சுத்தவெளி என்பது பிரபஞ்சம்
முழுவதையும் வியாபித்திருக்கும், அமைதியான ஆனால் ஆற்றல்மிக்க, அருட்தந்தை வேதாத்திரி
மகரிஷி போன்ற ஆன்மீகவாதிகளால் விவரிக்கப்பட்ட ஒரு கருத்து ஆகும். இது அண்டங்கள், உயிர்கள்,
பொருட்கள் அனைத்தும் நிறைந்த ஒரு பரந்த, எல்லையற்ற வெளியாகும். இது மோன வெளி, ஞான வெளி
போன்ற பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறது.
சுத்தவெளியில் இயல்பாக உள்ள ஆற்றல்:
சுத்தவெளி ஒன்றுமில்லாதது என்ற கருத்து புலன் உணர்விலேயே மயங்கி வாழ்ந்து கொண்டிருந்த மனிதனுக்கு எளிதாக எட்டவில்லை. உணர்ந்தவர்கள் அதற்கு கொடுக்கும் விளக்கம் சுத்தவெளியானது “வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம்” எனும் நான்கு வளங்களை உடையதாக இருக்கிறது என்பதை விளக்கியுள்ளார்கள்.
சுத்தவெளியின் நான்கு பெரும் வளங்கள் விளக்கம்:
சுத்தவெளியாகிய பெருவெளியில் இருந்து அணு முதலாக அண்டங்கள், உயிரினங்கள் எவ்வளவு தோன்றினாலும் சுத்தவெளியோ, ஆற்றலோ எந்த அளவிலும் குறைவுபடாது இந்த உண்மையை விளக்கும் வார்த்தைதான் “வற்றாயிருப்பு” ஆகும்.
பலகோடி சூரிய குடும்பங்களை உடைய இந்தப் பேரியக்க மண்டலத்தில் உலவும் அனைத்தையும் இதே சுத்தவெளிதான் தாங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் சுத்தவெளியைப் “பேராற்றல்” என்று கூறுகிறோம். இதே வெளியானது அதில் தோன்றிய அணுவின் அலையோடு கூடும் போது காந்தம் என்ற ஒரு பேராற்றலாகி அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம், மனம் என்று தன்மாற்றம் அடைகிறது.
ஆகையால் எந்தப் பொருளிலும் எந்த இயக்கத்திலும் இதே சுத்தவெளிதான் ஊடுருவி நிறைந்து ஒழுங்காற்றலாக, செயல்புரிந்து வருகிறது. இந்த ஒழுங்காற்றல் தான் அறிவு என்று கூறப்படுகின்றது. ஒவ்வொரு தோற்றத்திலும் உருவ அமைப்பு, குணங்கள், காலத்தால், காலம் என்ற அதிர்வால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் அனைத்தும் நிகழ்கின்றன. இதனால் சுத்தவெளி “பேரறிவு” என்று விளக்கப்படுகிறது என்று வேதாத்திரி மகரிஷி குறிப்பிடுகிறார்.
சுத்தவெளியானது தன்னிறுக்க அழுத்தமாக உள்ளதால், அது விட்டு விட்டு அழுத்துகின்ற போது அதுவே நுண்ணதிர்வாகச் செயல்புரிகிறது. இந்த நுண்ணதிர்வு என்ற காலத்தின் நுண்ணிய அலகு கண் சிமிட்டும் நேரமேயாகும். இந்த அதிர்வு இறைநிலையில் அடங்கி இருப்பதனால் எல்லாப் பொருட்களும் தோன்றவும், வளரவும், முடியவும் என்ற செயல்கள் உண்டாகின்றன. இதனால் இறையாற்றலைக் “காலம்” என்று சொல்கிறோம்.
ஆகவே இறையாற்றல் என்ற பெருவெளி வற்றாயிருப்பாக இருக்கிறது. பேராற்றலாக இருக்கிறது. பேரறிவாக இருக்கிறது. காலமாகவும் இருக்கிறது. இவற்றை உணர்ந்து கொள்கின்ற மனித அறிவு முழுமை பெறுகிறது. இதனால் இறையாற்றலைக் காலம் என்று சொல்கிறோம். ஆகவே இறையாற்றல் என்ற பெருவெளி வற்றாயிருப்பாக இருக்கிறது. பேராற்றலாக இருக்கிறது. பேரறிவாக இருக்கிறது. காலமாகவும் இருக்கிறது. இவற்றை உணர்ந்து கொள்கின்ற மனித அறிவு முழுமை பெறுகிறது.
மனிதப்
பிறவியின்
நோக்கம்
என்ன?
மனிதப் பிறவியின் நோக்கம் நீங்கள் எந்த மூலத்திலிருந்து வந்தீர்களோ அந்த மூலத்துடனே ஒன்றாகி, இனி பிறப்பு-இறப்பு சுழலில் மீண்டும் மாட்டாமல் தப்பிப்பது — இதுதான் இந்து மதத்தின் ரிஷிகளும், மகாத்மாக்களும், ஞானிகளும், அவதார புருஷர்களும் நமக்குச் சொல்லித்தருவது. “இந்த மனிதப்பிறவியின் குறிக்கோள் இறைவனை அடைவதே, வேறு என்ன செய்தாலும் அது வியர்த்தம் (வீண்) தான்". வேதாத்திரி மகரிஷியின் எளிய முறை குண்டலினி யோக பயிற்சிகளால் இறையுணர்வையும் அறநெறியையும் உணர்ந்து நாமும் உயர்ந்து மற்றோரையும் உயர வைப்போம்.
இறைநிலை விளக்கம்:
வளம் நான்கும் ஒன்றிணைந்த பெருவெளியே தெய்வமாம்
வற்றாத இந்நான்கும் விண்முதல் ஐம்பூதங்கள்
வான்கோள்கள், உலகம், உயிரினம் ஓரறிவு முதல் ஆறாம்
வற்றாது பெருகிவரும் வளர்ச்சியே பரிணாமம்
வந்தவை அனைத்திலும் சீரியக்கம் இயல்பூக்கம்
வற்றாது பெருகும் பேரண்டத்தில் உயிர்வகையில்
வழுவாத செயல்விளைவு நீதியே கூர்தலறம் உண்மை,உண்மை
வேதாத்திரி மகரிஷி
செந்தில்குமார்
செல்: 9655472931
நச்சாந்துபட்டி,
புதுக்கோட்டை மாவட்டம்.
"This Content Sponsored by SBO Digital Marketing.
Mobile-Based Part-Time Job Opportunity by SBO!
Earn money online by doing simple content publishing and sharing tasks. Here's how:
- Job Type: Mobile-based part-time work
- Work Involves:
- Content publishing
- Content sharing on social media
- Time Required: As little as 1 hour a day
- Earnings: ₹300 or more daily
- Requirements:
- Active Facebook and Instagram account
- Basic knowledge of using mobile and social media
For more details:
WhatsApp your Name and Qualification to 9994104160
a.Online Part Time Jobs from Home
b.Work from Home Jobs Without Investment
c.Freelance Jobs Online for Students
d.Mobile Based Online Jobs
e.Daily Payment Online Jobs
Keyword & Tag: #OnlinePartTimeJob #WorkFromHome #EarnMoneyOnline #PartTimeJob #jobs #jobalerts #withoutinvestmentjob"


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக