3 ஜன., 2025

மகாசக்தி குண்டலினி - ஆதாரத்தலங்களில் உடலுக்கு வெளியே தலை உச்சிக்குமேல் உள்ள தலமான சகஸ்ராரம் அல்லது பிரமரந்திரம் சக்கரத்தின் ஒளிவட்டம், அரிய பொக்கிஷங்கள் பற்றிய முழு விளக்கங்கள்:

 சகஸ்ராரம் அல்லது பிரமரந்திரம் விளக்கம்:


முந்தைய பகுதிகளில் கண்ட ஆறு ஆதாரத் தலங்களும் ஜட ஆதாரங்கள் எனப்படும், அதாவது உடலுக்குள் இருப்பவை. ஆனால் உடலுக்கு வெளியே தலை உச்சிக்குமேல் நிராதாரத் தலமாகிய சகஸ்ராரம் அல்லது பிரமரந்திரம் உள்ளது. கடவுளர் உருவங்கள், சித்தர்கள், பெரியோர்களின் தலைக்குப் பின்னதாகக் காணப்படும் ஆரா என அழைக்கப்படும் ஒளிவட்டம் இதுவேயாகும். சித்தியடைந்தவர்களுக்கு ஆரா அதிகமாகக் காணப்படும். வாசியோகம் செய்யாதவர்களுக்குக் கூட இந்த ஆரா காணப்படும். ஆனால், ஆராவின் நிறம், வடிவம், அளவு மாறுபடும். அவரவர்களது தியான சித்திக்கேற்ப 6 அங்குலம் முதல் 6 அடிக்கும் மேலாக இந்த ஆரா காணப்படும். ஆராவின் வலிமைக்கேற்ப நாம் பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ளலாம். சித்தர்கள் இதனை மறைப்பொருளாக விந்து என்பர். தற்காலத்தில் ஒவ்வொருவரின் ஆராவின் அளவை அளக்கக் கிம்பர்லின் போட்டோகிராபி, எலெக்ட்ரோ என்சிபிலோ கிராபி (Electro encephalo graphy) போன்ற கருவிகள்கூட உள்ளன.


சகஸ்ராரச் சக்கரம் அதன் சிறப்புத் தன்மைகள் மற்றும் துணை சக்கரங்கள்:


ஆன்மாவானது கருவினுள் சகஸ்ராரச் சக்கரத்தின் வழியாகவே நுழையும். இறக்கும்போது ஆன்மா இந்த சக்கரத்தின் வழியாகவே வெளியேறும். செய்த கர்மங்களின் அடிப்படையில் வெவ்வேறு வழிகளில் ஆன்மா வெளியே செல்லுமென்ற கருத்தை தந்திர யோகம் ஏற்றுக்கொள்வதில்லை. தந்திர யோகத்தின்படி அனைத்து ஆன்மாக்களும் சகஸ்ராரம் வழியாகவே வெளியேறும்.

ஒரு குழந்தை பிறக்கும்போது சகஸ்ராரச் சக்கரம் திறந்த நிலையிலேயே பிறக்கும். சகஸ்ராரச் சக்கரத்தில் சக்தித் தடைகளோ சக்தித் தேக்கமோ உருவாகாது. பிற சக்கரங்களை தந்திர யோகப் பயிற்சிகளின் மூலமாக (குண்டலினி சக்தியால்) நம்மால் திறக்கமுடியும். முழு வீச்சில் செயல்படச் செய்யவும் முடியும். ஆனால் சகஸ்ராரச் சக்கரத்தினுள் குண்டலினி நுழைவது தானாகவே நிகழும். நமது முயற்சிகளாலோ அல்லது பயிற்சிகளாலோ அதை நடத்தமுடியாது.

தந்திர யோகப் பயிற்சிகளால் ஆக்ஞை சக்கரம் வரையிலான ஆறு சக்கரங்களையும் திறக்கமுடியும். அதன்பின்னர் அவரவர் கர்மவினைகளின் அடிப்படையில் திடீரென ஒருநாள் தானாகவே குண்டலினி சக்தி சகஸ்ராரத்தினுள் சென்று அதைத் திறக்கும். இந்த நிகழ்வே ‘‘முக்தி நிலை’’ எனப்படும். இந்த முக்தி நிலையை அடைந்தவர்களுக்கு மீண்டும் பூலோகத்தில் பிறவிகள் கிடையாது. முக்தியடைந்த அந்த ஆன்மா இந்த பூலோகத்தைவிட்டு வெளியேறி, அடுத்த லோகமான புவர்லோகத்தில் சென்று சக்தி உடலாக வாழும்.

துணைச் சக்கரங்கள்:


ஆக்ஞை சக்கரத்திற்கும் சகஸ்ராரச் சக்கரத்திற்குமிடையே முக்கியமான பல துணைச் சக்கரங்கள் உள்ளன. மன சக்கரம், குரு சக்கரம், சோம சக்கரம், லலான சக்கரம், ஞானச் சக்கரம், மகாநாத சக்கரம், பிந்து சக்கரம் ஆகியவை முக்கியமானவை.

ஆக்ஞை சக்கரம் குண்டலினியால் தூண்டப்பட்டு திறந்துகொண்ட பின்னர், நமது தந்திர யோகப் பயிற்சிகளால் இந்த துணைச் சக்கரங்களை ஒவ்வொன்றாக நம்மால் திறக்கமுடியும்.

குண்டலினி சக்தி சகஸ்ராரத்தைத் திறக்கும் போது ஏற்படும் உணர்வு நிலைகள்சகஸ்ராரச் சக்கரத்தினுள் குண்டலினி சக்தி நுழையும்போது ஏற்படும் உணர்வு நிலை மனித அனுபவங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு நிலையாகும். இதையே சமாதி நிலை அல்லது ஜீவ சமாதி’’ என்றும் அழைக்கிறோம்.

இந்த நிலையை அடைந்தவர்களின் தலையைச் சுற்றி ஒளிவட்டம் உருவாகும். சமாதி நிலையை அடைந்தவர்கள் தன்னுள்ளே ஒடுங்கிப்போவார்கள். (தாமச நாடி தூண்டப்படுவதால் இது நிகழுகிறது). அவர்கள் நிறைகுடம் அதன்பின் தளும்பமாட்டார்கள். பேச்சு, பிரசங்கம், ஆரவாரங்கள் அனைத்தும் அடங்கிப்போகும். எல்லையற்ற ஆனந்த நிலையில் லயித்திருப்பார்கள். இது இறையோடு ஒன்றிய நிலை. மனித உணர்வுகளைக் கடந்த நிலை. இந்த நிலையை அடைந்தவர்கள் எவரும் அந்த நிலை எப்படிப்பட்டது என்பதை விளக்கியதில்லை. அது விளக்கங்களால் புரிந்து கொள்ளமுடியாத ஒர் அனுபவம்.

சகஸ்ராரச் சக்கரத்தினுள் குண்டலினி நுழைந்தால் எத்தகைய உணர்வு நிலை ஏற்படும் என்ற கேள்விக்கு, கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் என்பதையே பதிலாகக் கூறமுடியும்.

சகஸ்ராரம் குறித்து சித்தர் போகர் பாடல்கள்:

தானான மனோன்மணியைத் தாண்டி அப்பால்
    தனித்ததோர் எட்டுவிரல் மேலேகேளு
கோனான குருபதம்தான் கூட்டிப்பாரு
    குறிப்பான இதழ்களோ ஆயிரத்தெட்டு
ஆனான நடுமையம் ஐங்கோணமாகும்
    அகாரம் உகாரமொடு மகாரமாகும்
நானான நாதமொடு விந்து அஞ்சும்
    நலத்த வைங்கோணத்தில் நிற்கும் பாரே
                                        போகர் 7000


பார்க்கவே உகாரமாய் நடுமையத்தில்
    பரிசுத்த ஒளியாகி உதிக்கும் பாரு
பார்க்கவே நிகாரத்த நிர்மலன்றன் வடிவாம்
    பார்த்ததொரு வாசியைத்தான் அதற்குள் வைத்து
நேர்க்கவே யோடாமல் நிறுத்திப்பாரு
    நிலையாத பிறவியறும் பூரணமுட்கொள்ளும்
ஆர்க்கவே யடிவாழ வேதாந்தத்தின்
    அனாதிஎன்ற பொருளொருவர்க் கறியொண்ணாதே
                                        போகர் 7000

சகஸ்ராரம் அல்லது பிரமரந்திரம் தன்மைகள்:

அமைவிடம்      : ஆக்ஞாவிற்கு 8 விரற்கிடை 
                           மேலே தலைக்கு வெளியே சகஸ்ராரம்
                           உள்ளது.

 
இதன் வடிவம்    ஐங்கோணம் உடைய நட்சத்திரம்
                           ஆகும்இந்த ஐந்து கோணங்களானது 
                           விந்துநாதம்சக்திசிவம்பரம் 
                           ஆகிய நிராதாரத்தலங்களைக் குறிக்கிறது.
 
இதழ்கள்          : 1008 இதழ்கள்இந்த 1008 இதழ்கள்
                            என்பது நமது மண்டையோட்டில் உள்ள
                            ஆயிரத்தெட்டு நுண்ணிய துளைகள் ஆகும்.

இதன் நிறம்       : படிக வர்ணம் ஆகும்.

வித்துக்கள்        : அகாரம், உகாரம், மகாரம், விந்து, நாதம்.

பீஜ மந்திரம்       : ஓம் என்பதன் விரிவாகிய அகாரம்,

    உகாரம், மகாரம்.

சிவ பீஜமந்திரம்   : ஓம்.

சுவாசம்           : நாள் ஒன்றுக்கு 3000.

ஐம்பூதம்          : பரவெளி, விண்வெளி.

அவத்தை         : ஐந்தவத்தைகளின் ஒடுக்கம். 

செயல்பாடு        : சமாதி.

அதிதேவதை      : பராபரன், பரப்பிரம்மம்.

தொழில்கள்       : படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்.



சகஸ்ராரத் தலத்தின் சிறப்புகள்:



இந்தச்
சகஸ்ராரத் தலம் பெண்களுக்கு விந்து ஆகும். இந்தத் தலம் ஆண்களுக்கு நாதம் ஆகும். ஆயிரத்தெட்டு இதழ்கள் இருப்பினும், அதன் நடுவில் உள்ள பரிசுத்தமான வெளியில்தான், நாம் மனதை நிலைநிறுத்த வேண்டும். அவ்வாறு இந்தத் தலத்தில் மனதையும் வாசியையும் நிலைநிறுத்தினால் பிறவிப்பிணி அற்று, பரிபூரண இறைவன் நம்மை ஈர்த்துக் கொள்வான். சமாதிநிலை தரும் தலம் இது. பேரானந்த போதம் தரும் தலம் இதுவே ஆகும். இத்தலத்தில் இருந்து வாசியோகிகள் ஆசி வழங்கினால் அது சித்திக்கும்.


ஆதியில் சிவன் ஓம் நமசிவய என ஆறு தலங்களை மட்டுமே கூறியுள்ளார். ஆனால், முருகன் ஓம் சரவணபவ என ஏழு ஆதாரத்தலங்களைக் கூறியுள்ளார்.

இத்தலத்திற்கு மேலே உள்ள முப்பாழ் சென்று அதனையும் தாண்டி, பரவெளி செல்லும் யோகநிலையே மௌனயோகம் ஆகும். இத்தலத்தில் இருந்து மீண்டும் கீழே உள்ள ஐந்து ஆதாரத் தலங்கள் வழியாக இறங்கி, மீண்டும் மூலாதாரத்தை அடைவது பிடரி மார்க்கம் எனப்படும்.


"This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக