குண்டலினி
யோகம்
:
குண்டலினி யோகம் என்பது உடல்,
சுவாசம், தியானம் ஆகியவற்றைப் பயன்படுத்தி,
முதுகெலும்பின் அடிப்பகுதியில் இருக்கும் "சுருண்ட பாம்பை"
போன்ற ஆற்றலை எழுப்பும் ஒர் ஆன்மீகப் பயிற்சி. இந்த ஆற்றல் உடலின் சக்கரங்கள் வழியாக மேல்நோக்கிச் சென்று, தலை உச்சியில் உள்ள சக்கரத்தை அடையும்போது ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
"நாம் உணர்ந்து உலகிற்கு உணர்த்துவது எளியமுறைக் குண்டலினி யோகம் என்பதாகும். எளிய முறைக் குண்டலினி என்பது அறிவின் பதிவைக் கொண்ட உயிர்ச் சக்தியை மேலே நோக்கி எழச்செய்து அதிலே ஒன்றி நின்று இயற்கை இரகசியங்களை உணர்ந்து தன்னிலை உணரும் பயிற்சியாகும். உயரே செல்லாமல் கீழ்நோக்கிப் போகவிட்டால் மேல்நிலை அனுபவ உணர்வு பெறுவது போய், தாழ்ந்த உணர்வுகளே தலையெடுத்து ஓங்கும் நிலை ஏற்படும், அதைத்தான் இன்று பெரும்பாலும் காண்கின்றோம். மனிதனின் இந்தப் பழக்கத்தால் அவனின் உயிர்ச்சக்தி கீழ்நோக்கிய இடத்தில், அதாவது மூலாதாரத்தில் தேங்கிக் கிடக்கின்றது. குண்டலித்து உள்ளது. இதனையே குண்டலினி சக்தி என்கிறோம்.
சக்தி என்ற உடன் அது உடல் எங்கும் நிலவுவதாயிற்றே என்ற எண்ணம் எழலாம். எங்கும் இயங்கும் சக்திக்கு ஒர் இயக்க மையம் வேண்டும் அல்லவா? இந்த இயக்க மையமே மூலாதாரம் எனப்படும். எனவே இயக்க மையத்தை முறையாக உசுப்பிவிடும் போது மிகச் சிறப்பாகச் செயல்படுவது இயல்பு. அதைத்தான் எளியமுறை குண்டலினி யோகப்பயிற்சி என்கிறோம். இந்த உயிர்ச்சக்தி உடலின் மற்ற எல்லா இடத்திலும் பரவி இருப்பினும் அதற்கு ஒர் இயக்க மையம் உண்டு. இரத்தம் உடல் முழுவதிலும் பரவி இருந்தாலும் இருதயத்தை இயக்க மையமாகக் கொண்டிருப்பதனைப் போல, காற்று உடல் முழுவதிலும் பரவி இருப்பினும் நுரையீரலை இயக்க மையமாகக் கொண்டிருப்பதனைப் போல, உயிர்ச்சக்திக்கும் இயக்க மையம் இருக்கத்தானே வேண்டும். உயிருக்கு இயக்க மையங்கள் பல உள்ளன. அத்தகைய மையங்கள் உடம்பில் ஆறு இடங்களில் இருப்பதாக மெய்யுணர்வாளர்கள் உணர்ந்து, உணர்த்தி உள்ளனர். அவைகளில் அடிமட்டத்தில் இருக்கும் மையம் மூலாதாரமாகும்.
ஒவ்வொரு மையத்திலும் உயிர்ச்சக்தியை இயக்கிவிட்டால் அதற்கேற்ற பலன் ஏற்படும். மேலும் கீழே இருந்து மேலே போகப்போக பலன் மிகும். இவ்வாறு இயக்கி விடப்படும் உயிர்ச்சக்தியால் உடலில் உள்ள செல்களை ஒழுங்குபடுத்திச் செயல்படுத்த இயலும், உயிர்ச் சக்தியானது உடலின் செல்களுக்கு ஒத்த முறையில் அமையவில்லை என்றால் உடல் நோய்கள், மன நோய்கள் போன்றன ஏற்படும். எனவே, ஆற்றல் மிக்க உயிர்ச்சக்தியைச் சேர்க்கவும், பாதுகாக்கவும் அறிந்திருக்க வேண்டும். இதனைத்தான் ஆன்மீக அறிவு என்கின்றனர். இந்தத் தெளிவையும் பயிற்சியையும் நல்குவதே எளியமுறைக் குண்டலினியோகம். உயிர்ச் சக்தியை உணர்ந்து அதன் இயக்கத்தை நெறிப்படுத்துவதன் மூலம், அதன் படர்க்கை நிலையான மனதையும் சீரமைத்துக் கொள்ள இயலும்.
குண்டலினி
யோகம்
செய்ய
குருவின்
பங்கு
என்ன?
வேதாத்திரி மகரிசி அவர்களால் வடிவமைக்கப்பட்ட எளிய முறை குண்டலினி யோகத்தில் தேர்ந்த ஒரு வல்லவர் விரும்பினால் ஒருவருடைய குண்டலினி சக்தியை ஒரே நிமிடத்தில் புருவ மையத்திற்கு இடம் மாற்றி அமைத்து விடலாம். காந்தத்தைக் கொண்டு இரும்பை இழுப்பது போல தனது தவ ஆற்றலைக் கொண்டு மற்றொருவர் குண்டலினியை எழுப்பி மாற்றி அமைத்து விடலாம். புருவ மையம் வந்த உடனே குண்டலினி இயக்கம் நன்றாக உணரப் பெறும். ஆக்கினை சக்கரம் என்று கூறுவது வழக்கு. அவ்விடத்திலேயே மனதைக் குண்டலினியில் பழக உயிருக்கும் மனதுக்கும் இடையே உள்ள தொடர்பு விளங்கும்.
குண்டலினி யோகம் செய்முறை விளக்கம்:
- இதை தகுந்த ஆசிரியரிடம் பயிற்சி பெறாமல் செய்யக்கூடாது.
- முதலில் மூலபந்த நிலையில் உட்கார வேண்டும். (மல உறுப்பைச் சுருக்குதல்)
- அந்த நிலையிலேயே சுவாசத்தைக் கவனிக்க வேண்டும்.
- பின்னர் சுவாதிசுடானம், மனிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்கினை ஆகிய ஒவ்வொரு சக்கரங்களிலும் எண்ணத்தை நிறுத்தி சுவாசத்தைக் கவனிக்க வேண்டும்.
- கடைசியாக துரியத்தில் எண்ணத்தை நிலைபெறச் செய்ய வேண்டும்.
- உயிர் சக்தியைத் துரியம் அல்லது ஆக்கினையில் நிலைபெறச் செய்வதே குண்டலினி யோகம் எனப்படும்.
குண்டலினி
யோகத்தின் பயன்கள்:
குண்டலினி யோகத்தின் பயன்கள் உடல் நலம், மன அமைதி மற்றும் ஆன்மீக விழிப்புணர்வு ஆகியவற்றை உள்ளடக்கியது. இது உடலை வலுப்படுத்துகிறது, நரம்பு மண்டலத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்துகிறது. மேலும், அறிவாற்றல் செயல்பாடு, உணர்ச்சித் தகுதி மற்றும் ஆன்மீக தொடர்பை வளர்க்க உதவுகிறது.
கருத்தறியான் ஊன்றி இதைக் காணவில்லை
கட- உள் என்ற ஆக்கினையின் குறிப்பை மாற்றி,
கண்டறிந்த நிலைக்கே அப்பெயரைக் கொண்டான்;
கட- உள் என்ற இரு சொல்லை ஒன்றாய்க் கூட்டி
கடவுள் என்றே சொல்லிச் சொல்லி வழக்கமாச்சு;
கட- உள் என்று மனிதன் ஓர் குறிப்புத்தந்தான்
கடவுள் எங்கே? என்று பலர் தேடுகின்றார்.!"
ஆழ்ந் தொடுங்கி ஒழுக்கத்தால் உயர்ந்த போது
அறிவாலே மெய்ப் பொருளை உணரவென்ற
ஆர்வத்தோ டறிவறிய வேட்பும் ஓங்க
அறிவுதனை அகத்தவத்தால் நிலைக்கச் செய்தேன்
ஆதிநிலை மெய்ப்பொருளாய் அதன் இயக்கம்
அறிவாக உணர்ந்து விட்டேன். அப்பேரின்ப
அனுபவத்தை உலகோர்க்குத் தூண்டுகின்றேன்".
வேதாத்திரி மகரிஷி.
செந்தில்குமார்
செல்: 9655472931
நச்சாந்துபட்டி,
புதுக்கோட்டை மாவட்டம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக