13 அக்., 2025

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே உள்ள வாழ்க்கை சூழலை தெரியாததால் தான் சிக்கல் ஏற்பாடுகிறது. சிக்கலும் அதற்கான தீர்வும் ஒரு முழுமையான விளக்கம்:

சிக்கல் ஏற்பட காரணம் அதை தீர்ப்பதற்கான விளக்கம்: 

சிக்கல் என்பது ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய அல்லது விரும்பிய நிலையை எட்டத் தடையாக இருக்கும் ஒரு சூழ்நிலை. தீர்வு என்பது அந்த சிக்கலைத் தீர்ப்பதற்கான வழிமுறை அல்லது முடிவு ஆகும். சிக்கல் தீர்வு என்பது சிக்கல்களை அடையாளம் கண்டு, பகுப்பாய்வு செய்து, திறம்பட தீர்ப்பதற்கான ஒரு செயல்முறை ஆகும்.


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பார்வையில் சிக்கலும் தீர்வும்:

வாழ்க்கைச் சிக்கல்கள் பல காரணங்களால் விளைகின்றன. பெரும்பாலும் தன் அறிவில் உள்ள குறைபாடுகள் தான் வாழ்க்கைச் சிக்கல்கள் விளையக் காரணமாகின்றன. எப்படி எனப் பார்க்கலாம்.

அறிவின் குறைபாட்டினால் இயற்கை நியதி தெரிவதில்லை செயல் விளைவுத் தத்துவம் புரிவதில்லை தவறு செய்தால் இன்றோ, நாளையோ, அறிவிற்கோ உடலுக்கோ துன்பம் விளையும் என்பது தெரிவதில்லை இத்தகைய அறியாமையால் செய்த தவறுகளின் காரணமாகப் பெருக்கிக் கொள்ளும் துன்பங்களே வியாதியாகவும், வாழ்க்கைச் சிக்கல்களாகவும் நம்முன் எழுந்து நிற்கின்றன.

அறிவின் குறைபாட்டால் சமுதாய ஒழுங்கமைப்பு விதிகள் புரிவதில்லை பலர் இணைந்த கூட்டுறவு வாழ்வு எனும் சமுதாயத்தின் பராமரிப்புக்கும், காப்புக்கும், மேம்பாட்டுக்குமான விதிமுறைகளை அறியாமல் அல்லது அவமதித்து, அதன் விளைவாகச் சந்திக்கும் துன்பங்கள் தாம் வாழ்க்கைச் சிக்கல்களாக மாறுகின்றன.


பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே உள்ள வாழ்க்கை விளக்கம்:

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் உருளும் வாழ்வு எனும் காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கும் 'நான் யார்' என்று தெரிவதில்லை. என் மூலமென்ன? என் முடிவென்ன? என்பதை விளங்கிக் கொள்வதில்லை. தன்னிலை விளக்கம் பெறவேண்டும் என்று கூடத் தெரிவதில்லை. அதன் விளைவாக, வாழ்வின், பிறவியின் நோக்கமாகிய வீடுபேறு என்ற உன்னதமான லட்சியத்திற்கு இசைவான வகையில் வாழும் முறையை அமைத்துக் கொள்ளாமல், அந்த லட்சியத்திற்கு இடையூறாக, எதிரிடையாக என்னென்ன வழிகள் உண்டோ அப்படியெல்லாம் வாழ்வதால் அந்த முரண்பாடே வாழ்க்கைச் சிக்கல்களாக முளைக்கிறது. தன்னிலை விளக்கம் பெற்று லட்சிய வாழ்வு வாழ்வோம்.


"சிக்கல்களை சந்திக்க போதிய பலமில்லாத
மனநிலையைக் 'கவலை' என்கிறோம்."

 
"முறுக்கேறிய பஞ்சு நூலாகி வலுவடைவது போல
சிந்தனையாலும் உழைப்பாலும் பண்பட்ட
உடலும் உள்ளமும் துன்பங்களைத் தாங்க
வல்லமையுடையவை ஆகின்றன."

                                        வேதாத்திரி மகரிஷி



மனம் தான் மனித வாழ்வின் விளைநிலம் மனம் தான் சிக்கலை தீர்க்கும்:

மனம் தான் மனிதவாழ்வின் விளைநிலம் அதை செம்மையாக வைத்துக் கொண்டால் வாழ்வு வளம் பெறும் மனதை அடக்க நினைத்தால் அலையும் அதை அறிய நினைத்தால் அடங்கும் தவறு செய்வதும் மனம் தான் இனி தவறு செய்யக்கூடாது என்று தீர்மானிப்பதும் மனம்தான் அன்றாடம் மனம் பலவிதமான விஷயங்களில் அலையவிட்டு தடுமாற்றம் பெறுகிறது குறிப்பிட்ட நேரம் தியானம் செய்து மனதை தூய்மைப்படுத்தினால் மனநலம் மேம்பாடு அடையும்.

வாழ்வில் இடையிடையே சிக்கல்கள் ஏற்படுவது இயற்கையே அதைக் கண்டு மிரள்வது அறிவுடைமை ஆகாது அவற்றை எப்படி எதிர்கொள்வது என்று சிந்தித்து தீர்வு காண்பதே சிறந்தது. கவலைப்படுவதால் மட்டுமே சிக்கலில் இருந்து மீளமுடியாது. இன்னும் சொல்லப்போனால் கவலையின்போது பிரச்னை மேலும் பெரிதாகிவிடும். தீர்க்க முடியாத துன்பம் என்ற ஒன்று வாழ்வில் கிடையவே கிடையாது தீர்க்கும் வழிவகைகளை அறியாமல் தான் நாம் துன்பத்தைக் கண்டு அஞ்சுகிறோம் திறக்க முடியாத பூட்டு எதுவுமில்லை அதற்கான சரியான சாவியைத் தேடிப்பிடித்தால் போதும்.


"மனத்தூய்மை வினைத் தூய்மை மனிதன் வாழ்வில்
மகிழ்ச்சி, இனிமை, நிறைவு, அமைதி நல்கும்.
மனம் உயர நேர்மைவழி அகத்தவம் ஆம்.
மற்றும் தன்வினை உயர அறமே ஆகும்."
                                           வேதாத்திரி மகரிஷி.

  • அறியாமை தான் சிக்கல் Ignorance's The Problem
  • அறிவு தான் தீர்வு Knowledge's The Solution
  • நான் யாரென்று தெரிந்தால் வாழ்க்கை தேரும் Know Your self Heal Your Life
  • உண்மை அறிவு வாழ்க்கை மாற்றம் True Wisdom Transforms
  • சிக்கல் தீர்க்கும் சிந்தனை Clarity Over Crisis
                செந்தில்குமார் 
                செல்9655472931
                நச்சாந்துபட்டி,
                புதுக்கோட்டை மாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக