14 அக்., 2025

அரூபம் என்றால் என்ன? ஐம்புலனால் அறிய முடியாதது அரூபம்! ஐம்புலன்கள் என்பது என்ன? அரூப்பத்தை உணரத்தான் முடியும் என்றால் எவ்வாறு உணர்வது என்பதன் விளக்கம்:

 


அரூபம் என்பதன் விளக்கம்:

ஐம்புலனால் அறிய முடியாதது அரூபம். ஐம்புலன்களான கண், காது, மூக்கு, நாக்கு, மெய் ஆகியவற்றால் நேரடியாக அறிய முடியாததை "அரூபம்" என்று கூறுவதாகும். உதாரணத்திற்கு, மனம், உயிர் அல்லது இறைவன் இவைகளை நேரடியாக புலன்களால் அறிய முடியாது இவற்றை உணரத்தான் முடியும்.

அரூபம் என்பதன் பொருள் உருவமின்மை, வடிவம் இல்லாதது அல்லது கண்ணுக்குப் புலப்படாதது. இது "உரு" என்ற வார்த்தையின் எதிர்மறை, அதாவது "வடிவம் இல்லாத" என்று பொருள்படும். ஆங்கிலத்தில் "formlessness," "incorporeity" அல்லது "invisibility" போன்ற சொற்களுக்கு இணையாகப் பயன்படுத்தப்படுகிறது.


சத்து சித்து ஆனந்தம் விளக்கம்:

சத்து சித்து ஆனந்தம் அனைத்து மாகி...

    சர்வ வியாபகமாயும் நிறைந்து உள்ள
அத்துவித ஆதிபராசக்தி தன்னை
    ஐயுணர்வில் எதைக் கொண்டும் அறியப் போகா
தத்துவங்கள் அனைத்திற்கும் மூலமான
    தலையாய நம் சக்தி அரூப மன்றோ?
வித்து நிலையை அறிந்து அறிவை ஒன்ற
    விவேகயூகம் உயர்ந்து அதே தானாகும்.

சத்து என்பது பூரணமான பேராதார நிலை (Potential Energy) அதன் எழுச்சி நிலையான அணு முதல் அண்டங்கள் பிண்டங்கள் அனைத்தும் தோற்றம், இயக்கம், மாற்றம் என்ற இயக்கத்தில் உள்ளதால் சித்து எனப்படும். பரிணாம சிறப்பின் உச்சமாகிய உணரும், அறியும் நிலையாகிய அறிவு ஆனந்தம் எனப்படும்.


அரூப நிலையே ஆண்டவன் விளக்கம்:

இம்மூன்று நிலைகளை அடைந்தும் ஆதி நிலையாய் குறைவுபடாமல் பேதப்படாமல் பூரணமாக நிறைந்து எல்லையற்றிருக்கும் அரூப சக்தியைக் கண், காது, மூக்கு, நாக்கு, ஸ்பரிசம் இவற்றில் எதைக் கொண்டும் அறிந்து கொள்ள முடியாது. ஏனெனில் நாமாக நமது மூலமாக இருக்கும் அந்தச் சக்தி அரூபமாக இருப்பதால், உடலியக்கத்திற்கும், அறிவியக்கத்திற்கும் மூலமான விந்துவின் நிலையை அறிந்து, அவ்விடத்தே அறிவை நிறுத்திப் பழகி வரும் தவத்தால் ஏற்படும் ஓர்மை நிலையில் அறிவே அதுவாகி - ஆதியாகி விடும். இதை யூக உணர்வினால் மட்டும் அறிந்துகொள்ள முடியாது.

ஆகாயத்தில் நாம் பார்க்கும் போது கண்களுக்குப் புலனாவது வெட்டவெளி அல்ல. அது அணுவெளி. அணுக்கள் மீது சூரியன் முதலிய கிரகங்களின் ஒளிக்கதிர் படுவதால் ஏற்படும் பிரதிபலிப்பு ஒளி நமக்குத் தோற்றமாக வெளிச்சமாகப் புலனாகிறது. சுத்த வெளி இருள், அகண்டம், எனும் நிலையில் அரூபமானது.



"கதிரவன் காலத்தே காணாத விண்மீன் போல்

புதிர்போன்ற அறிவுநிலை புலன் இயங்குங்கால், தோன்றா."

மகான்களின் பார்வையில் அறிவு ஒன்றே:-

 "புத்தனென்ற பெரியாரும் இயேசுநாதர்

    பொது நோக்கில் கவி புனைந்த திருவள்ளுவர்
உத்தமராம் நபிகள் எனும் உயர்ந்த ஞானி
    உண்மைக்கே உயிரளித்த சாக்ரடீஸ்
நித்தியமாம் நிலையறிந்த ஞானியர்கள்
    நிலஉலக மக்களுக்கு எடுத்துச் சொன்ன அத்தனையும்
சேர்த்து ஒரு தொகுப்பாய்ச் செய்தால்
    அனைத்துமிணைந்து ஒரு கருத்தாய் அமையக்காண்போம் ."

மகரிஷியின் பார்வையில் அகத்தவத்தின் பெருமை:

 

"அகத் தவம் தீவினை யகற்றும்
    அருள் நெறியை இயல்பாக்கும் !
அகத் தவமே இறைவழிப்பாடனைத்திலும்
    ஓர் சிறந்த முறை !
அகத் தவமே உயிர் வழிபாடதனை
    விளக்கும் ஒளியாம் !
அகத் தவமே மதங்களெல்லாம்
    அடைய விரும்பும் முடிவு ! "

                                                                     வேதாத்திரி மகரிஷி

                செந்தில்குமார் 
                செல்9655472931
                நச்சாந்துபட்டி,
                புதுக்கோட்டை மாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக