ஜீவ சமாதிகளைப்பற்றி சித்தர்கள் வகுத்துள்ள விதிகள்
சமாதி = சமம் + ஆதி = அதாவது ஆதியும் அந்தமுமாய் சொல்லப்படுகிற இறை நிலைக்கு சமனான ஒன்றுமற்ற அல்லது வெறுமையான மனநிலையில் இருப்பதே சமாதி எனப்படும்.
சாதாரண மனிதனின் மரணத்துக்கும், சித்தர்களின் சமாதி நிலைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. சாதாரண மனித மரணத்தில் உடலின் கழிவுகளான மலம், சிறுநீர், விந்து நாதம் போன்றவை வெளிப்பட்டு மரணம் சம்பவிக்கும். ஆனால், சித்தர்களின் சமாதி நிலையில் இவ்வகை கழிவுகள் வெளிவராமல் உயிர் சக்தியாகிய விந்துவானது உச்சந்தலையில் அடங்கி ஒடுங்கி விடும்.
சமாதி நிலை என்பது, தியானம் அல்லது யோகா மூலம் அடைந்த ஒரு மனநிலை. இதில், தியானிக்கப்படும் பொருளில் மனம் முழுமையாக உறிஞ்சப்பட்டு, வேறு எந்த சிந்தனையும் இல்லாமல், அந்த ஒன்றில் மட்டுமே மனம் இருக்கும் நிலை என்று கூறலாம். இது ஒரு உச்ச ஆன்மீக அனுபவமாக கருதப்படுகிறது.
சமாதி நிலையை அடைந்த ஒருவர், உலகத்தோடு எந்த தொடர்பும் இல்லாமல், தனது சுயத்துடன் ஒன்றிணைந்து இருப்பார். இது ஒரு தீவிர தியான நிலை என்றும், சுயத்துடன் ஒன்றிணைதல் என்றும் சொல்லப்படுகிறது.
சமாதி நிலை என்பது, யோகாவில் எட்டு நிலைகளில் கடைசியான நிலையாகும். இதைப் பற்றி யோக சூத்திரத்தில், "சமாதி என்பது தியானத்தின் பொருளில் உள்ள மொத்த உறிஞ்சுதலாக விளக்கப்பட்டுள்ளது, அங்கு மனம் முற்றிலும் அமைதியடைகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
சமாதி நிலை, தியானத்தின் ஒரு உயர்ந்த நிலை என்பதால், அதை அடைவது கடினம். ஆனால், தொடர்ந்து தியானம் மற்றும் யோகா பயிற்சி மூலம், சமாதி நிலையை அடைய முடியும். சமாதி நிலை என்பது, ஒரு ஆன்மீக பயணத்தின் இறுதி இலக்காகவும், மோட்சம் எனப்படும் இறுதி விடுதலைக்கும் வழிவகுக்கும் ஒரு நிலையாகும்.
ஞானிகள் சமாதியில் செய்யும் செயல்கள்:
கண்ணுக்கு தெரியும் உடலை விட்டு மண்ணில் மறையும் உடலுக்கு சமாதி என்று பெயர் அல்ல!
மூச்சு காற்றை கொண்டு ஜீவ முக்தி பெற்று தன் மூச்சை கொண்டு இறைவனை அறிந்து கொண்டு இந்த உடலை மண்ணில் வைத்த பின்பும், உடலுக்குள் உள்ள உயிராகிய ஜீவனை தக்க வைத்து பல பயிற்சிகள் மேற்கொண்டு அங்கிருந்து தன் ஆன்மா துணையோடு பல பல லோகங்களை கண்டு, அதை படைத்தவனை கண்டு, பல பல நிலைகளை சமாதி நிலையில் தான் அடைய முடியும், என நிரூபித்த ஞானிகள் சமாதி என்பது இறந்துவிடுவதல்ல இன்னும் பல பல நிலைகளை அடைய உதவும் ஒரு யுக்தி ஆகும்!!
இதை போக பெருமான் தன் போகர் 1000 என்னும் நூலில் கூறியுள்ளார்.
சமாதி நிலை பற்றிய திருமூலர் விளக்கம்:
சமாதி யமாதியில் தான்எட்டுச் சித்தி
சமாதி யமாதியில் தங்கினோர்க் கன்றோ
சமாதி யமாதி தலைப்படும் தானே.
நாம் இறைவனுடன் ஒன்றுவதே சமாதி நிலையாகும். அந்தச் சமாதி நிலையை அடைந்துவிட்டால் நமக்கு அனைத்தும் கூடிவரும். அதனை அடைவதற்கான அஷ்டாங்க ஞானயோகப் பயிற்சியின் ஏழு நிலைகளையும் கடந்தால் தான் இறுதி நிலையான சமாதி நிலையை அடைய முடியும். சமாதி நிலையில் தான் எட்டுச் சித்திகள் என்று சொல்லக்கூடிய அட்டமா சித்திகளை அடையமுடியும் என்று திருமூலர் கூறுகிறார்.
சமாதி என்பது என்னவென்று திருமூலர், தமது மற்றொரு பாடலில் கூறுகிறார்
சிற்பனை எல்லாஞ் சிருட்டித்த பேரொளிப்
பொற்பனை நாடிப் புணர்மதி யோடுற்றுத்
தற்பர மாகத்தகுந் தண் சமாதியே.
நாம் மனதைக் கற்பனையில் செல்லவிடாது ஒடுக்கி மூலக்கனல் வழியே சென்றால் அனைத்தையும் சிருஷ்டிக்கும் சிவனது பேரொளியைக் காணலாம். அந்தப் போரொளி நம்மைப் பொற்பாதங்களையுடையவனிடம் கொண்டு சேர்க்கும். அவனுக்கு இணையாக இருக்கும் பேற்றினைக் கொடுக்கும். இதுவே சமாதி நிலை என்று கூறுகிறார்.
இப்படிச் சமாதி நிலையில் சிவத்துடன் ஒன்றிவிட்ட சித்தர்களும், ஞானிகளும் தமது ஸ்தூல சரீரம் புதைக்கப்பட்டாலும் சூக்கும சரீரத்துடன் ஜீவசமாதியினுள் இருந்து சிவத்திற்கொப்பான அனைத்துச் செயல்களையும் செய்து கொண்டிருக்கின்றனர்.
சமாதி நிலை பற்றி வேதாத்திரி மகரிசி
உள்புதைத்து, சமாதி என்று பூஜை செய்து,
உண்மைகளை அறிந்துபயன் அடைய வென்றால்,
உள்நாடி சமாதி நிலை அறிய வாரீர்!
கொங்கணவர் சமாதி நிலை விளக்கம்:
கொங்கணவர் தனது கொங்கணவர் வாதகாவியம் என்ற நூலில் சமாதி நிலைகளைப் பற்றி விரிவாக விளக்கியிருக்கிறார். ஆறுவகையான சமாதி நிலைகள் இருப்பதாக கொங்கணவர் குறிப்பிடுகிறார். அவை
- தத்துவல்ய சமாதி
- சவிகற்ப சமாதி
- நிருவிகற்ப சமாதி
- அகண்டவிர்த்தி சமாதி
- சஞ்சார சமாதி
- ஆரூட சமாதி
செந்தில்குமார்
செல்: 9655472931
நச்சாந்துபட்டி,
புதுக்கோட்டை மாவட்டம்.
This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக