22 அக்., 2025

பிரமச்சரியம் என்றால் என்ன? பிரம்மச்சாரியம் எதனால் ஏற்படுகிறது? பிரம்மச்சாரியம் கடைபிடிப்பதால் ஏற்படும் பயன்கள் என்ன? பிரம்மச்சாரியத்தால் ஞானம் கிடைக்குமா? என்பதைப் பற்றிய விளக்கம்:

 

பிரம்மச்சரியம் என்பதன் விளக்கம்:

பிரம்மச்சரியம் என்பது இந்திய மதங்களில் கூறப்படும் ஓர் ஒழுக்கமாகும். இது பொதுவாக மூன்று முக்கிய அர்த்தங்களைக் கொண்டுள்ளது: கல்வி கற்பதற்கான மாணவப் பருவம், திருமணத்திற்கு முன் கடைப்பிடிக்கப்படும் புலனடக்கம், மற்றும் இல்லற வாழ்க்கையில் இருந்தாலும் குழந்தைப் பேற்றுக்காக மட்டுமே மனைவியுடன் இணையும் வாழ்க்கை முறை. இதன் அடிப்படையானது எண்ணம், சொல், செயல் மூன்றிலும் தன்னடக்கம் மற்றும் கட்டுப்பாடு ஆகும்.

பிரம்மம் ஆகிய ஆன்மாவை அடைய செய்யும் முயற்சியும் பயிற்சியும் தான் பிரமச்சரிய விரதம்.

அது விந்துவை சிரசில் இருக்கும் பிரமத்துவாரத்துக்கு ஏற்றுவதாகும். அங்கிருக்கும் குளம் நிறைந்து, அதன் மூலம் சுப்பிரமணி சிரோன்மணிஷண்முக மணிகௌதமமணி உருவாகும் வரை நடைபெற வேண்டியதாகும். அதுக்கு தோராயமாக 12 ஆண்டு என கணக்கிட்டார்கள். அந்த காலத்தில் விந்து நீக்கம் இல்லாதிருந்து அதை சிரசுக்கு ஏற்ற வேண்டியது அவசியமாகிறது....

இது தான் உண்மையான பிரம்மச்சரிய விரதம் ஆகும். திருமணம் ஆகா சாமியார்கள் சன்னியாசிகள் மேற்கொள்வது அல்ல.... இந்த வார்த்தை உச்சரித்தவுடன் எல்லோர்க்கும் நினைவு வருவது,

(1) திருமணம் செய்யாமல் இருத்தல்.
(2) மனைவியுடன் உடலால் கலவாமல் இருத்தல்.
(3) விந்து நீக்கம் தவிர்த்தல்.

உண்மை இது தானா ??
ஆனால் உண்மை இதுவல்ல

 

பிரம்மச்சரியம் எனில்??
எந்த பயிற்சி ஆற்றினால், அதனால் ஆன்மா ஆகிய பிரம்மம் காண முடியுமோ அதுவே ஆகும்.

பிரம்மச்சரியம் எதனால் ஏற்படுகிறது?      

எப்போதும் ஆண்பெண் உடலிணைப்பே இல்லாமல் வாழ்வது பிரமச்சரியம் என்று தவறாகக் கருதப்படுகிறது. இந்த வைராக்கியம் கொண்டவர்கள் மிகவும் உயர்வடைய முடியும் என்ற நம்பிக்கையும் பலரிடம் இருக்கிறது. இவ்வாறு நீங்கள் கருத வேண்டாம் என்று உங்களுக்கு எடுத்துச் சொல்லுகிறேன். உலகமீது உருவாகி வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள் அனைவரும் இந்த விரதம் கெட்டபோது தான் உற்பத்தியானார்கள் என்பதை ஞாபகப்படுத்துகிறேன்.

உலக உத்தமர்கள், ஞானிகள், தீர்க்க தரிசிகள், அனைவரும் பிரம்மச்சரியம் கெட்டவிடத்தில் தான் தோன்றினார்கள்; ஆண் பெண் நட்புடன், ஒழுக்கத்துடன், வாழ்ந்தார்கள், வாழ்ந்து வருகின்றார்கள் என்று உதாரணம் காட்டுகிறேன்.

வயது வரும் வரையில் கட்டுப்பாடாக இருந்து, பின்னர் ஒழுக்கத்துடன் திருமணம் கொண்டு, அளவு முறையுடன் உடல் கலப்புக் கொண்டு வாழ்வதையே நல்ல கொள்கையாகக் கொள்ள வேண்டும் என்று எடுத்துக் காட்டுகிறேன்.


பிரம்மச்சாரியத்தை கடைபிடிப்பவர்கள் செய்ய வேண்டிய பயிற்சி:


மனவளக்கலையில் காயகற்பப் பயிற்சி எனும் ஒரு அற்புதமான மனித வளப் பயிற்சி அளிக்கப்படுகிறது. விந்து நாதம் எனும் மூலப்பொருட்களைத் தூய்மை செய்து அவற்றின் வலுவையும், அளவையும். தரத்தையும் உயர்த்தும் எளிய பயிற்சி  ஆகும். திருமணம் வேண்டாம் என்று பொதுநல ஆன்மீகத் தொண்டில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இந்த அரிய காயகற்பக் கலை நல்லதோர் தோழனாகப் பயன்படும்.


காயகற்பப் பயிற்சியின் பலன்கள் :

 

"காயகற்பப் பயிற்சியினால் கண்கள் நன்றாம்,
    காம மிகை குறைசமனாம், குடும்ப வாழ்வில்
காயகற்பம் இனிமைஅன்பு விருப்பம் ஊக்கும்,
    கடமையுணர் வும்தெய்வ நினைவும் ஓங்கும்;
காயகற்பம் மூலநோய் குடல்புண் போக்கும்
    கனத்த உடல் இளைப்பிவற்றைச் சமப்படுத்தும்,
காயகற்பம் இருதயநோய் இரத்த பித்தம்
    கடும்மலக்கட் டிவைபோக்கி உடலைக் காக்கும்."

 

"கரைபோக்கி வித்ததனை உறையச் செய்யும்,
    காயகற்பப் பயிற்சியினால் உளநோய் நீங்கும்.
நிறைமனமும் ஈகையோடு பொறுமை கற்பு
    நேர்நிறையும் மன்னிப்பும் இயல்பாய் ஓங்கும்;
இறையுணர்வு விழிப்புநிலை அறிவுக் கூர்மை
    இனியசொல் எண்ணத்தின் உறுதி மேன்மை
மறைபொருளாம் மனம்உயிர்மெய் யுணர்வு கிட்டும்
    மாதவமாய்ப் பிறப்பிறப்புத் தொடர் அறுக்கும்."
வேதாத்திரி மகரிஷி.

பிரம்மச்சாரியம் கடைபிடிப்பதால் ஏற்படும் பயன்கள்:

 

பிரம்மச்சரியம் கடைபிடிப்பதால் ஏற்படும் பயன்களில் மேம்பட்ட அறிவாற்றல் செயல்பாடு, கவனம் மற்றும் மனநலன், உடல் ஆரோக்கியம், ஆன்மீக முன்னேற்றம் மற்றும் உறவுகளில் ஆழமான தொடர்பை ஏற்படுத்துதல் ஆகியவை அடங்கும். இது ஆற்றலை மற்ற செயல்களுக்குத் திருப்பவும், வாழ்க்கையைப் பற்றிய தெளிவான கண்ணோட்டத்தைப் பெறவும் உதவுகிறது.

மேம்பட்ட மன மற்றும் உடல் ஆரோக்கியம்: பிரம்மச்சரியம் தன்னடக்கத்தையும் மனக் கட்டுப்பாட்டையும் மேம்படுத்துகிறது. இது மன அழுத்தத்தைக் குறைத்து, அறிவாற்றல் செயல்திறனை அதிகரிக்கும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சில சமயங்களில் உடல் ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்படலாம்.

அதிக கவனம்: பாலியல் சார்ந்த விஷயங்களில் இருந்து விலகி இருப்பதால், தனிநபர்கள் தங்கள் ஆற்றலையும் கவனத்தையும் படிப்பு, வேலை, தியானம், யோகா போன்ற மற்ற முக்கிய செயல்களில் செலுத்தலாம்.

ஆழமான உறவுகள்: பாலியல் ரீதியான உறவுகளைத் தாண்டி, மற்றவர்களுடன் வலுவான நட்பையும், ஆழமான தொடர்பையும் உருவாக்கிக் கொள்ள உதவுகிறது.

ஆன்மீக வளர்ச்சி: பிரம்மச்சரியம் என்பது ஆன்மீகப் பயிற்சியின் ஒரு பகுதியாகும், இது ஆன்மா அல்லது பிரம்மத்தை அடைவதற்கான ஒரு வழியாகக் கருதப்படுகிறது.

தெளிவான கண்ணோட்டம்: பாலியல் உறவுகளில் இருந்து விலகி இருப்பதால், தனிநபர்கள் வாழ்க்கையைப் பற்றியும், உறவுகளைப் பற்றியும் தெளிவான கண்ணோட்டத்தைப் பெற முடியும்.


பிரம்மச்சாரியத்தால் ஞானம்:

பிரம்மச்சரியம் என்பது ஞானத்தை அடைவதற்கான ஒரு வழிமுறையாகும். இது மனதை ஒருமுகப்படுத்தவும், உடலையும் மனதையும் கட்டுப்படுத்தவும் உதவுவதால், தியானம் மற்றும் சுய-ஆராய்ச்சிக்கு ஒரு முக்கிய படியாகக் கருதப்படுகிறது. இது ஆற்றலைச் சேமித்து, ஆழமான அறிவைப் பெறுவதற்கும், மனத் தெளிவுக்கும் வழிவகுக்கும்.

இது உடல் ஆற்றலைச் சேமித்து, அதை ஞானம் மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்குத் திருப்பிவிடுகிறது. பிரம்மச்சரியத்தைப் பின்பற்றுவது, தியானத்தில் ஆழ்ந்த நிலையை அடைய உதவுகிறது. பிரம்மச்சரியத்தின் இறுதி இலக்கு என்பது மனதின் உள்ளே இருக்கும் பிரம்ம அறிவை உணர்வதே ஆகும்.


                செந்தில்குமார் 
                செல்9655472931
                நச்சாந்துபட்டி,
                புதுக்கோட்டை மாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக