உயிர் உணர்வு பெற எளிமைப்படுத்தப்பட்ட குண்டலினி யோகம்:
எல்லோருக்கும் 'உயிர்' இருக்கின்றது. ஆனால் அதைப்பற்றித் தெரிந்து கொண்டவர்கள் எத்தனை பேர்? வளர்ந்து வரும் விஞ்ஞானத்திலே எல்லாப் பொருட்களைப் பற்றியும், ஆராய்ந்து கண்டுபிடித்த விஞ்ஞானிகளாலும் உயிரை அறிய முடியவில்லை. வேதாந்திகள் கூட கடவுள் பற்றிய விளக்கம் எல்லாம் கொடுத்தார்கள். ஆனால் உயிரைப் பற்றிய விளக்கம் மாத்திரம் கொடுக்கவில்லை. அது மறைபொருளாகவே இருக்கிறது.
வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்வார்கள் எனக்குச் சில டாக்டர் நண்பர்கள் தெரியும். அவர்களிடம் பேசும்பொழுது அவர்கள் 'நீங்கள் உயிரைப் பற்றி விளக்கும் பொழுதும், உயிரிலிருந்து வருகின்ற அலையைப் (Wave Theory) பற்றிப் பேசும்பொழுதும், ரொம்பப் பொருத்தமாகவே உள்ளது. ஆனால், அதை எங்களால் நம்ப முடியவில்லையே?, என்றார்கள்.
நீங்கள் எப்படிச் சொல்கிறீர்கள்? என்று கேட்டேன், நாங்கள், மனிதன் உயிருடன் இருக்கும் பொழுதும் சரி, இறந்த பிறகும் சரி, உடலை முழுவதும் அறுத்துப் பார்த்து விட்டோம் எங்கும் உயிரைப் பார்க்க முடியவில்லையே?, என்றார்கள்.
அதற்கு நான், உயிரை மனதைக் (Mind) கொண்டுதான் அறிய வேண்டும். அதற்கு முறையாக அகத்தவப் பயிற்சி (Simplified Kundalini Yoga) செய்தால்தான் விளங்கும் என்று கூறினேன்". அதற்குப் பிறகு பயிற்சி எடுத்த சில டாக்டர்கள், உயிரின் இயக்கம், அதிலிருந்து வரக்கூடிய அலையாகிய காந்த சக்தியின் இயக்கம் (Bio Magnetism), அதை மனம் (Mind) கண்காணிப்பது, இவ்வளவையும் உள்ளே அறிவு (Consciousness) பதிவு செய்து கொள்வது, திருப்பிப் பிரதிபலிப்பது, எல்லாமே உணர்ந்து கொள்ள முடிகிறது என்றார்கள்.
ஆராய்ச்சித் திறனும், மிக நுண்ணிய அறிவும், கூர்ந்து நோக்கும் பண்பும், உள்ள அனைவரும் இதை உணர்ந்து கொள்ளலாம். இந்த விஞ்ஞானக் கல்வியை மெய்விளக்கத் தவத்தின் (Simplified Kundalini Yoga) மூலம் தெரிந்து கொள்ளும்போது மிக சுலபமாகவும், எளிதாகவும் விளங்கிக் கொள்ள முடியும்.
அன்பின்
அழைப்பு
:
"பஞ்சமகா பாதகங்கள் செய்தோரேனும்
சஞ்சலத்தில் ஆழ்ந்துள்ளம் உருக்கத்தோடு
சன்மார்க்க நிலைகாணத் துடித்து நின்றால்
அஞ்சாதீர் அன்புடனே உமையும் ஏற்போம்
அறிவு நிலையறிவிப்போம் அமைதி காண்பீர்
துஞ்சாமலும் கூட நாடுவோர்க்குத்
துணைபுரிதல் எம் கடமை யாகக்கொண்டோம்."
வேதாத்திரி மகரிஷி.
மனதின் செயல்பாடுகள் என்னென்ன? விளக்கம்:
தவறிழைப்பது மனம் இனித்தவறு செய்யக்கூடாது என்று தீர்மானிப்பதும் அதே மனம் தான். தவறு செய்யாத வழியைத் தேர்ந்து ஒழுக வேண்டியதும் மனமே. மனம் இயங்கிக்கொண்டுதான் இருக்கும் அதுதான் அதன் இயல்பு அதுதான் அதன் தன்மை. மனத்தைப் பழைய நிலையிலேயே வைத்துக் கொண்டு புதிய நல்ல வழியில் எப்படிச் செல்ல முடியும்? மனதின் குறைகளைப் போக்கியாக வேண்டும். நல்வழியில் தீர்மானமாக நிற்கும் சுய பலத்தை மனதிற்கு ஊட்டியாக வேண்டும். அதை யார் செய்வது? மனம் தான் தனக்குத் தானே வைத்தியம் செய்து கொள்ள வேண்டும்.
மனிதனும்
தெய்வமும்
எதில்
ஒன்றே விளக்கம்:
இன்பமும் அமைதியும் மனத்திற்குள்ளிருந்து தான் வர வேண்டும். மனதைத் தாழ்த்திக் கொள்வதும் உயர்த்திக் கொள்வதும் மனதினிடம் தான் இருக்கிறது. மனம் தன்னை உயர்த்திக் கொண்டால் இடையறா இன்ப நிலையை அடையலாம். மனம் தன்னையே நன்கு பூரணமாக அறிந்து கொள்ள வேண்டும். அகத்தவத்தின் (Simplified Kundalini Yoga) மூலம் மனம் தனது மூலமான உயிரில் ஒடுங்கிப் பின்னர் உயிரின் மூலமான இறைநிலையை எய்தினால் அறிவாகிறது. அந்நிலையைப் பெற்ற மனதினைக் கொண்ட மனிதனும் தெய்வமும் தரத்தில் ஒன்றே.
உயிர்
அறி
கல்வி:-
"கற்ற கல்வியால் மனிதன் முழு அளவில் பயனைக்
நெற்றிக்கண்-ஆசானால் திறக்கப் பெற்று
நிலையாது சுழலுமனம் உள்ளொடுங்கி;
பற்றற்ற நிலைவரையில் பழகவேண்டும்.
பதிபசு பாசம் நிலைகள் விளக்கமாகும்,
நற்றவத்தால் வாழ்வு வளம் பெருகத் துய்த்து
நாட்டுக்கும் தொண்டாற்றி நலம் விளைவிப்போம்."
வேதாத்திரி மகரிஷி.
செந்தில்குமார்
செல்: 9655472931
நச்சாந்துபட்டி,
புதுக்கோட்டை மாவட்டம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக