நிதானமாக
செயல்புரிவோம்
நாம் ஒரு பொருளை அவசரத்தில் தேடும் போது கிடைப்பதில்லை, அது நாம் வைத்த இடத்தில் தான் இருக்கும் ஆனால் அவசரத்தில் நாம் தேடும்போது புலப்படாது.!
இதற்கு எடுத்துக்காட்டாக பழமொழி கூறுவார்கள்..
“அவசரத்தில் கையை விட்டால் அண்டாகுள்ள கூட கை நுழையாது” எதனால் என்று யாரும் யொசிப்பதில்லை
இதற்கு மகரிஷி அவர்களின் விளக்கம்
நாம் ஒரு பொருளை மன அலைச்சுழல் வேகம் குறைவாக இருக்கும் சமயம் ஒரு இடத்தில் வைக்கின்றோம் அதே பொருளை வேறொரு அலைச்சுழல் வேகத்தில் மனம் செயல்படும்போது தேடுகின்றோம். இந்த வித்தியாசத்தினால் நாம் தேடும் பொருள் நமக்கு கிடைப்பதில்லை. அந்த நேரத்தில் வீட்டில் இருக்கும் மற்றொரு நபர் எடுத்துக்கொண்டு வந்து கொடுப்பார். ஏனெனில் அவரின் மன அலைச்சுழல் வெகம் அந்த நேரத்தில் குறைவாக இருப்பதால்.
எனவே தவம் செய்து மன அலைச்சுழல் வேகத்தை குறைத்து நிதானமாக செயல்புரிவோம்.
இறையின்
அரசாட்சி
எந்தப் பொருளிலும் எல்லா இடங்களிலும் ஊடுருவி நிறைந்துள்ளது சர்வ வல்லமையுடைய இறைவெளியே. விண் துகள் சுழற்சி விரைவில் சூழ்ந்துள்ள இருப்பு நிலையாகிய இறைவெளியில் உரசும்போது எழும் அலையே காந்தம். இந்தக் காந்தம் விண் களம், காற்று, அழுத்தக்காற்று, நீர், நிலம் ஆகிய ஐம்பூதங்களில் முறையே அழுத்தமாக, ஒலியாக, ஒளியாக, சுவையாக, மணமாகத் தன்மாற்றம் பெறுகிறது. அதே காந்தமானது சீவ இனங்களில் மனமாக இயங்குகிறது. இறைநிலையிலிருந்து விண்துகளின் உரசலால் எழுந்த காந்த அலை அதே விண்துகள் கூட்டு இயக்கங்களான பஞ்ச பூதங்களில் பஞ்ச தன்மாத்திரைகளாகவும், உயிரினங்களில் மனமாகவும் இயல்பூக்கம் பெற்று இயங்குகிறது. அதே காந்த ஆற்றல்தான் ஒரு சீவன் உண்ணும் உணவை இரசம், இரத்தம், சதை, கொழுப்பு, எலும்பு, மூளை, சுக்கிலம் ஆகிய ஏழு தாதுக்களாக மாற்றி உடலைச் சீராக நடத்துகிறது.
இறை
உணர்வும்
- அற
உணர்வும்
"நாம் செய்கிற செயல் மூலமாகப் பிறருக்கு நன்மை தான் வரவேண்டும், தீமை வரக்கூடாது". "இந்தச் சமுதாயம் நமக்கு ஒவ்வொரு நாளும் எத்தனையோ பொருட்களைக் கொடுத்து நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சமுதாயத்திற்கு எந்த வகையிலும் யாருக்கும் நான் செய்வது துன்பமாக இருக்கக் கூடாது". இந்த இரண்டு நோக்கத்தோடு செயலைச் செய்து வந்தால் தொடக்கத்தில் சிறிது சிரமமாக இருந்தாலும் பழகப் பழக எளிமையாகச் செய்ய இயலும் என்ற அளவிலே வரும். அப்படி வந்துவிட்டதானால் இறை உணர்வும் வந்து விடும், அற உணர்வும் வந்து விடும்.
உண்மை
விளக்கம்:
மனிதனிடம் தன்னிலையை அறியத்தக்க ஆறாவது அறிவு நிலை கூடியுள்ள போதும் அவன் உடல் ஐயுணர்வு உயிர்கள் மூலமே பரிணாம வரிசையில் தோன்றியதால் ஆறாவது அறிவு வள...ர்ச்சி பெறும் வரையில் ஐயுணர்வு மயக்கத்தில் தான் வாழ்ந்து வருகிறான். இந்த நிலையில் உணர்ச்சி மயமாகிப் புரியும் செயல்களின் விளைவாகப் பலவிதச் சிக்கல்களை வாழ்வில் ஏற்படுத்திக் கொண்டு துன்பங்களை அனுபவிக்கின்றான். தனது நோக்கம் குறித்து சிந்திக்கத் தொடங்கும் போது, தனது மூலம் நோக்கி ஆராயும் போது, சிறிது சிறிதாக மயக்க நிலையிலிருந்து விழிப்பு நிலை உண்டாகிறது. முழு விழிப்பு நிலை பெற்று விட்டால், அந்த அறிவுநிலையை ஞானம் என்றும் மெய் விளக்கம் என்றும் கூறுகின்றோம்.
செந்தில்குமார்
செல்: 9655472931
நச்சாந்துபட்டி,
புதுக்கோட்டை மாவட்டம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக