10 டிச., 2024

குண்டலினி யோகம் - மனித வாழ்வை செம்மைப்படுத்த சித்தர்கள் அருளிய சூட்சும் அனாகதம் நிறம் மந்திரம் பீஜம் சுவாசம் அதிதேவதை முழு விளக்கங்கள்:

அனாகதம் தலமும் சக்கரமும்

இதற்கு இருதயச் சக்கரம் என்ற என்கிற பெயரும் உண்டு. மார்பின் மையத்தில், இருதயம் உள்ள பகுதியில் பன்னிரண்டு இதழ் தாமரை அமைப்பில் பச்சை நிறத்தில் இருக்கிறது. அன்பு, பாசம், இரக்கம், சகோதரத்துவம், விசுவாசம், பக்தி, ஆகிய அனைத்து நல்லியல்புகளின் இருப்பிடமும் இதுவே ஆகும்.



அறிவால் உள்நோக்கிப் பார்த்தால், திருமாலின் தலமாகிய மணிபூரகத்திற்கு மேல் எட்டு விரற்கிடை மேல் உள்ள தலம் அனாகதம்.

அறிவுக்கு மேலேறி எட்டங்கு லத்துக்கு
        அப்பால் அனாகதத்தின் வீட்டைக் கேளு
     முறிவுக்கு முக்கோணமாகி நிற்கும்
        முதிர்வளையம் பன்னிரண்டு இதழுமாகும்
     பிறிவுக்கு காகா கா காங சா
        பேரான ஞாடா டாவாகுமே
     இறிவுக்கு இதழில் நிற்கும் அட்சரந்தான்
        ஏற்றுமாஞ் சுழுத்தியதுக்கு இருப்புமாகும்

                                        போகர் 7000

ஆமென்ற சிகாரத்தின் எழுத்து நடுவாகும்
    ஆண்மையாம் பூதமது தேயு தானாகும்
தேனென்ன செம்மைநிறச் சிவப்புமாகும்
    தேயுவுட பீசமது நவ்வுமாகும்
ஓமென்ற ஒளிகோடி பானுவாகும்
    ருத்ரனும் ருத்ரியும் நடுவே நிற்பார்
கோமென்ற அவருடைய குணமே தென்னில்
    கொடும் பொசிப்பும் சோம்பலொடு பயமும்தூங்கே
                                            போகர் 7000

அனாகத சக்கரத்தின் தன்மைகள்:


அமைவிடம்     : மணிபூரகத்திற்கு எட்டு விரற்கடை மேலுள்ள                                                          தலம்  னாகதம்

சக்கர அமைப்பு   : முக்கோணம் அதைச் சுற்றி வட்டம். அதைச்                                                       சுற்றி 12 தாமரை இதழ்கள்.

நிறம்           : அடர் சிவப்பு ஆகும். அத்துடன் கோடி சூரிய                                                           ஒளி உடையது.

இதழ்கள்        : பன்னிரண்டு தாமரை இதழ்கள் உள்ளன.

அட்சரங்கள்     : ககாகா காங சாச ஞாடா டா ஆகும்.

இதன் உயிர் சக்தி : 12 கலைகளாகும்

பஞ்சபூத மந்திரம் : ரம் யையும்

சிவ பீஜமந்திரம்  : சி என்பதின் நடுவில் உள்ள சி ஆகும்

சுவாசம்         : ஒரு நாளில் 3000 சுவாசம் நடைபெறும்

இத்தலத்தின் பூதம்    : அக்கினி

பஞ்சவித்து      : சிகாரம்

அவத்தை       : சுழுத்தி என்ற உணர்வுநிலை ஆகும்

வேதம்          : சாம வேதம்

அதிர்வலை      : டெல்டா அதிர்வலை உருவாகும்.

அதிதேவதைகள் : ருத்ரனும் ருத்திரியும் ஆவார்கள்

இவர்களின் தொழில்   : அழித்தல் ஆகும்


இத்தலம் உடலில் ஜடாக்கினி என்ற அமிலத்தைச் சுரக்கச் செய்து கடும் பசியை உண்டாக்கும். பயம், தூக்கம், சோம்பல் உருவாகும். தூங்கிய பின் பெண்ணைச் சேர உணர்வுகளை உருவாக்கும். ஐம்புலன் இயக்கமாகிய கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறியும் தன்மை இத்தலத்தைச் சார்ந்தது. நாளமில்லாச் சுரப்பிகளில் தைமஸ் என்ற நோயெதிர்ப்புச் சுரப்பி செயல்படும் இடமும் இதுவே ஆகும்.


தூங்கவே எழுப்பி மெல்ல பெண்ணைச் சேர்க்கும்
        சுகமஞ்சும் சிவன்கைக்குள் தொழில் தானப்பா
     தாமென்றே தியானித்து வாசியை நீவைத்து
        தம்பித்து ஓம் அம் உம் சிவாயநம வென்று
                                         போகர் 7000 


இரவு உணவு உண்டபின் தூங்குகிறோம். தூங்கிய பின் அவ்வுணவின் சக்தியைக் கொண்டுப் பெண்ணைச் சேரும் உணர்வைத் தூண்டுவது அனாகதம் ஆகும். அனாகத்தில் மனதை வைத்து ஓம் ஆம் ம் சிவாயநம என தியானிக்கலாம். இதில் ஓம் என்பது முதலிலும், பின் அதன் விரிவாகிய ம் எனப் பின்னரும் கூற வேண்டும். பின் சிவாயநம என்று கூற வேண்டும். இதழ்களின் மந்திரத்தைச் சில சித்தர்கள் மாறுபட்டு சொல்கிறார்கள்.


மாலைக் கடந்து மகத்தான ருத்திரன்
        காலையுறத் தாக்கிக் கலங்காதே நோக்கிட்டு
     சாலச் சிகாரத்தை தனக்குள் ரேசிக்க
        மேலைச் சிவப்போடி விரிவெட்டும் சித்தியே
                      திருமூலர், கருக்கிடை வைத்தியம்,

புரியட்டம் என்ற எட்டு சூக்குமத் தலங்களில், உடலில் உள்ள மூன்று தலங்களில் முதல் தலமாகும். இத்தலத்தில் மனதை நிறுத்தி, வாசியோகம் செய். திருமாலின் தலமாகிய மணிபூரகத்தைக் கடந்து, ருத்திரன் தலமாகிய அனாகதத்தில் வாசியை உருவாக்கி உள்ளே நோக்க வேண்டும். சிகாரத்தை மனதில் நிறுத்தி, அனாகதத்தின் சிவப்பைக் கண்டால் அட்டமா சித்தியும் கிடைக்கும் என்கிறார் திருமூலர். இங்கு நோய்களை அழிக்கவும், கெட்ட குணங்களையும் எண்ணங்களையும் அழிக்க வேண்டிக் கொள்ளுதல் சிறப்பு.

அனாகத சக்கரத்தின் பலன்கள்: 

அன்பு, இரக்கம், உணர்வு, இவற்றின் மூலம் உறவுகள் சீராகும். இந்த சக்கரத்துகென்று சில முக்கியத்துவங்கள் உண்டு. படைப்பாற்றல், அன்பு போன்றவற்றின் ஆதார சக்கரம் இது. அருள் நிலை, ஆன்மீக வளர்ச்சி போன்றவற்றிற்கு உரியவை. மூலாதார சக்கரத்தில் இருந்து எழுப்பப் பட்ட குண்டலினியானது அனாகத சக்கரத்தை வந்தடையும் போது அதற்கு “அக்கினி குண்டலினி என்று பெயராகிறது. இப்படி அனாகத சக்கரம் மலர்ந்த நிலையில், சாதகனின் உள்ளத்தில் கருணை, அன்பு, இரக்கம் போன்ற சாத்வீக குணங்கள் மேம்படும். படைப்பாற்றலின் ரகசியமும் புரியவரும்.

                செந்தில்குமார் 
                செல்9655472931
                நச்சாந்துபட்டி,
                புதுக்கோட்டை மாவட்டம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக