மனித
இன
வாழ்வில்
இன்றியமையாதது
அமைதி
:
அமைதி மனித இன வாழ்வில் நிறைவைத் தரும் தெய்வீக இன்பம். ஒரு மதிப்புடைய வாழ்க்கைச் செல்வம் அமைதி. அதனால்தான் மக்களில் பெரும்பாலோர் அமைதியை விரும்புகின்றனர். பேரறின்ஞர்கள் அமைதிக்காகவே தங்கள் ஆற்றலை அர்ப்பணிக்கின்றனர்....
எனினும் இன்று நாம் காண்பதென்ன? உலக முழுவதும் நோக்குவோம். எங்குமே அமைதி குலைந்து காணப்படுகின்றது. தனி மனிதரிடத்திலே, சமுதாயத்தின் ஊடே, உலக நாடுகளுக்கிடையே, எங்குமே நிலையான அமைதியில்லை. பிணக்கு, அச்சம், பகை, போர், இவை பெருகிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலை நீடிக்கக்கூடாது. இது மாறித்தான் ஆக வேண்டும். மாற்றித்தான் ஆக வேண்டும். யார் மாற்றுவது? எப்படி மாற்றுவது? இவ்விரு வினாக்களில் யார் என்பதற்கு முதலில் விடை காண்போம். உலகை, மனித குளத்தை, நல்வழியில் நடத்திச் செல்ல வேண்டியது அறிஞர்கள் பொறுப்பு. சிந்தனையாளர்கள், எழுத்துலக மேதைகள், மதத் தலைவர்கள், ஆட்சித் தலைவர்கள், கல்விப் பொறுப்பாளர்கள் சமுதாய நலம் விழையும் செல்வந்தர்கள் இவர்கள் எல்லோருமே மனித குலத்தின் நலன் காக்கும் தகுதி பெற்றவர்கள், பொறுப்புடையவர்கள். உலகில் அமைதி நிலவ இப்பெருமக்கள் தான் மக்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
மனித
வாழ்வை
நிறைவு
செய்யக்கூடிய
இரண்டு துறைகள் எது?
இரண்டாவது வினாவான எப்படி என்பதற்கு விடை காண்போம். மனிதன் வாழ்வை நிறைவு செய்யும் துறைகள் இரண்டு. ஒன்று பொருள்துறை, மற்றது அருள்துறை. விஞ்ஞான வளர்ச்சி உலகில் பொருள் துறையை நிறைவு செய்துவிட்டது. அருள் துறையில் தான் மனித குலம் பின்னடைந்து நிற்கின்றது. ஒவ்வொரு உயிரும் தெய்வத்தின் திருவிளையாட்டரங்கம் என்பதை பெரும்பாலோர் உணர்ந்து கொள்ளவில்லை. அதன் விளைவாக மனிதனே மனிதனுக்குத் துன்பங்களை விளைவித்து வருகிறான். விஞ்ஞான மேன்மயால் பெருகும் பொருள்துறை வளர்ச்சி கூட, மனிதகுல சீரழிவிற்குத் திருப்பம் பெறுகின்றது. அணுகுண்டு முதலிய கொடிய போர்க்கருவிகள் மனித இனத்தையே அழித்து விடுமோ என்று அஞ்ச வேண்டியுள்ளது. இந்த அழிவு சூழ்நிலைகளை மாற்றியாக வேண்டும். இதற்கு நிச்சயமான ஒரே வழி அருள் துறையில் மனித குலம் போதிய வளர்ச்சி காண வேண்டும்.
அமைதி
பெறுவீர்
:
"அறிவு என்பதோ களங்கமற்றது
அனுபவம் தேவைகள் என்னும் இரண்டால்
அதுவே குணங்களாய்க் களங்கமுற்றது;
அறிவு அகம் நோக்கித் தன்னிலை கண்டிட
அகன்று போகும் களங்கம். சுயமாகும்
அன்பு தொண்டு அறம் இயல்பாகிவிடும்
அந்த நிலைநாடி அமைதி பெறுவீரே!. "
அமைதி
இயல்பாகும்:
ஆன்மாவின் வேண்டாத பதிவு நீங்கும்;
இகத்துறவு அத்தனையும் இனிமைநல்கும்
எப்போதும் மன அமைதி இயல்பதாகும்
மிகத்தெளிவு உண்மையுமாம்; இந்த உண்மை
மீறி எழும் பழவினையில் மறைந்துநிற்கும்
தொகுத்துணர்வாம் விரிந்த மனத் தொடர்முயற்சி
சுய நிலையாம் மெய்ப் பொருளாய்த் தன்னைத்தேரும்".
வேதாத்திரி மகரிஷி
நிறைவும்
அமைதியும்:
வாழ்வின் உண்மை என்ன என்று சிந்திப்போம். பிறப்பிற்கு முன்னும் இறப்பிற்கு பின்னும் நமது நிலையென்ன?...வாழ்வு காலத்தை எவ்வாறு அறிவின் விரிந்த நிலையில் கணித்துப் பார்க்கலாம். அறிவை விரிவாக்கிக் கொள்வோம். உண்மை உணர்வு ஏற்படுகின்றது. இந்தப் பேருலகம் ஒரு சத்திரம் போன்றது. பிறக்கும் ஒவ்வொருவரும் உலகம் என்ற சத்திரத்தில் தங்குகிறோம். நாம் குடிபுகும் அறையில் முன்னமே சிலர் இருந்தார்கள். பிறகும் சிலர் வந்து சேர்கிறார்கள். இதுவே குடும்பம். அவரவர்கள் தங்க வேண்டிய காலம் முடிந்தவுடன் புறப்பட்டு இயற்கையோடு கலந்து விடுகிறார்கள். வாழும்போது உடன் வாழ்பவர்கள் நட்பு ஏற்படுகிறது. அது முன்னும் இல்லை - பின்னும் இல்லை. ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்ள இந்த நட்பு பயனாகிறது. வாழத் தெரிந்தவர்கள் இந்த நட்பை வளர்த்து வருகிறார்கள். இன்பமடைகிறார்கள். வாழத் தெரியாதவர்கள் நட்பை குலைத்து துன்பத்தை பெருக்கிக் கொள்கிறார்கள். மேலும் ஒரு உண்மை உணர்வோம்.
பேருலகம் என்ற சத்திரத்திற்கு வரும்போது எவரும் ஏதும் கொண்டு வந்ததில்லை. அதிலிருந்து புறப்பட்டு போகும்போதும் ஏதும் கொண்டு போவதில்லை. மக்கள் பற்று, குடும்பப் பற்று எங்கே? சொத்து பற்றோ பொருள் பற்றோ எங்கே இருக்கிறது; இன்னும் விரிந்து உணர்வோம், எவ்வளவோ பொருட்களைத் தனது என்று உரிமை பாராட்டுகிறோம். இருக்கட்டும். குடல் சீரணிக்கும் அளவுக்கு மேல் உணவை கொள்ள முடியுமா? சுமக்கும் அளவிற்கு மேல் ஆடை உடுத்த முடியுமா? உடல் பருமனுக்கு மேல் நிலத்தை அனுபவிக்க முடியுமா? இவ்வுண்மைகளை விளங்கிக்கொண்டு அடிக்கடி நினைத்து நினைத்து அறிவில் அழுத்தமாகப் பதிவுகொண்டு குடும்பத்தில் அவரவர்கள் கடமைகளை ஆற்றினால் இது பற்றற்ற வாழ்வு ஆகாதா? எந்த சிக்கலையும் எளிதில் தீர்க்கும் கூர்மையும் அறிவுக்கு எப்போதும் இருக்கும். நிறைவும் அமைதியும் இந்த நிலையில் தானே கிடைக்கும்? இதை விடுத்து குடும்பத்தை விட்டு ஓடிப்போகும் கோழைத்தனம் துறவு ஆகுமா? தன்னை வளர்த்த, வாழவைத்த சமுதாயத்தையும் ஏமாற்றிவிட்டு தானும் ஏமாறும் ஒரு இழிவான செயலல்லவா கடமைகளை மறந்து நழுவிப் போய்விடும் செயல்.
செந்தில்குமார்
செல்: 9655472931
நச்சாந்துபட்டி,
புதுக்கோட்டை மாவட்டம்.
Mobile-Based Part-Time Job Opportunity by SBO!
Earn money online by doing simple content publishing and sharing tasks. Here's how:
- Job Type: Mobile-based part-time work
- Work Involves:
- Content publishing
- Content sharing on social media
- Time Required: As little as 1 hour a day
- Earnings: ₹300 or more daily
- Requirements:
- Active Facebook and Instagram account
- Basic knowledge of using mobile and social media
For more details:
WhatsApp your Name and Qualification to 9994104160
a.Online Part Time Jobs from Home
b.Work from Home Jobs Without Investment
c.Freelance Jobs Online for Students
d.Mobile Based Online Jobs
e.Daily Payment Online Jobs
Keyword & Tag: #OnlinePartTimeJob #WorkFromHome #EarnMoneyOnline #PartTimeJob #jobs #jobalerts #withoutinvestmentjob"



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக