ஏன் பிறந்தோம்? கர்மா விதி:
மனிதன் தனது முன்னகால கர்மாவினால் (செயல்கள் மற்றும் அவற்றின் விளைவுகள்) இந்த வாழ்க்கையை அடைகிறான். "யதா கர்ம யதா ஸ்ருதம்" ஒருவர் செய்த செயல்களின் அடிப்படையில் அவருக்கு பிறப்பு ஏற்படுகிறது. வாழ்க்கை என்பது கர்மத்தின் தொடர்ச்சி, அதனால் ஏற்பட்ட கற்பதற்கான வாய்ப்பு.
மனிதன் ஆன்மீக வளர்ச்சிக்காகவும் பிறக்கிறான். கிருஷ்ணர் கூறுகிறார் "அபர்யாப்தம் ஸம்ஸாரசக்ரம்" (பகவத்கீதை) ஆத்மா வாழ்க்கை மற்றும் மறுபிறப்பின் சுழற்சியில் பயணிக்கிறது, பரமாத்மாவை அடைவதற்கான முயற்சியில் அப்படியெனில், பிறப்பின் நோக்கம் தான் என்ன? என்பதற்க்கு, மூல காரணம் நாம் தர்மத்தை பின்பற்றவும், ஆன்மீகத்தில் மேன்மை அடைவதுமாகும்.
பிறப்பின் நோக்கம் என்ன:
பிறந்ததற்க்கான பயன் என்னவெனில், ஆன்மீகத்தின் மூலம் இறைவனை அடைவதும்! நம் செயல்களில் தெய்வீகத்தை வெளிப்படுத்தவும், மனிதனாக பிறந்ததின் சிறப்பே! நம் ஆத்மாவிற்கு பரம்பொருளை அடைய உதவக்கூடிய ஒரு வாய்ப்பென்பதே இறுதி நிலையாகும்.
"ஸ்வதர்மே நிதனம் ஸ்ரேய: பரதர்மோ பயாவஹ:" (பகவத்கீதை): ஒவ்வொருவருக்கும் அவருடைய தனித்தன்மையான தர்மம் (செயல்பாடு) உள்ளது, அதனை நற்செயல்களில் பயன்படுத்த வேண்டும். மனிதனின் உள்ளார்ந்த நோக்கம் மோக்ஷம் (விடுதலை) பெறுவது. "பூநர்ஜன்ம ந விததே" (பகவத்கீதை): வாழ்வின் இறுதி நோக்கம் மறுபிறப்பைத் தவிர்க்கும் அளவிற்கு ஆன்மாவை பரிசுத்தமாக்கி பரமாத்மாவுடன் இணைவதே.
பிறந்ததன் பயன் என்ன? ஆன்மீகத் தேடல்:
வாழ்க்கை என்பது உண்மையை அறிதல் மற்றும் பரம்பொருளை அடைவதற்கான பயணம். "தத் ஜ்ஞானம் பரம் நித்யம்" உயர் ஞானத்தை அடைவதே வாழ்க்கையின் பயன். செயல்கள் மற்றும் தன்னர்ப்பணம் "யஜ்ஞார்த்தாத் கர்மணோந்யத்ர லோகோயம் கர்ம பந்தன" (பகவத்கீதை) தெய்வீக செயல்களுக்காக (யாகம்/செயல்கள்) வாழ வேண்டும் இல்லையெனில் மனிதன் கர்மத்தின் கட்டுப்பாட்டில் சிக்கிக்கொள்கிறான். மனித உடல் கர்ம சாத்தியத்தை உணர்த்தும் தன்மை கொண்டது. இது ஆத்மாவிற்கு பரம்பொருளை அடைய உதவக்கூடிய ஒரு வாய்ப்பு.
கிருஷ்ணரின் இறுதி உபதேசம்:
"ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ" (பகவத்கீதை) இறுதியில், வாழ்க்கையின் முழு பயன் என்பது இறைவனின் மீது சரணாகதி அடைவது மற்ற எல்லா நோக்கங்களும் மாறுபட்டவை, ஆனால் பரம பொருளின் மீது முழுமையான நம்பிக்கையும் ஒப்படைப்பும் வாழ்க்கையை முழுமையாகக் காப்பாற்றும்.
கர்மத்தின் சுழற்சியில் சிக்காமல், தன்னுடைய ஆன்மீக முன்னேற்றத்தை நோக்கி பயணிக்க வேண்டும். தர்மத்துடன் வாழ்ந்து, இறுதியில் மோக்ஷத்தை அடைய முயற்சிக்க வேண்டும். தன்னிலைமையை அடைந்து, தெய்வத்தின் மீது முழு ஒப்படைப்புடன் வாழ வேண்டும். மனிதன் பிறப்பின் முக்கிய நோக்கம் தன் தர்மத்தை பூர்த்தி செய்தல், ஆன்மீக உயர்வை அடைதல், மற்றும் இறைவனை உணர்ந்து அதனுடன் ஒருமித்த நிலையை அடைவதே ஆகும்.
கர்மா மற்றும் மறுபிறப்பு:
"யதா கர்ம கரணாத் தத் பேஜம் மானுஷ்ய ஜன்மமு" அதாவது, ஒவ்வொரு பிறப்பும் ஒரு முன் கர்மாவின் விளைவாக ஏற்படுகிறது. மனிதன் தன் செயல்களின் அடிப்படையில் பிறப்பு மற்றும் மறுபிறப்பை சந்திக்கிறான்.
"ஸ்வதர்மே நிதனம் ஸ்ரேய: பரதர்மோ பயாவஹ:" தனி மனிதனுக்கு அவனது சொந்த தர்மத்தை கடைபிடிப்பதே முக்கியம். பிறப்பின் முக்கியத்துவம் கடமைகளை நேர்மையாக நிறைவேற்றுவதில் உள்ளது.
"மாமுபேத்திய புனர்ஜன்ம துகாலயம் அஷாஷ்வதம்" தனது ஆன்மீக சாதனையின் மூலம் மனிதன் கடவுளை உணரும்போது, பிறப்பு மற்றும் மறுபிறப்பு என்ற சுழற்சியில் இருந்து விடுபடுவான். தன்னலமற்ற சேவையோடு அனைத்து செயல்களையும் செய்வதே சிறப்பு ஏனெனில், கிருஷ்ணர் "நிஷ்காம கர்மா" என்ற கருத்தை வலியுறுத்துகிறார், அதாவது செயல்களில் ஈடுபட வேண்டும் ஆனால் பலன்களில் ஆசைப்படக்கூடாது. இது மனித பிறப்பின் புனித நோக்கமாக கருதப்படுகிறது.
கிருஷ்ணர் தன்னை பிரபஞ்சத்தின் ஆதார சக்தியாக குறிப்பிடுகிறார். "அஹம் ஆத்மா குதேஷு சர்வபூதாஷயஸ்தித" இறைவன் அனைத்திலும் இருக்கிறான், இதை உணர்வதே பிறப்பின் ரகசியத்தை அறிந்ததற்கு சமம். மொத்தத்தில், கிருஷ்ணர் சொல்லும் கேள்விக்கு விடை மனிதன் தனது உள்ளார்ந்த ஆன்மீக இயல்பை உணர்வதிலும், கடவுளுடன் கலப்பதிலும் இருக்கிறது.
செந்தில்குமார்
செல்: 9655472931
நச்சாந்துபட்டி,
புதுக்கோட்டை மாவட்டம்.
"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக