்டிருக்கிறோம். மற்றும் அன்றாட அனுபோகப் பொருட்களையும் அதனிடமிருந்து பெற்று அனுபவித்து வருகிறோம். இந்தக் கடனைத் திருப்பித் தரும் வழியே கடமை எனப்படுகிறது.

அவர்களது உடலாற்றலையும், அறிவாற்றலையும் அந்தந்த நேரத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றபடி குறைவில்லாமல் சமுதாய நலத்திற்கு அர்ப்பணமாகச் செலவிடல் தான் கடமை. உடலைக் கொண்டு தான் இந்தக் கடமையை ஆற்ற வேண்டும்.

உடல் நலக்குறைவு ஏற்படும் போதும், நலிவுற்ற போதும் சமுதாயம் நம்மைக் கவனிக்க வேண்டி வந்து விடுகிறது. இதனால் சமுதாயத்திற்கு வரவேண்டிய வரவும் நின்றுபோய் மருந்தென்றும் உபசரணை என்றும் நம்மால் சமுதாயத்திற்கு இழப்பு உண்டாகிறது. எனவே தான் கடமையை வகைப்படுத்தும் போது உடல், குடும்பம், சுற்றம், ஊர், உலகம் என்று உடல் கடமைகளை மற்றவற்றின் முன்னால் வைக்கப்பட்டது.

ஊனுடலே வாகனம் என்று கூறுவதன் நோக்கம் என்ன?

இனி ஆன்மீக நோக்கில் உடல் நலத்தின் அவசியத்தை ஆராயலாம். இதுவரை மனிதனிடம் ஏற்பட்டுள்ள களங்கங்கள் பாவப்பதிவுகள் நீங்கினால் தான் உயிருக்கு வீடுபேறு, விடுதலை கிடைக்கும். பாவப்பதிவுகள் எப்படிப் போகும். உடலை எடுத்தால் தான் அந்தப் பாவப் பதிவுகள் துன்பமாக அனுபோகமாகி நீங்கும் அல்லது யோக சாதனைகள் மூலம் நீக்கிக் கொள்ளலாம். அதற்குத் தான் இந்த உடலை உயிர் எடுத்து வந்தது. உயிர் தன் மூலத்தை அறிந்து கொள்ள எடுக்கின்ற முயற்சிக்கும் இந்த உடல் தேவைப்படுகிறது. ஆகவே உடலை உயர்வாகக் கருதி, சீர்கேடு அடையாமல் போற்றிப் பாதுகாக்க வேண்டும். அப்போது தான் ஆன்மீகப் பயணம் தடைபடாமல் இருக்கும்.

 

"அண்டத்தில் கடவுளாய் அழைக்கப்படுபவன்
    பிண்டத்தில் உயிரெனப் பேசப்படுகிறான்
கண்டத்தின் மேலே கருவில் நிலைத்தவன்
    அண்டத்தும் பிண்டத்தும் அவனையே காண்கின்றான்".

 

"அவனில் அணு, அணுவில் அவன்,
உன்னில் எல்லாம், நீ அறி உன்னை".

பழிச்சுமை கழி:

 

"ஐயுணர்வின் வயம் ஏற்ற
    ஆன்மாவின் பழிச் சுமையை
மெய்யுணர்வு பெற்றாற்றி
    மிக எளிதில் கழித்திடலாம்.
தெய்வ நிலையுடன் அறிவைச்
    சேர்த்தொன்றும் தவம் பயின்று
உய்ய நினைந்தால்; உலகீர் !
    உடனே என் தொடர்பு கொள்வீர்!"

                                    வேதாத்திரி மகரிஷி.

மனம் எப்போது செயல்படாமல் நிற்கும்:

மனம் நிற்க வேண்டும் அதாவது மற்ற எண்ணங்கள் எழாமல் நிற்க வேண்டும் என்று பலர் நினைப்பது போல் மனம் சும்மா நிற்கவே நிற்காது. நிற்கவே முடியாது. எப்போது நிற்கும் என்றால், இந்த உயிர்ச்சக்தி ஓட முடியாமல் திணறி அதிலிருந்து இயங்காமல் உடல் என்ற இயந்திரமே கெட்டுப் போய்விட்டது என்றால் மன இயக்க அலையே நின்று போய்விடுகிறது. அதோடு மரணம் தான் அல்லது உயிர்ச்சக்தி பலகீனமாக இருக்கிறபோது அதற்குப் போதிய அளவுக்கு ஆற்றலைப் புதுப்பிப்பதற்காக ஓய்வு எடுத்துக் கொள்கிறபோது தூக்கம் வருகிறது. தூக்கம் அல்லது மரணம், இந்த இரண்டு சூழ்நிலைகளில் தான் மனம் (Mind) செயல்படாது நிற்கும்.

 எண்ணம் எழாமல் இருக்குமா? உதாரண விளக்கங்கள்:

எண்ணமே வரக்கூடாது.. மனம் நிற்க வேண்டும் என்று அடிக்கடி பலர் நினைக்கிறீர்கள். உதாரணமாக - உங்களது ஸ்டோர் ரூமில் நூறு பொருட்களை வைத்திருக்கிறீர்கள் ஒரு பொருள் தேவையாக இருக்கிறது ஆனால் நீங்கள் அந்த ஒரு பொருளைத் தேடி எடுக்கப் போகும்போதும் அங்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ள மற்ற நூறு பொருட்களும் கண்ணுக்குப்படுகிறது நாம் தேடி எடுக்கப் போகும் பொருள் போக மீதி எல்லாமும் சேர்ந்து தென்படுகிறதே என்று ஏன் சிரமப்படுகிறீர்கள்?. உங்களுக்கு வேண்டிய பொருளை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். மிச்சப் பொருட்களை விட்டுவிடுங்கள் தேடும் பொருள் போக மற்றப்பொருள் எல்லாம் என் கண்ணுக்குத் தெரியவே கூடாது என்று சொல்கிற மாதிரி - அப்படி மற்ற எண்ணமெல்லாம் வரவே கூடாது என்று நீங்கள் நினைத்தால், அப்போது எந்த எண்ணம் வரும்? இன்றைக்கு நான் எண்ணுகிற எண்ணம் மட்டும் தான் வர வேண்டும் என்றால் எப்படி வரும்? ஏற்கனவே எண்ணி இருப்பு வைத்த எண்ணங்களும் சேர்ந்தே தான் வரும். ஏனென்றால் அது கருமையத்தில் இருப்பாகி உள்ளது. அதனால் எண்ணமே அடியோடு நின்று போக வேண்டும் என்று நினைப்பதே தவறு.

நீங்கள் உங்களது எண்ணம் நிற்க வேண்டும் என்று நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் கடைசியாக அது ஒரு நாளைக்கு உடலைவிட்டு உயிர் பிரியும் போது எண்ணம் நிற்கத்தான் போகிறது!. இன்று மனதில் எழும் மற்ற எண்ணமெல்லாம் நின்றுவிட வேண்டும் என்று நாமாக ஏன் நினைக்க வேண்டும்? அப்படி நினைப்பதும் தவறு. அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?.

மனதை எவ்வாறு சீரமைப்பு  செய்வது :

நாம் செய்ய வேண்டியதெல்லாம் நம் எண்ண ஓட்டத்தைச் சீர்படுத்த வேண்டியது தான் (You have to Streamline) நாம் செய்ய வேண்டிய வேலை. முறையான அகநோக்குப் பயிற்சியும் (Simplified Kundalini Yoga), அகத்தாய்வு (Introspection) பயிற்சியில்எண்ணம் ஆராய்தல், ஆசை சீரமைப்பு, சினம் தவிர்த்தல், தத்துவ விளக்கங்கள்” போன்ற சிந்தனையை தூண்டும் பயிற்சிகளின் மூலம் மனதை ஒழுங்குபடுத்திக் கொண்டால் எண்ணத்தின் ஆற்றல் வளரும். மனோபலம் உண்டாகும். அதோடு மட்டுமல்லாது, அதனுடைய பயன் வாழ்நாள் முழுவதும் நம்மை எல்லாத் துறைகளிலும் சிறப்படையச் செய்யும்.

                செந்தில்குமார் 
                செல்9655472931
                நச்சாந்துபட்டி,
                புதுக்கோட்டை மாவட்டம். 


"This Content Sponsored by SBO Digital Marketing.

Mobile-Based Part-Time Job Opportunity by SBO!

Earn money online by doing simple content publishing and sharing tasks. Here's how:

  • Job Type: Mobile-based part-time work
  • Work Involves:
    • Content publishing
    • Content sharing on social media
  • Time Required: As little as 1 hour a day
  • Earnings: ₹300 or more daily
  • Requirements:
    • Active Facebook and Instagram account
    • Basic knowledge of using mobile and social media

For more details:

WhatsApp your Name and Qualification to 9994104160

a.Online Part Time Jobs from Home

b.Work from Home Jobs Without Investment

c.Freelance Jobs Online for Students

d.Mobile Based Online Jobs

e.Daily Payment Online Jobs

Keyword & Tag: #OnlinePartTimeJob #WorkFromHome #EarnMoneyOnline #PartTimeJob #jobs #jobalerts #withoutinvestmentjob"

28 நவ., 2025

எந்த இடத்திலிருந்து நமக்கு என்ன அலை வந்து சேர வேண்டுமோ அந்த அலையை நம் மனமானது தானாகவே இழுத்துக்கொள்ளும் அதைப் பற்றிய விளக்கம்:

 

அலை இயக்கம் என்பதைப் பற்றிய விளக்கம்:

தியானத்தின் மூலம் மனதை அமைதி நிலைக்கு கொண்டு வந்து "வாழ்க வளமுடன்" என்று ஒருவரை வாழ்த்துவது என்றால் அந்த வாழ்த்துதலினுடைய பலன் இந்த "அலை இயக்கத்தில்" ஒரு தன்மையுடையதாகிறது. முதலில் நம்மை வாழ்த்திக் கொள்கிறோம். பிறகு வாழ்த்தானது அது போகும் இடமெல்லாம் அதே அலைத்தன்மையை ஏற்படுத்துகிறது. அவருடைய தன்மையை மாற்றி வாழ்வை வளப்படுத்துகிறது. குறிப்பிட்ட வேலை முடிப்பதற்கு அறிவை உயர்த்துகிறது. எனவே நல்ல எண்ணம், நல்ல செயல் இரண்டும் வேண்டும். நல்ல எண்ணம் உற்பத்தி செய்து கொள்ள மனதிற்கு முறையான உளப்பயிற்சி (Systematic psychic practice) - அதாவது "அகத்தவம்" (Simplified Kundalini Yoga) வேண்டும். நல்ல செயல் செய்ய "அறநெறி வாழ்வு" வேண்டும்.

மனிதன் வாழ்வாங்கு வாழ எந்த இரண்டு வேண்டும்:

அகத்தவம், அறநெறி வாழ்வு இந்த இரண்டின் வழியே தான் மனிதன் வாழ்வாங்கு வாழ முடியும். பிறரையும் வாழ விட முடியும். எல்லாம் வல்ல இறைநிலை (Almighty), எந்த செயலுக்கும் ஒரு விளைவைத் தருவது என்றால் அது ஊடுருவி நின்று செயல்படுவது. எதுவும் தவறு செய்யாது. யார் என்ன நினைத்தாலும் நம் வினைப்பதிவிற்கு ஏற்றவாறு அதற்குத் தக்கவாறு எந்த இடத்திலிருந்து நமக்கு என்ன அலை வந்து சேர வேண்டுமோ அதை நம் மனமானது தானாக இழுத்துக் கொள்ளும். நம்மை தயார் செய்து கொள்ள நல்ல தன்மை, ஏற்பு சக்தி (Receptivity) மட்டும் தான் நமக்கு வேண்டும். அதற்கு நம்மை நம் சிந்தனை ஆற்றல் துணை கொண்டு மனதை தயார் படுத்தி அவ்வுயர்ந்த நிலைக்குத் தகுதியாக்கிக் கொள்ள குருவின் மூலம் முறையாக கற்றுக்கொள்ளப்படும் உளப்பயிற்சியாகிய தியானப் பயிற்சியின் (Sky Kundalini Yoga) மூலம் தான் சாத்தியமாகும். அவ்வளவு தான்".


"உயிராற்றல் என்பது விண் ஆகாசம் ஆம்
    உட்பொருளாய் உள்ளசிவம் அறிவு உண்மை
உயிராற்றல் பரமாணு சுழல் அலை ஆம்
    ஒரு தொகுப்பில் கோடானகோடி கூடி
உயிராற்றல் தற்சுழலோடு இயங்கும்போது
    உண்டாகும் விரிவுஅலை சீவகாந்தம்
உயிர்அலைகள் புலன்கள்வழி செல்லும் போக்கை
    உண்மைசிவம் உணர்வதுவே மனம்ஆம் காணீர்."

                                            வேதாத்திரி மகரிஷி.

அலை இயக்கம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதன் விளக்கம்:

ஒரு வானொலி நிலையத்திலிருந்து ஒரு நிகழ்ச்சியை ஒலிபரப்புகிறார்கள். அது பாடல் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தப் பாடல் வெளியிலே போகும்போது அலையாகத்தான் போகும். அந்த அலையில் அந்தக் கருத்து வாசகம் எல்லாம் அடங்கியிருக்கும். வழியில் இதை யாராவது கண்டு பிடிக்க முடியுமா? முடியாது. இல்லை அலையில் இதையெல்லாம் தெரிந்து கொள்ள முடியுமா? முடியாது. ஆனால் இங்கே உள்ள கருவியில் மோதும்பொழுது மோதிப் பிரதிபலிக்கும்பொழுது அங்கே எந்தெந்த உச்சரிப்பு எந்தக் கருத்து அங்கே சொன்னார்களோ அவையனைத்தும் வெளிப்படும். இன்னொரு பாடல்; அதை ஒருவர் தாளம் போட்டுப் பாடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தத் தாள ஓசையோடு கேட்கிறது; அதுபோல இன்னும் வேறு பல கருவிகளை வைத்துப் பாடினாலும் கூட அவ்வளவும் இந்த அலையில் போகும். வெறும் பேசும் அலைக்கும் இந்த அலைக்கும் ஒரு வித்தியாசமும் இருக்காது அங்கே. ஆனால் அது மோதிப் பிரதிபலிக்கக்கூடிய இடத்தில் அத்தனையும் வரும்.

அதேபோல் எந்தப் பொருளும் உலகத்தில் அதன் அதன் இடத்திலிருந்து ஒரு அலை வீசிக் கொண்டேதான் இருக்கிறது. ஏனென்றால் அந்தப் பொருள் எதனால் ஆக்கப்பட்டது என்றால் சக்தியின் துகளினால். ஒவ்வொரு ஆகாசத்துகளும் தன் வேகத்தில் சுழன்று கொண்டேதான் இருக்கிறது. ஆகையினால் அலை வீசிக் கொண்டே தான் இருக்கும். எந்த அலைக்கும் மோதுதல், பிரதிபலித்தல், சிதறுதல், ஊடுருவுதல், ஒன்றுடன் ஒன்று திருப்பி திருப்பி இணைந்து பாய்தல் என்று ஐவகையான இயக்கங்கள் உண்டு. எத்தனையோ அலைகளை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அவற்றையெல்லாம் நல்லவையாக ஆக்கிக் கொண்டு நாம் நல்ல அலையை இயக்க வேண்டும்; நலம் செய்து கொண்டே இருக்க வேண்டும்; நன்மையேதான் செய்வேன் என்ற எண்ணத்தை உறுதியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

வெட்டவெளி என்ற இறைநிலையின் சக்தி:

 

"வெட்டவெளி சக்தி என்பதில்லையானால்
    வேறு எந்தப் பொருள் வலிது பிரபஞ்சத்தில்?
தொட்ட, தொடப்பட்ட இரு பொருட்களூடே
    தொட, தொட்டதாய் எண்ணும் அரூபம் யாது?
பட்டப் பகலில் வானில் மீன்கள் தோன்றா
    பார்வையில்லார்க்கவை எந்த நாளும் காணா
எட்டவில்லை அறிவிற்கு என்றால், உள்ள
    இயற்கைத் தத்துவம் எங்கே ஒளிந்து கொள்ளும்?."

                                            வேதாத்திரி மகரிஷி

                செந்தில்குமார் 
                செல்9655472931
                நச்சாந்துபட்டி,
                புதுக்கோட்டை மாவட்டம். 


"This Content Sponsored by SBO Digital Marketing.

Mobile-Based Part-Time Job Opportunity by SBO!

Earn money online by doing simple content publishing and sharing tasks. Here's how:

  • Job Type: Mobile-based part-time work
  • Work Involves:
    • Content publishing
    • Content sharing on social media
  • Time Required: As little as 1 hour a day
  • Earnings: ₹300 or more daily
  • Requirements:
    • Active Facebook and Instagram account
    • Basic knowledge of using mobile and social media

For more details:

WhatsApp your Name and Qualification to 9994104160

a.Online Part Time Jobs from Home

b.Work from Home Jobs Without Investment

c.Freelance Jobs Online for Students

d.Mobile Based Online Jobs

e.Daily Payment Online Jobs

Keyword & Tag: #OnlinePartTimeJob #WorkFromHome #EarnMoneyOnline #PartTimeJob #jobs #jobalerts #withoutinvestmentjob"