மனிதனிடம் உள்ள தெய்வீகப் புதையல்:
ஒரு குழந்தை தாயின் வயிற்றில் கருவாக உருவாகும் காலத்திலேயே அது தன்னுடைய பெற்றோர்களது பதிவுகளைப் பெற்றுக் கொள்கிறது. அதைப் போலவே, ஒவ்வொரு தாவரத்தினுடைய விதையிலும், அந்தத் தாவரத்தின் எல்லாத் தன்மைகளும், குணங்களும் பதிவாகி அந்த விதையானது செடியாக வளரும் போது அந்தக் குணங்கள் ஒவ்வொன்றாகப் பிரதிபலிக்கின்றன. ஆகையால் தான், நான் கருமையத்தை மனித இனத்துக்குக் கிடைத்த தெய்வீகப் புதையல் என்று சொல்கிறேன்.
அந்தக் கருமையம் தான் பிரபஞ்ச ஒருங்கிணைப்பு ஆற்றலினுடைய நீதிமன்றம் என்றும் சொல்லலாம். அதுமட்டுமல்லாமல், அதே கருமையம் தான் ஒருவரது தற்போதைய வாழ்க்கையில் ஏற்படும் உணர்வுகளுக்கெல்லாம் உற்பத்திக் கூடமாகவும், கருத்தொடராக வந்த பதிவுகளுக்கெல்லாம் களஞ்சியமாகவும் விளங்குகிறது.
ஒவ்வொருவரும் கருமையத்தின் பெருமையைத் தெரிந்து கொள்வதோடு, அதை மதிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். இந்தக் கருமையந்தான் 'ஆன்மா' எனப்படுகின்றது. கருமையத்தின் தன்மைகள் தான் ஒரு சீவனின் முற்பிறவிகள் பலவற்றுக்கும் பின்பிறவிகள் பலவற்றுக்கும் கருத்தொடர் விளைவாகத் தொடர்புற்றிருக்கின்றது.
வாழ்க்கையை வாழ்வதற்கும் இன்பம், அமைதி, பேரின்பம் ஆகியவற்றை அனுபவிப்பதற்கும், அறிவில் முழுமை பெறுவதற்கும் கருமையத்தை எப்போதும் வளமாகவும், தூய்மையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.
சகஜ
நிட்டை:
கரும ஞானக்கருவிகளை இயக்கும் போதும்
புருவமத்தி நினைவோடு இருத்தல் வேண்டும்
புலன்கள் தமை இம்முறையில் பழக்கி விட்டால்
அருவநிலை பூரணத்தால் நான் ஒன்றென்றும்
அனேக உருவங்களாய் நான் பலவே என்றும்
ஒருமை தத்துவம் உணரும் ஆற்றலோடு
உடலில் சுழல்கின்ற இரத்தம் சுத்தமாகும்".
உலகிணைந்த
கல்விமுறை
வேண்டும்;-
கணிக்காமல் மதிக்காமல் ஏற்ற நல்லவினையால்
திருத்திடவோ சீரமைத்தோ உய்ய நினையாமல்
திரும்பவும் அப்பழைய வினைவழி நின்றேவாழ்ந்தால்
வருந்துவதும் வருத்துவதும் அன்றிவளம் ஏது?
வாழ்வுள்லோர் அனைவரும் இவ்வுண்மையை உணர்வோம்
பெருத்துவரும் பழிச்செயல்கள் மாறி உலகுய்ய
பேருலகம் இணைந்த ஆட்சி கல்வி இவை வேண்டும்".
வேதாத்திரி மகரிஷி
மனிதவளக்
கம்ப்யூட்டர்
என்பதன் விளக்கம்:
இறைநிலையினது நெடும் பயணத் திருவிளையாடல்கள்
அனைத்தும் முழுமையாக அலை வடிவில் சுருக்கி
வைத்துள்ள கருவூலம் தான் உயிரினங்களின் உடலின்
மையத்தில் அமைந்துள்ள கருமையம்.
ஒரு பெரிய ஆலமரம் அதன் சிறு வித்தில் அலை வடிவில் சுருங்கியுள்ளது போல, இயற்கையின் பரிணாமச் சரித்திரமானது வான்காந்த அலையில் பதிவாகி, மேலும் மனிதனுடைய சீவகாந்தக் கருமையத்தில் சுருங்கி இருப்பதாக உள்ளது. இந்தக் காலத்தின் விஞ்ஞானப் பேரறிஞர்கள் கண்டுபிடித்து, வழக்கில் வந்துள்ள கம்ப்யூட்டர் கருவியைப் போல, இறை ஆற்றலால் வடிவமைக்கப்பட்டது கருமையம் எனும் Organic Computer காந்தமையம். இயற்கை வளச் சரித்திரத் திரட்டான மனிதவளக் கம்ப்யூட்டர் என்னும் கருமையம் காந்த ஆற்றலின் திணிவு பெற்ற பிரபஞ்சப் பிரதிபலிப்பு கண்ணாடி ஆகும். இத்தகைய இயற்கைச் சுரங்கத்தைத் தன்னகத்தே அடக்கம் பெற்றுள்ள பாக்யசாலியே மனிதன் என்ற திருஉருவம்.
இந்தத் தெய்வீக நிதியை மதிப்போடும் தூய்மை கெடாமலும் காத்து வரவேண்டியது ஆறாவது அறிவின் நிலையில் வாழும் மனிதனுடைய கடமையாகும்.
செந்தில்குமார்
செல்: 9655472931
நச்சாந்துபட்டி,
புதுக்கோட்டை மாவட்டம்.
"This Content Sponsored by SBO Digital Marketing.
Mobile-Based Part-Time Job Opportunity by SBO!
Earn money online by doing simple content publishing and sharing tasks. Here's how:
- Job Type: Mobile-based part-time work
- Work Involves:
- Content publishing
- Content sharing on social media
- Time Required: As little as 1 hour a day
- Earnings: ₹300 or more daily
- Requirements:
- Active Facebook and Instagram account
- Basic knowledge of using mobile and social media
For more details:
WhatsApp your Name and Qualification to 9994104160
a.Online Part Time Jobs from Home
b.Work from Home Jobs Without Investment
c.Freelance Jobs Online for Students
d.Mobile Based Online Jobs
e.Daily Payment Online Jobs
Keyword & Tag: #OnlinePartTimeJob #WorkFromHome #EarnMoneyOnline #PartTimeJob #jobs #jobalerts #withoutinvestmentjob"


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக