மௌனம் என்பதன் விளக்கம்:
நாம் கருத்தொடராய்ப் பெற்ற வினைப் பதிவுகளையும், பிறவி எடுத்த பின் ஆற்றிப் பெற்ற வினைப் பதிவுகளையும் தன்மைகளாகப் பெற்றவர்களாவோம். நம் வினைப்பதிவுகள் அனைத்தும் புதையல் போல உயிர் எனும் இயற்கை கம்ப்யூட்டரில் அடங்கியுள்ளன. காலத்தால் மலரும் அப்பதிவுகளின் வெளிப்பாடுகளே எண்ணங்கள், செயலார்வம், நோய்கள், இன்ப துன்பங்கள் யாவுமாகும்.
ஒரு தொழிலதிபர் அல்லது வணிகர் மாதந்தோறும் அல்லது ஆண்டுதோறும் இருப்பிலுள்ள பொருள்களை கணக்கெடுப்பது போல எல்லாருமே மாதத்திற்கு ஒரு நாளோ அல்லது ஆண்டுக்குச் சில நாட்களோ ஒதுக்கிக் கொண்டு நம் இருப்பைக் கணக்கெடுக்க மௌன நோன்பு அவசியம்.
இந்தக் கருத்தோடு, தவத்தால் அறிவை அமைதிக்கும் கூர்மைக்கும் கொண்டு வந்து, அகத்தாய்வால் நமது இருப்புகளைக் கணக்கெடுத்து, புதிய திட்டங்கள், ஆக்க வாழ்வுக்கு வழி செய்து கொள்ள வேண்டும். மௌன நோன்பின் உண்மை நோக்கமறிந்து விழிப்புடன் காலத்தைப் பயன்படுத்தி, ஆன்ம தூய்மையும், வாழ்வின் வளமும் பெறுவோம். தான், குடும்பம், உற்றார், ஊர், உலகம் என்ற ஐந்து பிரிவுகளையும் பல தடவை வாழ்த்தி அமைதி காண்போம்.
முன்படர்ந்து வாயாலே சொல்லக்கூடும்?
மோனமே அறிவினது அடித்தளம் ஆம்,
மிகவிரிவு. எல்லையில்லை, காலமில்லை;
மோனத்தில் அறிவு தோய்ந்து பிறந்தால்
முன்வினையும் பின்வினையும் நீக்கக்கற்கும்
மோனநிலை மறவாது கடமையாற்ற
மென்மை, இன்பம், நிறைவு, வெற்றி அமைதியுண்டாம்".
வேதாத்திரி மகரிஷி.
மௌனத்தின் மேன்மை யாது?
"நாம் பேசாதிருக்கும்
போது இறைவன் நம்மோடு பேசுகிறான்." இப்படிச் சொல்வது வேறு ஒன்றுமில்லை. எப்போதும்
அவன் இருக்கிறான், அவன் பேசுகிறான், அதைக் கேட்பதற்கு இல்லாமல் நாம் வேறு எதையோ கேட்டுக்
கொண்டிருந்தால் அவன் பேசுவது கேட்பதில்லை. அதனால் நம் வேலைகளையெல்லாம் நிறுத்திவிட்டு
கொஞ்சநேரம் மௌனம் இருக்க வேண்டும்.
ஒவ்வொருவரிடமும் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு ஆயிரம் தேவையில்லாத கருத்துகள் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு மௌனத்தில் உட்கார்ந்தீர்களானால் தானே வரும். அதில் பத்து பதினைந்து கருத்துகளை எடுத்து முடிவு கட்டுங்கள். ஓரிரு மாதங்களில் முடிவு பண்ணிவிடலாம். மறுபடியும் அதே கருத்து வரும் போது அதே அழுத்தம் கொடுத்து கெட்டக் கருத்துகள், செயல்கள், எண்ணங்கள் எத்தனை உண்டோ அத்தனையும் நல்லதாக்கி விடலாம்.
இதற்கு உட்கார்ந்து யோசித்துப் பார்த்தால்தானே நேரம் கொடுத்தால் தானே வரும்? சிலருக்கு ஒரு நாளைக்குக் கூட உட்கார முடியவில்லையே என்று மன வருத்தம் இருக்கிறது. அதற்காக வருந்தவே வேண்டியதில்லை. யாராகிலும் ஒருவர் நமக்குத் தேவை இல்லாத வார்த்தையைச் சொன்னார்கள். அதற்குப் பதில் சொல்லாமல் எரிந்து விழறது என்று இல்லாமல் அந்த இடத்தில் மாத்திரம் மௌனம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம் இல்லையா?
இதற்கு நேரம் தேவையில்லை. எப்படி கண்ணாடி அதிகமான சூரிய வெளிச்சத்தை வாங்கி மற்றதை எரிக்கக்கூடிய வல்லமை பெறுகிறதோ அதேபோல மௌனத்தில் ஏற்படக் கூடிய (Vortex) சுழல் மையம் நம்முடைய ஜீவகாந்த சக்தி அதிகமாக ஆக ஆக அதில் சுழற்சி அதிகமாக ஆக ஆக மைய ஈர்ப்பு அதிகமாகும். அந்த மைய ஈர்ப்பு அதிகமாகி விட்டதென்றால் எண்ணங்களையும் ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம். மற்றவர்களுடைய நட்பும் அதிகமாக இருக்கும். எல்லோருக்கும் உங்கள் பேரில் விருப்பமும் மதிப்பும் தானாகவே உருவாகும்.
இறையுணர்வுக்கு
மௌனத்தின்
அவசியம்
:
அகத்தவத்திலே உயிர்மேல் மனம் வைத்து அறிவை அமைதி நிலைக்கு கொண்டு வருவது முதற்செயல் உயிரை உணர்வாய்ப் பெறும் இந்தத் தவமுறையைக் குருவின் மூலமே கற்றுக்கொள்ள வேண்டும்.
பிறகு இதுவரையிலும் அறிவிலே பதிந்துள்ள வினைப் பதிவுகளின் தன்மையுணர்ந்து நலம் விளைக்கும் புதிய முறையிலே திருப்பிப் பழக்கும் முறை அடுத்த தொடர்ச் செயல் ஆன அகத்தாய்வு.
இவற்றை முறையே மனமடக்க ஓர்மைப் பயிற்சி (லயம்) என்றும் அகத்தாய்வு என்றும் கூறுகிறோம்.
இவ்விரு பயிற்சிகளின் போதும் வாய் திறந்து பேசுவது முரண்பாடான செயலாகும். எனவே மௌனமாக இருக்க வேண்டியது இன்றியமையாததாகும். முழுநோக்கம் மனமடக்கம் சடங்கு வாய்திறந்து பேசாமை வாய்மூடி பேசாதிருந்து மன ஓர்மைப் பயிற்சியோ அகத்தாய்வோ இயற்றாமலிருந்தால் மௌன நோன்பு என்பது முழுமை யாகாது.
மனிதன் பேசுவது தனது அறிவினை அனுபவங்களைப் பிறர்க்கு எடுத்துக் கூறி மற்றவர்களுக்கும் பயன்பெறச் செய்யவும் தனது தேவைகளைப் பிறர் உணர்ந்து கொண்டு தக்கபடி உதவி செய்யப் பெறுதற்குமேயாம்.
மனச் சீரமைப்புப் பெறாதவன் பேசினால் தவறான பயன்களும் துன்பங்களும்
பல்லவா விளையும்? இதனை ஒரு சித்தர்
பெருமான் குறிப்பிடுகிறார். சினம் அடங்கக் கற்றாலும்
சித்தியெலாம் பெற்றாலும் மனமடங்கக் கல்லார்க்கு வாய் ஏன் பராபரமே!
மௌனத்தின் வகைகள்:
- வாக்கு மௌனம்
- கருவி மௌனம்
- மகா மௌனம்
வாக்கு மௌனம்: வாய் பேசாதிருத்தல்
வாக்கு மௌனம்
கருவி மௌனம்: ஞானேந்திரியம், கர்மேந்திரியம் இவைகள் அடக்கமாக இருப்பது கருவி மௌனம்
மகா மௌனம்: வாக்கு மௌனம், கருவி மௌனம் மற்றும் அலைகின்ற மனத்தை அமைதிப்படுத்தி இறை நிலை உணர்வோடு இருத்தலே மகா மௌனம்
நிலைப்பேறு : மனம் செம்மை பெறாதவர்கள் பேசுவதால் என்ன பயன் என்று வினவுகிறார் திருவள்ளுவர் கூறும் அறிவுரையையும் இங்கு நினைவு கூர்வோம்.
ஆரிருள் உய்த்து விடும்."
தன்முனைப்பை அடக்கி அகண்டாகாரப் பேராற்றலோடு தன்னை இணைத்துக் கொண்டால் இறையருள் சுரந்து இன்பம் ஓங்கும் இல்லையேல் துன்ப இருளில் ஆழ்த்தி விடும் என்பதே இக்கவியின் கருத்தாகும்.
மௌனத்தின் பயன்கள் :
- புலன் அடக்கம் பெறும்.
- சீவகாந்தப் பெருக்கம், சீவகாந்தச் செறிவு ஏற்படும்.
- தவத்தினால் இறைநிலையுணர்வு கிட்டும்.
- தற்சோதனை செய்ய உதவும்.
- அறிவாட்சித் திறன் பெருகும்.
- அயராத விழிப்பு நிலை ஏற்படும்.
- ஆன்மிக முன்னேற்றம் ஏற்படும்.
- குணநலப்பேறு கிட்டும்.
- தொண்டு மனப்பான்மை பெருகும்.
- செயல் விளைவு தத்துவம் விளங்கும்.
- பிரபஞ்ச இரகசியமும் இயக்க தன்மையும் விளங்கும்.
நச்சாந்துபட்டி,
புதுக்கோட்டை மாவட்டம்.


.jpg)