குண்டலினி இந்த பொருளுக்கு பல்வேறு பரி பாசை பெயர்கள்:
திருவடி, வன்னி, வாலை, வாசி, அகர உகரங்கள், லிங்கம், மயிர் பாலம், வெட்டாத சக்கரம், திருவாடுதுறை, புருவநடு, இரவு பகல் அற்ற இடம், இரவு பகல் தோன்றும் இடம், சிற்சபை, ஓம், மூலாதாரம், மூல துவாரம், துவாரகை, ஹரி துவார், ஈசன் நுழை வாசல் இன்னும் பல பெயர்கள். நன்றாக கவனித்து பார்த்தீர்களானால் ஒவ்வொரு பெயரும் மிக்க அர்த்தத்தை கொண்டுள்ளவை.
அகத்தியரின் "துறை அறி விளக்கம்" என்ற நூல் பழங்காலமாக ஞானாசிரியர்களின் கைகளில் மட்டும் தவழ்ந்து கொண்டு இருந்தது. இன்னுமே அது ரகசியமாக தான் உள்ளது. இந்த நூலில் சுமார் 100 பாடல்களுக்கு மேல் உள்ளது. இவை முழுக்க முழுக்க குண்டலினி பற்றி மட்டுமே பாடக்கூடியவை. அதில் இருந்து ஒரு பாடல்.
அது கடையோர் முன்வாசல்"
முதிர்ந்து நின்ற மேல் ஆறு தளத்தை நோக்கி...."
நாம் அனைவரும் ஆறு ஆதாரங்கள் உள்ளன என்பதை அறிவோம். அவை மூலம் முதல் துரியம் வரையாக உள்ளது. ஆனால் நம் உடம்பில் 12 ஆதாரங்கள் உள்ளன என்பதை அறிவீர்களா?
மேல் உள்ள பாடலில் "முதிர்ந்து நின்ற மேல்ஆறு தளத்தை நோக்கி" என்ற வரி குறிப்பது அதுவே. பரஞ்சோதி மகான் அவர்களின் "நான் கடவுள்" என்ற புத்தகத்தில் மூளையை சுற்றி ஆறு உறைகள் உள்ளதாகவும் அவையே மேல் ஆறு ஆதாரங்கள் என்றும் அவற்றின் மீதே முழுக்க முழுக்க தவம் செய்ய வேண்டும் என கூறுகிறார். அவரின் பயிற்சி முறைகளில் மூலாதாரம், ஆக்ஞை மட்டுமே உள்ளது. மற்றும் இடைப்பட்ட ஆதாரங்கள் தவ பயிற்சி கிடையாது.
"முதிர்ந்து நின்ற மேல் ஆறு தளத்தை நோக்கி"
மேலும் சில பெயர்கள்:-
ஊசி முனை வாசல், நெற்றிக்கண்,
முப்பு, நடராஜர், திருசிற்றம்பலம், சுழுமுனை, கரிமுகன். சரி, இவ்வளவு பெயர்களை தெரிந்து கொள்வதால் என்ன பயன்? இந்த ஐயம் எழலாம் உண்மை தான். ஆயினும் "கற்றது கைம்மண்" என்பதால் அறிந்து கொண்ட பல பொருள்களை பரிமாற்றம் கொள்ள ஒரு வாய்ப்பு.
இந்த பதிவில் அவ்வையின் ஞான குறள், விநாயகர் அகவல், சிவ வாக்கியர் பாடல்கள், அகத்தியர் பாடல்கள், குதம்பை சித்தர், பட்டினத்தார் பாடல்கள், திருமந்திரம், திருஅருட்பா, திருக்குறள், ஞானரத்தின குறவஞ்சி மற்றும் பல நூல்களில் இருந்து குண்டலினி பற்றிய செய்திகளை கொடுக்க முயல்கிறேன். பல உண்மைகளையும் தகவல்களையும் உணர்ந்து கொள்வீர்கள். இங்கு மேற்கோளாக கொடுக்க இருப்பது நம் தமிழகத்தில் மிக சிறப்பான இடத்தை பெற்றுள்ள சித்தர்களின் பாடல்களை மட்டுமே.....
நமது உடம்பில் சூரிய மண்டலம், சந்திர மண்டலம், அக்னி மண்டலம் என மூன்று மண்டலங்கள் உள்ளன. இவை முறையே இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய நாடிகளால் குறிக்க படுகின்றன.
ஒளவையின் விநாயகர் அகவல் பாடலில் குண்டலினி விளக்கங்கள்:
கடையிற் சுழுமுனை கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்தி..."
நமது ஆன்மிக பயணம் இந்த நாடிகளை சார்ந்தே அமைந்துள்ளன. நமது உடம்பில் ஒன்பது வாயில்கள் உள்ளன என்பதை அறிவோம். எங்கெங்கெல்லாம் வாயில் உள்ளனவோ அங்கெல்லாம் வாயு செல்லும். நமது உடம்பில் ஈசன் நுழை வாயில் அல்லது ஊசி முனை வாசல் அல்லது மூல துவாரம் என அழைக்க படக்கூடிய ஒருவாசல் உள்ளது. இந்த வாசலின் வழியாக பிராண வாயுவை கும்பகம், ரேசகம் என பயிற்சி செய்வதையே பிரணாயாம பயிற்சி என நம் முன்னோர்கள் கொடுத்தார்கள்.
மூக்கின் வழியாக மூச்சை இழுத்தி நிறுத்தி பின் விடுவது அல்ல இந்த பயிற்சி. இந்த பயிற்சி மூல வாயிலின் வழியாக செய்ய வேண்டியது. நமது உடம்பில் எல்லா இயக்கங்களுமே பல வாயுக்களை அடிப்படியாக கொண்டது.
உணவை செரிக்க ஒரு வாயு, குரல் எழுப்புவது ஒரு வாயு. கழிவுகளை வெளியே தள்ளுவது அபான வாயு இன்னும் பல. தனஞ்சய வாயு என்ற வாயு ஒன்று உண்டு. உயிர் பிரியும் போது இந்த வாயு உடலை விட்டு வெளியேறுகிறது. இந்த வாயு உடலில் இருக்கும் வரை மட்டும் தான் உயிர் இந்த உடம்பில் இருக்கும்.
ஒளவைவையின் பாடல் இறைவன் ஒளவைக்கு குருவாக வந்து தீக்ஷை அளித்ததாக விநாயகர் அகவல் பாடல்கள் எழுத பட்டு இருக்கும். "இடைபிங்கலையின் எழுத்து அறிவித்து..." இடை, பிங்கலை என்ற நாடிகளை வலது, இடது சுவாச மூச்சு குழல்களை குறிப்பதாக இந்த உலகம் கூறுகிறது. அப்படியாயின் அதை அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. மிக தெளிவாக தெரிந்த ஒரு விசயமாகி விடும் இல்லையா? அதுவும் இறைவன் வந்து தான் காட்டுகிறானாம்.
"கடையிற் சுழுமுனை கபாலமும் காட்டி.."
"சுழுமுனை கடையில் கபாலமும் காட்டி" என இதை படிக்க வேண்டும். கபாலம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அது என்ன சுழுமுனை கடையில் கபாலம் காட்டுவது? நமது உலகிற்கு சூரியன், சந்திரன், அவற்றில் இருந்து தோன்றும் அக்னி ஆகிய மூன்றும் மிக அடிப்படையானது. அவற்றிற்கு என்ன என்ன நிகழ்ச்சிகள் நடக்கிறது? உதயம், அஸ்தமனம், அமாவாசை, பௌர்ணமி, கிரகணம் ஆகிய நிகழ்ச்சிகள். அண்டத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சிகளை பிண்டத்திலும் செயல்படுத்துவதே நாம் செய்ய கூடிய ஆன்மிக பயிற்சிகளின் நோக்கம்.
இட கலை = சந்திரன்
பிங்கலை = சூரியன்
அக்னி கலை = சுழுமுனை
இந்த மூன்று நாடிகளின் வழியாக அமாவாசை, பௌர்ணமி, கிரகணம் ஆகியவற்றை உருவாக வேண்டும்.
சரி எவ்வாறு உருவாக்குவது?
காற்றின் மூலம் அதுவே "பிராணயாம பயிற்சி" என முன்னோர்கள் கொடுத்துள்ளனர். இது இரு மூக்கு துளைகளின் வழியாக காற்றை இழுத்து நிறுத்தி வெளிவிட்டு செய்யும் பயிற்சி அல்ல.
"மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்…"
மூன்று மண்டலம் என்பது சூரிய, சந்திர, அக்னி மண்டலங்களை குறிக்கிறது. இந்த மூன்று மண்டலங்களை முட்டி நிற்கும் தூண் எது? நான்றெழு பாம்பு என்கிறார் ஒளவை. பாம்பு என்பது குண்டலியை குறிக்கும். இந்த பாடலில் இருந்து குண்டலி என்பது இட, பிங்கலை, சுழுமுனை நாடிகளுக்கு அருகிலும் ஊடுருவியும் இருப்பதாக புலப்படுகிறது.
சித்தர்கள் பாடல்களில் குண்டலினி விளக்கங்கள்:
ஈசன்தன் வாயிலில் ஏற்று"
"மூலத்து வாரத்து மூளு மொருவனை
காலுற்றுக் காலனைக் காய்ந்தங் கியோகமாய்
ஞாலக் கடவூர் நலமா யிருந்ததே."
- திருமந்திரம்
நெறிப்பட வுள்ளே நின் மலமாக்கி (நிர்மலமாக்கி)
புறப்பட்டுப் போகான் புரிசடையோனே."
முதல் பாடல் ஈசன் வாயில், இரண்டாவது பாடல் மூல துவாரம் என குறிக்கப்பட கூடிய இந்த வாசலின் வழியாக பிராண வாயுவை ஏற்ற வேண்டும். சித்தர்கள் "கால்" என்ற வார்த்தையை காற்றை குறிக்க உபயோகப்படுத்தி இருப்பார்கள். இரண்டாவது பாடல் = "காலுற்ற..." மேற்கண்ட பாடல்களிலிருந்து இட பிங்கலை, சுழுமுனை நாடிகளின் வழியாக வாயுவைப் பொருந்தி பயிற்சிகள் செய்ய சொல்வதாக தெரிகிறது.
ஈரைந்து வாசலில்…
நன்றாக கவனியுங்கள். ஈரைந்து = இரு + ஐந்து = பத்து அவ்வை பத்து வாயில்களை சொல்கிறார். என்ன இது? ஒன்பது வாயில் தானே நமக்கு தெரியும்? அது என்ன பத்தாவது வாயில்? அதுவே ஈசன் வாயில் அல்லது மூல துவாரம். சரி ஈசன் வாயிலில் எப்படி பிராண வாயுவை ஏற்றுவது?
மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை"
நம் மனம் எங்கெங்கெல்லாம் பாய்கிறதோ அங்கெல்லாம் பிராண வாயு பாயும். எனவே மனதாலே ஈசன் வாயிலை நினைத்தால் பிராண வாயு ஏறும்.
இடைபிங்கலையின் எழுத்து அறிவித்து என்னும் பொருள் பற்றிய விளக்கங்கள்:
அதென்ன இட பிங்கலையின் எழுத்து? நம் தாய் தமிழ் மொழியில் ஒரு மிகப்பெரிய சிறப்பம்சம் உண்டு. அது என்ன வென்றால் மொழியின் எழுத்துக்களிலே இறைவனை பற்றிய ரகசியங்களை விட்டு சென்ற மொழி தமிழ் மொழி மட்டும் தான். உயிர் எழுத்து, மெய் எழுத்து ஆகிய இரண்டு வகைகள் மட்டுமே பொதுவாக உண்டு. இவை இரண்டும் ஒட்டாமல் தனி தனியாக உள்ளன. ஆனால் தமிழ் மொழியில் உயிர்மெய் எழுத்துக்கள் உண்டு. உயிரும் மெய்யும் ஒன்றோடொன்று கலந்து இயங்குவதை எழுத்துக்களிலேயே விட்டு சென்று விட்டனர். அது மட்டுமா? ஆயுத எழுத்து என சொல்லக்கூடிய ஃ என்ற எழுத்து தமிழில் மட்டும் தான் உள்ளது. இந்த எழுத்து ஒரு உபயோகம் இல்லாத எழுத்து என எத்தனை பேர் நினைந்து இருப்பீர்கள்? உடல், உயிர் ஆகியவற்றை பார்த்து விட்டோம். ஆனால் ஆன்மாவை காணோமே? ஃ ஆன்மாவை குறிக்கிறது அது உடலோடும் உயிரோடும் ஒட்டாது தனியே இருக்கிறது. வள்ளலார் ஒரு பாடலில் கூறுவார்.
மயில் குயில் ஆச்சுதடி அக்கச்சி, மயில் குயில்
ஆச்சுதடி"
நாம் தவத்தில் மூல வாசலை திறந்து, ஆழ்ந்து செல்ல செல்ல ஒளி, ஒலி அனுபவங்களை பெறுவோம். கோயிலில் என்ன நடக்கிறது? கருவறை வாசல் பூசைக்கு முன் மூடி இருக்கிறது. வாசல் திறந்ததும் தீபம் காட்டுகிறார்கள். கூடவே மணியும் அடிக்கிறார்கள். பின் இறைவன் தரிசனம் கிடைக்கிறது. இதுவேதான் நம் தவத்திலும் நடக்கிறது.
மேற்சொன்ன வள்ளலார் பாடலில் "அக்கச்சி" என்ற வார்த்தையை கூறி இருக்கிறார். "அக்கச்சி = அக் + ஆச்சி". (ஃ +ஆச்சி). அவர் அக் என சொன்னது இந்த ஆயுத எழுத்தை தான் சரி, இட பிங்கலைகளுக்கு எழுத்து இருக்கிறதா? அப்படியாயின் அவை எந்த எழுத்துக்கள்?
அ = பிங்கலை
உ = இடகலை
ம் = சுழுமுனை
இந்த மூன்றையும் தவத்தினாலே ஒன்றாக கலந்தால் அதுவே ஓம் ஆகிறது. 8-2 தத்துவம் என ஆன்மிகத்தில் உள்ளவர்கள்... தேடிக்கொண்டு இருக்கக்கூடிய ஒரு மிக ரகசியமான தத்துவம் இது. தமிழில் ௮ -8 ௨ - 2 குறிக்கிறது.
சரஸ்வதி படம் பார்த்து இருப்பீர்கள் அவர் எதில் அமர்ந்து இருக்கிறார்? ஆயிரம் இதழ் தாமரை மலரில். தாமரை எவ்வாறு இருக்கிறது? நன்றாக மலர்ந்து விரிந்து இருக்கிறது. சுழுமுனையின் இறுதி மலர் போன்ற மூளையில் முடிகிறது. ப்ரஹ்மரந்திரம் என்று சொல்ல கூடியது அது தான். நமது தற்போதைய மூளை மொட்டு போல சுருங்கி இருக்கிறது. நாம் இந்த நாடிகளின் வழியாக பிராண வாயுவை மேல் ஏற்ற மூளை மலராக விரிகிறது. அப்போது வெறும் ஹார்மோனை மட்டுமே சுரக்க கூடிய சுரப்பிகள் அமுதத்தை சுரக்க ஆரம்பிக்கும்.
சிவ பெருமானுடைய படத்தை பார்த்து இருப்பீர்கள். அவர் தலையில் பாம்பு இருக்கிறது. அது குண்டலினியை குறிக்கும். பிறை சந்திரன் இருக்கும் தலையில் இருந்து அமுத கங்கை வழிந்து கொண்டு இருக்கும். நாம் மூன்று மண்டலங்களை பார்த்தோம். சூரிய மண்டலம், சந்திர மண்டலம் மற்றும் அக்னி மண்டலம். இந்த பிறை சந்திரன் சந்திர மண்டலத்தை குறிக்கிறது. பிறையாக இருக்க கூடிய இந்த சந்திரனை முழு மதியாக ஆக வேண்டும். எவ்வாறு? மூன்று நாடிகளும் மூலாதாரத்தில் போய் முடிகிறது. பிராண வாயுவை இந்த நாடிகளின் மூலம் ஏற்ற ஏற்ற அது மூலாதாரத்தில் மூண்டு எழக்கூடிய மூலக்கனலை நன்றாக கிளர்ந்து எரிய செய்யும். இந்த கனலின் வெப்பம் தாங்காது மூளை மலராக விரியும். சந்திர மண்டலத்தில் இருக்க கூடிய அமுத கலை அமுதத்தை சுரக்க ஆரம்பிக்கும். அதை தான் சிவனின் தலையில் இருக்கும் கங்கை குறிக்கிறது.
பாலை இறுக்கி உண்டு பசி ஒழிவது எக்காலம்?
"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக