எண்ணம் எங்கு பதிவாகிறது:
ஒரு எண்ணம் ஒருமுறை மனதில் தோன்றிவிட்டால் போதும், அது உயிரணுக்களில் பதிவாகி, அவற்றுக்கிடையே பிரதிபலித்து, அந்தப் பிரதிபலிப்பு மீண்டும் பதிவு, மீண்டும் பிரதிபலிப்பு என்றாகி அந்த எண்ணம் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கும். இதுவும் எண்ணத்தின் இயற்கை. எனவே, ஒரு தீய எண்ணத்தை ஒருமுறை உள்ளே விட்டு விட்டால்போதும், மறுபடியும் உதிக்காமல் செய்வது அத்தனை எளிதன்று.
விருந்தாளி - வேண்டாத விருந்தாளியேயாயினும் முகத்தைச் சுளித்தால் போய்விடுவார். எண்ணத்தை விரட்ட விரட்டத்தான் மீண்டும் மீண்டும் வரும். விரட்டும் போது நீங்கள் அந்த எண்ணத்தோடு தான் உறவு கொண்டவாறே இருக்கிறீர்கள் என்பதே இதற்குக் காரணம்.
அதுமட்டும் அன்று வெறும் எண்ணம் மட்டுந்தானே, நான் என்ன செயலிலா இறங்குகிறேன்? என்று ஒரு தீய எண்ணத்திற்கு இடங்கொடுத்து விடக்கூடாது. விளைவஞ்சி, அந்த எண்ணத்தின் வழி நீங்கள் செயலில் இறங்காமல் இருந்து விடலாம். ஆனால், எழுந்த எண்ணம் சும்மா போய்விடாது. ஒத்த தரம் உடைய இன்னொருவர் மனதில் நுழைந்து அது தனக்குச் செயலுருவம் கொடுத்துக் கொண்டு விடும். அத்தகு ஆற்றல் பெற்றது எண்ணம்.
எண்ணத்தின்
சிறப்பு
யாது :
"எண்ணம், சொல், செயல்களெல்லாம் ஒன்றுக்கொன்று
எண்ணமே அனைத்துக்கும் மூலமாகும்;
இன்பதுன்பம் விருப்பு வெறுப்பு உயர்வு தாழ்வு
எண்ணத்தின் நாடகமே, பிரபஞ்சத்தின்
இரகசியங்கள் அனைத்துக்கும் ஈதே பெட்டி.
எண்ணமே இல்லையெனில் ஏதுமில்லை
எண்ணத்துக் கப்பாலும் ஒன்றுமில்லை".
எதிலும்
நன்மையே நோக்கு :
நன்மையே விளைவிக்க நாட்டமா யிரு"
வேதாத்திரி மகரிஷி
பாவப்பதிவுகள்
பதிவுகளின் சின்னம் :
மனிதனுக்குப் பாவப்பதிவுகள் என்று இருந்தால் எப்படி அதைக் கண்டு பிடிப்பது? அதனுடைய அடையாளம் என்ன என்றால் "உள்ளத்திலே களங்கம் உடலிலே நோய்" இதுதான் பாவப் பதிவுகளுடைய அடையாளம்.
சில சமயம் உடலிலுள்ள நோய்கள் வெளியில் தெரியாமல் கூட இருக்கலாம். அதனால் என்னிடம் எந்தப் பாவமும் இல்லை, பதிவும் இல்லை, நோயும் இல்லை என்று எண்ணிக் கொள்ள முடியாது.
ஒரு செடி வளர்கிறது, வளரும் போதே அதில் இவை, பூ, காய், பழம் பார்க்க முடியுமா என்றால் முடியாது. ஆனால், அதிலே எல்லாம் அடங்கியிருக்கிறது. அந்தந்த பருவம் வரும்போது தான் அதன் இலை, பூ, காய் தெரியவரும். அதே போல நம் உடலிலுள்ள பழிச்செயல் பதிவுகள் கூட அந்தந்த காலத்திலே அந்தந்த வயதிலே, அந்தந்தத் தொடர்பு வரும்போது தான் அது துன்பமாகவோ, நன்மையாகவோ தெரியவரும்.
பாவப்பதிவுடைய சின்னம் தான் இந்த உடலே என்றாலும் இத்தகைய வினைகளிலிருந்து விடுதலை பெற்று வினைத்தூய்மை, மனத்தூய்மை பெற்று இறைவனோடு கலக்க வேண்டும் என்ற சிந்தனை பெரும்பாலோருக்கு உள்ளது. அதற்கு மன உறுதியும் விழிப்பு நிலையும் பெறுவதற்கு ஒரு பயிற்சி முறையாகத் தேவை. அதற்கு குண்டலினி யோகமோ அல்லது வேறு ஒரு தியான முறையோ பழகினால் தான் மனவலிவும், விழிப்பு நிலையும், பொறுப்புணர்ச்சியும் ஏற்படும். அதன் பிறகு அன்றாட வாழ்வில் நமது மனம், மொழி செயல்களை நலம் தரும் முறையில் திட்டமிட்டவாறு செயல்படுத்தலாம்.
அன்பின்
அழைப்பு
:
பகுத்தறிவால் விளைவறிந்து எண்ணி எண்ணி
சஞ்சலத்தில் ஆழ்ந்துள்ளம் உருக்கத்தோடு
சன்மார்க்க நிலைகாணத் துடித்து நின்றால்
அஞ்சாதீர் அன்புடனே உமையும் ஏற்போம்
அறிவு நிலையறிவிப்போம் அமைதி காண்பீர்
துஞ்சாமலும் கூட நாடுவோர்க்குத்
துணைபுரிதல் எம் கடமை யாகக்கொண்டோம்"
செந்தில்குமார்
செல்: 9655472931
நச்சாந்துபட்டி,
புதுக்கோட்டை மாவட்டம்.
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக