பிறவித்
தொடர்பு
என்பதன்
விளக்கம்:
எரியும் விளக்கிலிருந்து தோன்றும் வெப்பமும் வெளிச்சமும், விளக்கை நிறுத்திய உடனே எங்கே போகின்றன? சுற்றிலும் தொடர்பாக உள்ள அணுக்களில் அவ்வெளிச்சம் பிரதிபலித்துக் கொண்டே இருக்கிறது. அணுவில் காந்தமாகிறது. அந்த அணுக்கள் தாங்கும் அளவு போக மீதம் சூனியம் என்ற ஈர்ப்புச் சக்தியில் சேர்ந்துவிடுகிறது. சூன்யமாகி விடுகிறது, வெளிச்சம் தோன்றிக் கொண்டே பிரதிபலித்துக்கொண்டே, சூனியமாகிக் கொண்டே இருக்கிறது.
ஆற்றில் தண்ணீர் வந்துகொண்டே இருக்கிறது; போய்க் கொண்டேயும் இருக்கிறது. அனால் பார்வைக்கு ஆறு நிலையான வடிவமாகத் தெரிந்து கொண்டிருக்கிறது. வரவு நின்றுவிட்டால் பார்க்கும் நீரானது ஓடி மறைந்துவிடும், ஆறு காலியாகத் தெரியும். இது போன்றே தான் விளக்கின் ஒளியும் நிலையானது அல்ல. விளக்கை நிறுத்திய உடனே ஒளி மறைந்துவிடுகிறது. இது போன்றே, உடலில் சுவாச ஓட்டம், இரத்த ஓட்டம் நின்றவுடன், அதனால் உற்பத்தியாகி இயங்கிக்கொண்டேயிருந்த காந்த அலைகளின் உணர்ச்சிச் செயல்பகுதி செயலற்றதாகி விடுகிறது. அலை அடங்கின நீராகும் தன்மை போலவும், நீராவி குளிர்ந்து விட்டால் தண்ணீராகிவிடும் தன்மை போலவும் அறிவு [Consciousness] என்ற உணரும் சக்தியும் ஆதி என்ற மௌன சக்தியாகிவிடுகிறது.
பிறவிகளுக்கு மூல காரணமாக இருப்பது எது?
எழுச்சி, இயக்கம் என்னும் நிலையில் எல்லையுடையதாக இருந்த சக்தி இயக்கம் நிற்க எல்லையற்று நிரவி நிர்விகற்ப நிலையாகிவிடுகிறது. உயிரைப் பற்றி கற்பனைகளாக எழுதப்பட்டவற்றை, சொல்லப்பட்டவற்றை மறந்து, அறிவை நிறுத்தி ஆராய்ந்து பார்த்தால் இது நன்றாக விளங்கும்.
நாத விந்துவின் சேர்க்கையே எல்லாப் பிறவிகளுக்கும் முன் தொடர்பும் பின் தொடர்பும் ஆகும். அதாவது தாய் தகப்பன் முன்பிறவி, மக்கள் பின் பிறவியாகும்.
மனிதனுடய
பிறவியின்
நோக்கம்:
மனிதனுடய பிறவியின் நோக்கம், பிறவிச் சக்கரத்தை நிறுத்தி இறைநிலையோடு இணைந்து விடுவதேயாகும். இதற்கு, அறிவாக இயங்கி வருகின்ற இறைநிலையே மனிதனிடத்தில் ஜீவகாந்தமாக இருப்பதனால், அத்தகைய அறிவைக் கொண்டு நிறைவு பெற வேண்டும். அறிவானது, தூலப் பொருட்களையே, தொடர்பு கொண்டு இருந்ததனால், மறை பொருளாக உள்ள தெய்வநிலை உணர முடியாத மயக்கத்தில் வாழ்க்கையில் ஆழ்ந்து துன்பமுறுகிறது. இந்த மயக்கம் தீர்ந்து தெளிவு பெறுவதற்கு முறையான உளப்பயிற்சியின் மூலம் மன அலைச்சுழல் விரைவைக் குறைத்து இறைநிலையோடு அறிவு ஒன்றுபட வேண்டும். ஆகவே, இறையுணர்வு என்பது மனிதனுக்குத் தேவையாக உள்ளது. இந்த உணர்வை ஒவ்வொரு மனிதனும் நேரடியாக அவனாகவே பெற்றுக் கொள்வது கடினம்.
எனவே, முன்னமே இந்த அறிவின் விளக்கத்தைப் பெற்றவளர்கள் விளக்கிக் காட்டி ஒருவரே, பலரை இறையுணர்வு பெறச் செய்யலாம். அந்த முறையில் இறையுணர்வு பெற்றவர்கள் இதுவரையில் தெளிவாக மொழி வழியிலும், பயிற்சி வழியிலும் கொடுத்துள்ள உண்மை விளக்கங்கள் சுத்த வெளியாகிய இறைநிலையே முடிவான அருட்பேராற்றலான தெய்வம் என்பதாகும்.
சித்திக்கும் உண்மை நெறி"
தத்துவத்தை உணர்ந்தவரே தனையறிய வல்லவர்கள்".
பிள்ளைகளும் பெற்றோரும்:
"பிள்ளைகளைப் பெற்றோர்கள் உடலைவிட்டால்
பிள்ளைகளோடிணைந்துவிடும் இயற்கைநீதி
பெற்றோர்கள் தவம் ஆற்றி அறமும் செய்தால்
பிள்ளைகளை வழிவழியாய் இப்பேராக்கம்
பின் தொடர்ந்து குலக்கொடியைத் தூய்மையாக்கும்
பிள்ளைகளும் பெற்றோரும் வினைத்தொடர் ஆம்
பேரிணைப்பில் எப்போதும் ஒன்றேயாவார்."
பிறவிக் கடல் :
தளைமூன்றும் மனித உயிர் களங்கமாகும்.
வன்முறையில் இவை அறிவைப் புலன்கள் மூலம்
வழுக்கிப் பிறவிக் கடலை நீள வைக்கும்;
உன்வயமாம் அகத்தவத்தால் அகத்தாராய்வால்
உண்மையுணர்ந்து ஆறுகுணத்தைச் சீரமைத்து
இன்முறையில் உயிர்கட்குத் தொன்று ஆற்றி
இறைநிறையில் உனை இணைக்கத்தூய்மை உண்டாம்."
வேதாத்திரி மகரிஷி
செல்: 9655472931
நச்சாந்துபட்டி,
புதுக்கோட்டை மாவட்டம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக