கருமையம் என்பதும் அது அமைந்துள்ள பகுதியும்:
உடலுக்கு மூலப்பொருள் வித்து, உயிருக்கு முக்கியப்பொருள் விண்துகள்கள், மனதுக்கு மூலப்பொருள் சீவகாந்தம். இவை மூன்றும் மையம் கொண்டிருப்பது உடலுக்கு மையமான பகுதியாகிய மூலாதாரம். "மூலாதாரம் என்பது தான் மனித உடலுக்கு கருமையம்".
கருமையம் தான் மனிதனின் பெருநிதி, செயலுக்கேற்ற விளைவைத் தரும் தெய்வீக நீதிமன்றம். பிறப்பிற்கும் இறப்பிற்கும், தொடர் பிறப்புகள் பலவற்றுக்கும் இடையே வினைப்பதிவு பெட்டகமாக தொடர்ந்து வரும் மாயத்துணைவன். தெய்வத்தையும், மனிதனையும் இணைத்துக் காட்டும் அறிவின் பேரின்பக்களம்.
இத்தகைய பெருமை வாய்ந்த கருமையத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகள்.
கருமையம்
தூய்மையாக
வழிமுறைகள்.
- பெற்றவர்கள், குரு, ஆட்சித்தலைவர், தெய்வம் இவர்களை மதித்து வாழ்தல்.
- ஒழுக்கம் கடமை ஈகை மூன்றும் இணைந்த அறநெறியை பின்பற்றுதல்.
- அகத்தவப் பயிற்சியை முறையாகச் செய்து வருதல்.
- இரத்தம், காற்று, உயிர், சீவகாந்தம் இவை தடையின்றி ஓடி உடலைக் காத்துக் கொள்ள ஏற்ற உடற்பயிற்சிகளை அளவோடு செய்து வருதல்.
- பெற்றோர்கள், வாழ்க்கைத் துணைவர், பெற்ற குழந்தைகள் இவர்களை பொறுப்போடும் அக்கரையோடும் காத்து உதவி வருதல்.
- இறைநிலை உணர்ந்து அந்நிலையோடு அடிக்கடி ஒன்றி பழகுதல்.
- மனித முயற்சியால் உற்பத்தி செய்த பொருட்களையும் இயற்கை வளத்தையும், பிறர் உபயோகிக்கும் பொருட்களையும் சேதப்படுத்தாது மதித்து நடத்தல்.
- நாம் பார்க்கும் ஒவ்வொரு உடலும் இயற்கை என்ற பேராற்றலால் கட்டப்பட்டிருக்கும் பெருமையை உணர்ந்து உடலுக்குள் அறிவாக விளங்குவது தெய்வத்தின் ஒளியே என்று மதித்து ஒத்தும் உதவியும் வாழ்ந்து வருதல்.
- உள்ளத்தில் பகை வஞ்சம் எதையும் வைத்துக் கொள்ளாமல் மன்னிப்பும், கருணையும் கொண்டு எல்லோருடனும் இன்முகத்தோடும் அன்போடும் பழகுதல்.
- தேசம், மதம், சாதி, இனம், மொழி இவற்றால் மனிதரை வேறுபடுத்திக் காணாமல் எல்லோரும் இயற்கையின் மக்கள் என்ற நினைவில் வாழ்தல்.
நாம் செய்யக் கூடிய செயல்களான “உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு, எண்ணம்” என்ற இவை ஐந்தில் அலட்சியம் செய்யாமலும், மிதமிஞ்சி அனுபவிக்காமலும், முரண்பாடாக அனுபவிக்காலும், இருக்க வேண்டும். அதேபோல ஒவ்வொருவருடைய உடலும் மனமும் இயங்கிக் கொண்டிருப்பதனால், மற்றவர்களுடன் முரண்படாது இருக்க வேண்டும். பிறருடைய உடலுக்குத் துன்பமோ, மனதுக்கு வருத்தமோ - நம்மால் ஏற்படாது இருக்க வேண்டும். இந்த விழிப்பு நிலை தான் இறைவழிபாடு.
காந்த
ஆற்றலின்
திணிவு
கருமையம்:
"கருமையம்" இறைநிலையின் பிரபஞ்ச பரிணாமச் சரித்திரம் முழுமையாக அடக்கம் பெற்றுள்ள தெய்வீகப் பெட்டகம். காந்த ஆற்றலின் திணிவு பெற்ற பிரபஞ்சப் பிரதிபலிப்பு கண்ணாடி. 'கருமையம்' தான் சீவ இனங்களில் 'ஆன்மா' எனப்படுகிறது. கல்வியறிவு பெறாதவர்களும், சிந்திக்கும் திறம் குறைந்தவர்களும் கூடக் கருமையத் தூய்மை பெறுவதற்கு எளியவழி உண்டு. உலக நலம் நாடி, மக்கள் குலம் உய்ய வேண்டும் என்ற பெரு நோக்கத்தில், அத்தகைய வாழ்க்கை நெறி எளியமுறை என்னவெனில்,
- "எவருக்கும் மறைமுகமாகவோ, நேர்முகமாகவோ, மனதுக்கும், உடலுக்கும் துன்பம் இழைக்கக் கூடாது".
- "தேவை உள்ளவர்களுக்கும் துன்பத்தினால் வருந்துபவர்களுக்கும் உடல் ஆற்றல், அறிவு ஆற்றல், பொருட்கள் இவற்றைக் கொண்டு இயன்றவரை உதவி செய்ய வேண்டும்."
என்ற இந்த இரண்டு செயல்களும் ஆழமான கருத்தில், விரிவான மனித சமுதாயத்திற்கு அளப்பரிய நலன்களை விளைவிக்கும்.
பதிவுகளை ஒருபிறவிக் காலத்தில் மாற்றி,
நலமடைந்து மனிதனாகித் தெய்வமாகி உய்ய,
நல்வாய்ப்பு ஆற்றல்இவை கருணையோடு இயற்கை
நிலஉலகில் மனிதரிடம் அமைத்துளது உண்மை.
நேர்முகமாய்க் கருமையத் தூய்மைஉணர்ந் தாற்றி,
பலனடைய அகத்தவத்தால் பரமுணர்ந்து, அறத்தின்
பாதையிலே ஒத்துதவி வாழும்முறை போதும்!"
வேதாத்திரி மகரிஷி.
செந்தில்குமார்
செல்: 9655472931
நச்சாந்துபட்டி,
புதுக்கோட்டை மாவட்டம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக