காம ரகசியம் - 02 அடக்கப்பட்ட காமமும் காமத்தின் மீதான வெறுப்பும்
காமம் மிருகத்தனமானது என்ற கருத்து மீதான ஓஷோவின் பார்வை பற்றி இந்தப்பதிவில் பார்ப்போம்.
மனிதனும் ஒரு மிருக வகையினை சார்ந்தவன் தான், ஆனால் அவனை மிருகம் என்று மட்டும் சொல்லமுடியாது, அவன் ஒரு முடிவான் மிருகம் அல்ல, அவன் மேலும் மிருகமாகவும் முடியும் அல்லது மேல் நோக்கி தெய்வமாகும் வழியிலும் செல்லமுடியும். அவன் எதையும் தேர்வு செய்யும் உரிமையினை பெற்றுள்ளான். நாய் என்பது கடைசிவரை நாய் எனும் மிருகம்தான், ஆனால் மனிதம் புத்தர் என்ற புனிதராகவும் முடியும், ஹிட்லர் என்ற கொடுங்கோலனாகவும் முடியும். அவன் இருபக்க தேர்வு சுதந்திரம் உடையவன்.
இங்கு காமம் மிருகத்தனமானது என்ற கருத்தில் மிருகத்தனம் என்பதனை வரவிலக்கணப்படுத்த வேண்டும், உலக வரலாற்றில் மனிதனைத்தவிர எந்த மிருகங்களூம் அதிகளவு போர் செய்ததில்லை, தமது இனத்தையே கொடுரமாக கொலை செய்ததில்லை, இப்படியிருக்க மிருகத்தனம் என மனிதன் தனது தவறான செய்கைகளுக்கு வரைவிலக்கணப்படுத்துவது மிகவும் தவறானது. மனிதன் தனது தேர்வு செய்யும் உரிமை மூலம் மிருகத்தினை விட அதிகமாகவே முன்னேறிவிட்டான், அதனை சுத்த மிருகத்தனம் என்கின்றான். இதனை புரிய சிறிய குட்டிக்கதை ஒன்றினை பார்ப்போம்.
ஒரு ஹோட்டலில் ஒருவர் தனது நாயுடன் தங்குவதற்கு விரும்பினார், அதற்கான அனுமதியினை முகாமையாளரிடம் கேட்ட போது கீழ்வரும் பதிலினை பெற்றார், அன்புள்ள ஐயா, நான் ஹோட்டல் துறையில் கடந்த முப்பது ஆண்டுகளாக உள்ளேன், இந்த முப்பது ஆண்டு சேவையில் நான் ஒரு நாயினை வெளியேற்றுவதற்காக ஒருபோதும் பொலிஸினை கூப்பிட்டதில்லை, எந்த ஒரு நாயும் எனக்கு செலுத்த வேண்டிய கட்டணத்திற்காக செல்லுபடியாகாத காசோலையினை தந்ததில்லை, எந்த ஒரு நாயும் கட்டிலில் உள்ள போர்வையினை சிக்கரட் நாற்றத்தால் நாறடித்ததில்லை, எந்த ஒரு நாயும் தந்து சூட்கேஸில் துவாயினை சுருட்டி எடுத்து சென்றதில்லை, ஆகவே உங்களுடைய நாய் தாராளமாக தங்கலாம் என்றான், இதில் உள்ள நாய் எனும் விலங்கு மிகவும் இயல்பானது, செயற்கைதனம் அற்றது, ஆனால் மனிதன் சூழ்ச்சி நிறைந்தவன், எல்லவற்றிலும் தனது இலாபம் என்ன என்று பார்ப்பவன்.
ஆக மனிதன் எந்த நிலைக்கும் போகும் வாய்ப்பினை உடையவன், தாழ்ந்த நிலைக்கும் செல்லலாம், மேலான நிலைக்கும் செல்லலாம். ஆகவே மனிதனது மிருகத்தனம் என்பது என்னவென்று புரிதல் அவசியம், ஆதலால் காமம் என்பது மிருகத்தனம் அல்ல காமம் மிருகத்தனம் ஆக்கப்படலாம். அதேவேளை அது அன்பாகவும் மாற்றப்படலாம், உயர்ந்த பிரார்த்தனை ஆகலாம், அதனை மிருகத்தனம் ஆக்குவதும் தெய்வீகம் ஆக்குவதும் மனிதனது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு அல்லது சுதந்திரமே அன்றி, காமம் மிருகத்தனமோ, பாவமானதோ அல்ல! அதனை அப்படி ஆக்குவது அதனை அணுகியவரின் அணுகுமுறையில் உள்ள தவறே அன்றி காமத்தில் உள்ள தவறு அன்று!
காமம் என்பது இதுதான் என்று கூறக்கூடிய ஒரு திடப்பொருள் அல்ல! அது நல்லதாகவும், கெட்டதாகவும் மாற்றப்படக்கூடிய ஒரு வாய்ப்பு! அவ்வளவே! அது உங்கள் கையில் உள்ளது, காமத்தினை கொண்டு பேரின்பத்தினையும் அடையலாம், யோகம் கூறும் அதி உன்னத நிலையான சமாதியினையும் அடையலாம்! காமத்தினை கடவுளை அடையும் ஒரு பாலமாகவும் பயன் படுத்தலாம்! இந்த சாராம்சமே தாந்திரீகத்தின் சுருக்கமான விளக்கமாகும்!
ஆக காமத்தினைப்பற்றிய புரிதலில் மனிதனது வரைவிலக்கணங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டிய விடயங்களாகும்! இப்படிப்புரிந்து கொள்ளும்போது காமத்தின் மீதான தவறான பார்வைகள் விலக்கப்பட்டு காமத்தினை ஆரோக்கியமாக அணுகும் தன்மை இளைஞர்களின் மனதில் கட்டாயம் உருவாகும், இதன் மூலம் நல்லதொரு ஆரோக்கியமான சமூகம் உருவாகும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை!
காம ரகசியம் தொடரும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக