மனிதனின்
சிறப்பு
யாது?
உடலுக்குள் உயிர், உயிருக்குள் அறிவு, அறிவுக்குள் அருட்பேராற்றலின் இயற்கை (மெய்ப்பொருள்) இவ்வாறு ஒன்றில் ஒன்றாக நிலைகொண்டு மனித உரு சிறப்பாக, வியத்தகு முறையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. உடல் குறிப்பிட்ட அளவு பருமனால் எல்லை உடையது. உயிரானது நுண்ணியக்க மூலக்கூறான விண் எனும் நுண் துகள்கள் கோடிக்கணக்கில் ஒன்றிணைந்து ஒரு தொகுப்பாக இயங்கும் ஆற்றல். இந்த உயிரானது உடலுக்குள் சுருங்கவும், உடலுக்குப் புறத்தே தக்க அளவு விரியவும் கூடியது.
அறிவு
என்பது
எதை மையமாகக் கொண்டது அதன் செயல் என்ன?
அறிவு என்பது உயிரை மையமாகக் கொண்ட மெய்ப்பொருள். உடல் மூலம் ஆற்றிய வினைகளினால் பெற்ற அனுபவம், சிந்தனை, கற்பனை இவற்றிற்கேற்ப விரிந்தும், சுருங்கியும் செயல்புரியும் ஆற்றலுடையது. அறிவில் அடங்கியுள்ள இரகசியங்கள் எண்ணி அறிய முடியாதவை. எல்லாம் வல்ல முழுமுதற் பொருளான மெய்ப்பொருள் உயிராற்றலை மையமாகக் கொண்டு தனது அசைவினாலும், உணர்வாலும் ஆற்றிய வினைப்பதிவுகள் அனைத்தும் அடக்கம் பெற்ற கருவூலம் அறிவு ஆகும். இது உயிர்த்துகளின் மையத்தில் தொடங்கி உயிர்த்துகள் தற்சுழற்சியால் விளையும் ஜீவகாந்த சக்தி மூலம் உடல் வரையிலும் மேலும் உடலுக்கு வெளியே புலன்கள் மூலம் உணரும் பொருட்கள் வரையிலும் யூகத்தால் பேரியக்க மண்டலம், அதற்கப்பால் நிலைத்த சுத்தவெளி எனக் கருதப்படும் மெய்ப்பொருள் வரையிலும் விரிந்து சுருங்கும் இயல்புடையது.
எல்லாம் வல்ல மெய்ப்பொருளே சுத்தவெளியாகவும், மெய்ப்பொருளாகவும் விண் முதல் மண் வரையிலான பஞ்ச பூதங்களின் இணைப்பால் ஆகிய பேரியக்க மண்டலத் தோற்றங்கள் அனைத்திலும் இயக்க ஒழுங்காகவும், உயிர்களிடத்தில் புலனுணர்வாகவும், மனிதனிடத்தில் எல்லாமாக இருக்கும், தன் முழுமையை உணரும் பேரறிவாகவும் இருக்கிறது. இந்த நான்கு தத்துவங்களும் ஒன்றிணைந்த மாபெரும் வல்லமையுடைய அறிவிலும், செயலிலும் சிறந்ததோர் உருவம் மனிதன்.
மனிதன்
உண்மை விளக்கம்:
மனிதனிடம் தன்னிலையை அறியத்தக்க ஆறாவது அறிவு நிலை கூடியுள்ள போதும் அவன் உடல் ஐயுணர்வு உயிர்கள் மூலமே பரிணாம வரிசையில் தோன்றியதால் ஆறாவது அறிவு வள...ர்ச்சி பெறும் வரையில் ஐயுணர்வு மயக்கத்தில் தான் வாழ்ந்து வருகிறான். இந்த நிலையில் உணர்ச்சி மயமாகிப் புரியும் செயல்களின் விளைவாகப் பலவிதச் சிக்கல்களை வாழ்வில் ஏற்படுத்திக் கொண்டு துன்பங்களை அனுபவிக்கின்றான். தனது நோக்கம் குறித்து சிந்திக்கத் தொடங்கும் போது, தனது மூலம் நோக்கி ஆராயும் போது, சிறிது சிறிதாக மயக்க நிலையிலிருந்து விழிப்பு நிலை உண்டாகிறது. முழு விழிப்பு நிலை பெற்று விட்டால், அந்த அறிவுநிலையை ஞானம் என்றும் மெய் விளக்கம் என்றும் கூறுகின்றோம்.
மனிதனின் அறிவுக்கு எட்டும் மனம், உயிர், தெய்வநிலை விளக்கம் :
மனம், உயிர்,தெய்வநிலை ஆகியவை மறைபொருள்கள், அவற்றை விஞ்ஞானத்தால் அறிய முடியாது. புலன்களைக் கொண்டு அறிவது விஞ்ஞானம். புலன்களுக்கு உபகருவிகள் துணையைக் கொண்டு அறிவது விஞ்ஞானம். அறிவைக் கொண்டு ஆராய்வது மெய்ஞானம்.
உடலைப்பற்றி நிறைய அறிந்து வைத்திருக்கிறோம். மனதைப் பற்றியும் அறிய வேண்டும். இந்த ஆராய்ச்சி உயிரைப் பற்றி அறிவதில் கொண்டுபோய் விடும். உயிரைப் பற்றிய ஆராய்ச்சியின் முடிவு தன்னிலை விளக்கத்தில் முடியும். இந்த இடமே எல்லா ஆராய்ச்சிகளின் முடிவு. அருள்துறைக்கு உயிர் என்ற சொல்லை மையமாக வைத்து ஆன்மிகம் [ஆங்கிலத்தில் கூட ...... Spirit ....... Spiritualism] என பெயர் வைத்திருக்கிறார்கள்.
தன்னை அறியாதவரை மனதிற்கு அமைதி இல்லை. ஏனெனில் இந்தப் பிறவி எடுத்ததின் நோக்கமே தன்னை அறிவதற்காக எடுக்கப் பெற்றதே. தன்னை அறிய தத்துவ விளக்கங்கள் உதவியாகத் தான் இருக்கும். ஆனால் தன் மூலத்தை தானே எட்டி, உள்ளுணர்வாக, அகக் காட்சியாக அறிய யோகமே துணை செய்யும். அந்த யோகத்தை இக்காலத்திற்கேற்ப எளிமைப்படுத்தப் பெற்றதே எளிய முறை குண்டலினி யோகம் என்னும் மனவளக்கலை.
செந்தில்குமார்
செல்: 9655472931
நச்சாந்துபட்டி,
புதுக்கோட்டை மாவட்டம்.
Mobile-Based Part-Time Job Opportunity by SBO!
Earn money online by doing simple content publishing and sharing tasks. Here's how:
- Job Type: Mobile-based part-time work
- Work Involves:
- Content publishing
- Content sharing on social media
- Time Required: As little as 1 hour a day
- Earnings: ₹300 or more daily
- Requirements:
- Active Facebook and Instagram account
- Basic knowledge of using mobile and social media
For more details:
WhatsApp your Name and Qualification to 9994104160
a.Online Part Time Jobs from Home
b.Work from Home Jobs Without Investment
c.Freelance Jobs Online for Students
d.Mobile Based Online Jobs
e.Daily Payment Online Jobs
Keyword & Tag: #OnlinePartTimeJob #WorkFromHome #EarnMoneyOnline #PartTimeJob #jobs #jobalerts #withoutinvestmentjob"



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக