18 டிச., 2024

குண்டலினி யோகம் - மனித வாழ்வை செம்மைப்படுத்த சித்தர்கள் அருளிய சூட்சுமம் விசுக்தி சக்கரம் - தன்மைகள், பலன்கள், சங்கல்பம், தொடர்புடைய உறுப்புகள் பற்றி முழு விளக்கங்கள்:

விசுக்தி தலமும் மற்றும் சக்கரமும்

தொண்டை குழியில் அமைந்துள்ளது. இது தீயவற்றை வடிகட்டும் ஆற்றல் கொண்டது. சிவபெருமானுக்கு `விசுகண்டன்’ `நீலகண்டன்’ என்று பெயர்கள் உண்டு. இதன் பொருள், விஷத்தை வெளியே நிறுத்தியவர் என்பது. விசுக்தி சக்கரம் தூண்டப்பட்டிருந்தால் விஷத்தன்மை உடலுக்குள் நுழையாமல் தடுக்க முடியும். விஷம் என்றால் உணவு மட்டுமல்ல தீய உணர்வுகள், தீய எண்ணங்கள், தீய சக்திகள் போன்றவையும் ஆகும்.


"விசுக்தி சக்கரம்" பற்றி இதுவரை அறியாத முழு ரகசியங்கள்
இதைப் பற்றி அகத்தியர் பின் வருமாறு விளக்குகிறார்....

ஆச்சப்பா வனாகததி னொடுக்கஞ்சொன்னோம்
        அறையுகிறேன் விசுத்தியி னடவைக்கேளு
     மாச்சப்பா வதற்க்குமேல் பன்னிரெண்டங்குலம்
        பாச்சப்பா பதினாறு யிதழ்தா னாகும்
     பாலகனே அட்சரந்தான் வகாரமாகும்
  வதுநடுவில் சதாசிவனும் சாகினியுமாமே
                                         அகத்தியர்   

ஏறியே பன்னிரண் டங்குல மேதாண்டி
    ஏத்தமாம் விசுக்தி என்ற தலமுமாகும்
மாறவே யறுகோண வளைய மொன்று
    மகத்துவமாம் பதினாறு இதழு மாகும்
ஆறவே இதழுக்கு அட்சரந்தான்
    -- -- -
வகாரமது வேறோ இல்லோ துணையான
    --- ஒள-அம்-ஆம் ஆமே

                                        போகர் 7000

ஆம்முதல் பதினாறு எழுத்துமிட்டு

    அறுகோண நடுவேதான் வகாரம் நிற்கும்
வாமுதலாய் மகேஸ்வரனும் மகேஸ்வரியும் நிற்பார்
    மகத்தான சொப்பனத்துக் கிருப்புமாகும்
பூமுதலாய் பூதமது வாயுவாகும்
    புகழான பீசமது அங்கு மாகும்
நாமுதலா யதர்வண வேதந் தானாகும்
    நல்ல மனமே வாகனமாய் நாடலாமே

                                        போகர் 7000

ஆம்முதல் பதினாறு எழுத்துமிட்டு
        அறுகோண நடுவேதான் வகாரம் நிற்கும்
     வாமுதலாய் மகேஸ்வரனும் மகேஸ்வரியும் நிற்பார்
        மகத்தான சொப்பனத்துக் கிருப்புமாகும்
     பூமுதலாய் பூதமது வாயுவாகும்
        புகழான பீசமது அங்கு மாகும்
     நாமுதலா யதர்வண வேதந் தானாகும்
        நல்ல மனமே வாகனமாய் நாடலாமே

                                        போகர் 7000

நாட்டமா இவருடைய தொழிலும் நன்றாய்

    நடத்தலோடு ஓட்டல் மயங்கிக் கிடத்தல்
நீட்டமாய் நிறுத்தலோடு கலங்கா திருத்தல்
    நிலை யஞ்சின் விபரத்தை நிலைக்கக் கேளு
பூட்டமாய் பொசித்தலொடு ராகங் கேட்டல்
    பொங்கியே கோபஞ்சண்டை சுமையைத்தாங்கல்
ஓட்டமா யோங்காரம் உன்னைக் கண்டால்
    உயர்வாயை திறந்திடுதல் உறுதி காணே
                                          போகர் 7000  

விசுக்தியின் செயல்கள்:

நிற்றல், நடத்தல், ஓடல், மயங்கல், கலங்காது இருத்தல் ஆகிய ஐந்து செயல்களும் இங்கிருந்துதான் நடைபெறுகின்றன. விசுக்தி தான் உணவின் சுவை அறிதல், இசையை ரசித்தல், கோபம் கொள்ளுதல், சண்டையிடல், மனச் சுமைகளைத் தாங்குதல் ஆகிய செயல்களும் நடைபெறக் காரணமாகும்.


குறமையாய் நாதமது கண்டத்திற் காணும்
            குறிப்பான திரோதகையின் கூற்று தானே
                                            போகர் 7000       

விசுக்தி எனும் கண்டம் தான் நடுமூலம் ஆகும். கண்டத்தில் பல அடைப்புகள் உள்ளன. சளியும் அடைத்துக் கொண்டுத் தடை செய்யும். விசுக்தியில் இருந்து கேசரி யோகம் செய்தால் அனைத்துத் தடைகளும் அடைப்புகளும் நீங்கும். மாயையும் மறைப்பும் நீங்கும். எதிரில் இருப்பவரின் மனதில் நினைப்பதைக் கூட அறிந்திட இயலும்.


மார்க்கமாய் மந்திரத்தை யுன்னி யுன்னி
    வாசியைநீ மறவாமல் மருவியூட்டி
ஆர்க்கமாய் வங்கென்று கும்பித்து நிற்கில்
    ஆத்தாளும் உமையாரும் அகம் மகிழ்ந்து
மார்க்கமாய் வாதத்தின் வழியுஞ் சொல்லி
    வரிசையோடு ஏறுதற்கு வழியும் சொல்வார்

                                                                                        போகர் 7000 

விசுக்தித் தலத்தில் மனதை நிறுத்தி, மறவாமல் மந்திரம் ஓது. வாசியோகம் செய். அப்பொழுது பத்தாம் வாசலுக்கான வழி, சுழிமுனை செல்லத் திறக்கும். இந்தத் தலத்தில் இருக்கும் உமையார் என்ற மகேஸ்வரன், ஆத்தாள் என்ற மகேஸ்வரி மனம் மகிழ்ந்து, வேதிகள் செய்வதற்கான மார்க்கத்தையும், படிப்படியாகச் செய்யும் முறைகளையும் சொல்லித் தருவார்கள். விசுக்தியில் நின்று வாசியோகம் செய்தால், பத்தாம் வாசல் திறந்து வாசியோகம் சித்தி பெறலாம்.


உள்ளும் மகேசன் உருக்கும் பரத்தடி
        தெள்ளியே நோக்க சிறுபிள்ளை தானாவான்
அள்ளும் கனிபோலே ஆகும் சிவயோகம்
    துள்ளிய வாசி துடியாது சித்தியே
                          திருமூலர், கருக்கிடை வைத்தியம்

விசுக்தி சக்கரத்தின் தன்மைகள்:

அமைவிடம்     : அனாகதத்திலிருந்து 12 விரற்கிடை மேல் 
                  விசுக்தி அமைந்துள்ளது.

வடிவம்         : அறுகோண நட்சத்திர வடிவானது. அதைச் 
                       சுற்றி வட்டம் உள்ளது.

நிறம்           : கருமை.

இதழ்கள்        : பதினாறு தாமரை இதழ்கள் உள்ளன.

16அட்சரங்கள்   --- ---- ----ஒளஅம்-ஆம்                                                                   ஆகியனவாகும்.

உயிர் சக்தி     : 16 கலைகள்.

பீஜ மந்திரம்    : கிலியும்.

சிவ பீஜமந்திரம் : ஆகும். வங் என்றும் உச்சரிக்கலாம்.

சுவாசம்         : ஒரு நாளில் 3000 சுவாசம் நடைபெறும்.

பூதம்           : வாயு

பஞ்சவித்து      : நாதம்

அவத்தை       : சொப்பனம்

வேதம்          : அதர்வண வேதம்

அதிர்வலை      : ஆல்பா அதிர்வலை உருவாகும்

அதி தேவதைகள் : மகேஸ்வரன் மற்றும் மகேஸ்வரி

தொழில்        : திரேதாயி என்ற மாயை, மற்றும் மறைத்தல்

விசுக்தியின் வாகனம்  : மனம்.


விசுக்தி சக்கரத்தின் பலன்கள்:

விசுக்தியில் நின்று சிவயோகம் செய்தால், முதுமை மறைந்து இளமை அடைவார்கள். இதனால் சிவயோகம் சித்தி ஆகும். இந்தத் தலத்தில் வாசியோகம் செய்து, வேதை சித்தி செய்ய வேண்டல் சிறப்பு. குழப்பமான நிலையில் உண்மைத் தன்மை அறிய வேண்டுதல் சிறப்பு. மறைப்பையும் மாயையும் நீக்க வேண்டிக் கொள்ளுதல் சிறப்பு.

விசுக்தி சக்கரத்தோடு தொடர்புடைய உறுப்புகள்:

 இந்த சக்தி ஆதார மையமானது நமது தொண்டையின் அடிப்பாகத்தில் சுழுமுனை நாடியில் அமைந்து இருப்பதாக குறிப்பிடுகின்றனர். நமது குரல்வளை, மூச்சுக் குழாய், தையராய்டு சுரப்பிகள், நுரையீரல், கைகள் போன்ற உறுப்புகளுடன் விசுத்தி சக்கரம் தொடர்புடையதாக குறிப்பிடப் படுகிறது.

இச்சக்கரத்தில் பிரார்த்தனை அல்லது சங்கல்பம்:

பஞ்சாட்சர எழுத்துக்களான "சிவயநம" என்னும் எழுத்துகளில் ஒன்றான "" என்னும் எழுத்தையும், அதன் தத்துவத்தையும் விசுத்தி சக்கரம் விளக்குவதாக அமைகின்றது.

 இச்சக்கரத்தின் அதிதேவன் மகேஸ்வரன். அதி தேவதை சாகினி. பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாசம் இதன் மூலக்கூறு. இதன் மூலமந்திரம் "ஹம்" எனப்படுகிறது. இந்த சக்கரத்திலிருந்து தாமரை இதழ் போன்ற பதினாறு யோக நாடிகள் கிளம்புகின்றன. அவற்றின் அசைவுகளால் ஏற்படும் சப்தங்களை லுரூ, ருஊ, வஈ, இஆ, அஅ, அம்ஔ, ஓஐ, ஏலூ என்ற எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன. இந்த தாமரை இதழ்களின் எண்ணிக்கையில் ஒரு சூட்சுமம் அடங்கி இருக்கிறது.

 அகத்தியர் தனது பாடலில் விவரித்திருக்கும் விசுத்திச் சக்கரத்தின் மாதிரி படம் தான் இது..... இந்த சக்கரத்தை மனதில் நிறுத்தி, மூல மந்திரத்தினை உருவேற்றி வர அனாகத சக்கரத்தில் நிலை கொண்டிருக்கும் அக்கினி குண்டலினியானது மேலெழும்பி விசுத்தி சக்கரம் வந்தடையும். இந்த தியானத்தினை "ஆகாச தாரணை" என்கின்றனர் சித்தர் பெருமக்கள்.


"This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக